3-அயன்

3-அயன்
இயக்குனர்கிம் கி-டக்
தயாரிப்பாளர்கிம் கி-டக்
கதைகிம் கி-டக்
நடிப்புஜெ ஹீ
லீ சியோங்-யுனன்
இசையமைப்புSelvian
வெளியீடுஅக்டோபர் 15, 2004 (2004-10-15)
கால நீளம்88 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
ஜப்பான்
மொழிகொரியன்
மொத்த வருவாய்$2,965,315[1][2]

3-அயன் 2004ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். ஜெ ஹீ,லீ சியோங்-யுனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கிம் கி-டகின் வழமையான பாணியைப் போலவே கதாப்பாத்திரங்கள் அதிகம் பேசாமல் நடித்திருந்தனர். [3]

கொரிய மொழியில் Bin-jip என்று பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்பட தலைப்பிற்கு காலியான வீடுகள் என்று பொருள். ஆங்கிலத்தில் 3-அயன் என்ற கோல்ப் மட்டை வகையின் பெயர் இடப்பட்டது.

கதைச் சுருக்கம்

இத்திரைப்படத்திற்கு இரண்டு விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று :கணவனால் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண், தன் வீட்டில் எதிர்பாராவிதமாக வரும் திருடனுடன் காதல் கொள்கிறாள். பல நிகழ்வுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டிலேயே கணவனுக்குத் தெரியாமல் வாழத்தொடங்குகிறார்கள்.

இரண்டு:கணவனின் துன்புருத்தலுக்கு ஆளான பெண், தனக்கான அன்பைப் பெற ஒரு திருடன் கதாப்பாத்திரத்தை கற்பனை செய்து கொள்கிறாள். அவன் மற்ற திருடர்களைப் போன்று பொருட்களைத் திருடாமல் வீடு வீடாக தங்கி வாழ்பவனாகவும். தங்குவதற்கு கூலியாக அங்கிருக்கும் வேலை செய்யாப் பொருட்களை சரிசெய்து, அழுக்குத் துணிகளை துவைப்பவனாகவும் இருப்பான். இவள் வீட்டிற்கு வந்து கணவனை உதைத்து இவளை மீட்டுச் செல்வான். அதையும் மீறி காவல்துறையிடம் பிடிபட்டால், அங்கிருந்து தப்பி இவளுடனே யாரும் அறியாத வண்ணம் மகிழ்வாக வாழ்வான்.

Other Languages
العربية: 3-حديد
čeština: 3-iron
English: 3-Iron
español: Hierro 3
فارسی: خانه خالی
français: Locataires
Bahasa Indonesia: Bin-jip
Nederlands: Bin-jip
ਪੰਜਾਬੀ: 3-ਆਇਰਨ
português: Bin-jip
slovenčina: 3-iron
svenska: Järn 3:an
Türkçe: Boş Ev (film)
中文: 感官樂園