2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது 2000ல் ஆத்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக் ஆகும். இப்போட்டி அதிகாரபூர்வமாக XXVII ஒலிம்பிக் எனப்பட்டது. இப்போட்டிகள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. இப்போட்டியை நடத்தியதின் மூலம் இந்த நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக்கை நடத்திய பெருமையை சிட்னி பெற்றது. இப்போட்டிகளுக்கு அண்ணளவாக 6.6பில்லியன் ஆத்திரேலிய டாலர் செலவாகியது. ஆத்திரேலியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக் இதுவாகும். 1956ல் மெல்பேர்ண் நகரில் ஒலிம்பிக் நடந்தது முதல் தடவையாகும்.


199 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இது 1996 போட்டியில் பங்கேற்றதைவிட இரண்டு அதிகமாகும். கிழக்குத் திமோரில் இருந்து நான்கு பேர் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். பலாவு, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், எரித்திரியா ஆகியவை முதல் முறையாக போட்டியிட்டன. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டதாலும் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாலும் ஆப்கானித்தானுக்கு போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மூன்று தங்க பதக்கத்தையும் இரண்டு வெண்கல பதகத்தையும் வென்ற அமெரிக்காவின் மெரியன் சோன்சு தான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக அக்டோபர் 2007ல் அறிவித்து ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை துறந்தார்[1]. ஒலிம்பிக் ஆணையகம் மரியமின் 5 பதக்கங்களையும் அவர் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கத்தையும் பறிக்கப்பட்ட போதிலும் குழுவினர் பதக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இறுதியாக அவரின் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. மெரியன் சோன்சு இரண்டு ஆண்டுகளுக்கு போட்டியில் ஈடுபட உலக தடகள அமைப்பால் தடைவிதிக்கப்பட்டார்[2].

2008 ஆகத்து 2 அன்று அன்டானியோ பென்னிகுரோவ் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக தெரிவித்ததால் அமெரிக்க ஆண்கள் 400x4 தொடர் ஓட்ட குழுவின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன[3]. இறுதி ஓட்டத்தில் கலந்துகொண்ட நால்வரில் மூவர் போதை மருந்து உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்தது. ஆரம்ப ஓட்டத்தில் கலந்து கொண்ட ஆஞ்சலொ தைலரும் உலக சாதனையாளர் மைக்கேல் ஜான்சனும் குற்றம் சாட்டப்படவில்லை[3]. இது மைக்கேல் ஜான்சனுக்கு ஐந்தாவது தங்கமாகும். அன்டானியோவின் கூற்றால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வதால் இந்த தங்கப்பதக்கத்தை முன்பே தான் திருப்பிதர முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[3]. இப்போட்டியின் தங்கப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

ஏப்பிரல் 28, 2010 அன்று ஒலிம்பிக் ஆணையகம் சீனாவின் பெண்கள் சீருடற்பயிற்சிகள் அணி பெற்ற வெண்கலப்பதக்கத்தை அப்போட்டியில் அனுமதிக்கப்பட்டதை(16 வயது) விட வயது 2 வயது குறைந்தவரை கொண்டு பெறப்பட்டதால் திரும்ப பெற்றது. அப்பதக்கம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது.[4]

சனவரி 16, 2013ல் ஒலிம்பிக் ஆணையகம் லான்சு ஆம்ஸ்டிராங் மிதிவண்டி போட்டியில் பெற்ற வெண்கலப்பதக்கத்தை அவர் ஏமாற்றி பெற்றார் என்று திரும்ப பெற்றது. [5][6]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

1993ம் ஆண்டு மான்டே கார்லோ [7]நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையகத்தின் 101வது அமர்வில் 2000வது ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த நடைபெற்ற தேர்தலில் சிட்னி ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.

2000 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[8]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
சிட்னி  ஆத்திரேலியா 30 30 37 45
பெய்ஜிங்  சீனா 32 37 40 43
மான்செஸ்டர்  ஐக்கிய இராச்சியம் 11 13 11
பெர்லின்  செருமனி 9 9
இசுதான்புல்  துருக்கி 7
Other Languages
Аҧсшәа: Сиднеи 2000
беларуская (тарашкевіца)‎: Летнія Алімпійскія гульні 2000 году
Bahasa Indonesia: Olimpiade Musim Panas 2000
Кыргызча: Сидней 2000
Nāhuatl: Sydney 2000
norsk nynorsk: Sommar-OL 2000
srpskohrvatski / српскохрватски: Olimpijada 2000
Simple English: 2000 Summer Olympics