வேப்பெண்ணெய்

வேப்பம் எண்ணெய்

வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.

வேப்பெண்ணெயில் காணப்படும் கொழுப்பு அமிலங்களின் சராசரி அளவு
பொதுப்பெயர்அமிலம்சேர்வை
ஒமேகா-6லினோலெயிக் அமிலம் 6-16%
ஒமேகா-9ஒலெட்டிக் அமிலம்25-54%
பாமித்திக்கு அமிலம்எக்சடெக்கனோயிக் அமிலம்16-33%
ஸ்டியரிக்கு அமிலம்ஒக்டாடெக்கனோயிக் அமிலம் 9-24%
ஒமேகா-3ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்?%
பாமித்தலெயிக்கு அமிலம்9-எக்சாடெக்கனோயிக்கு அமிலம்?%
Other Languages
العربية: زيت نيم
Deutsch: Niemöl
English: Neem oil
español: Aceite de nim
français: Huile de neem
עברית: שמן נים
മലയാളം: വേപ്പെണ്ണ
తెలుగు: వేప నూనె