விஷ்ணு

விஷ்ணு
Bhagavan Vishnu.jpg
விஷ்ணு-நான்கு கரங்களுடன்
அதிபதிகாத்தல்
தேவநாகரிविष्णु
சமசுகிருதம்viṣṇu
வகைமும்மூர்த்திகள்
இடம்வைகுந்தம்
ஆயுதம்சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம்
துணைஇலக்குமி
பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை
தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு உலகைக் காப்பவராக இருக்கிறார்.

விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

நாராயணன், வாசுதேவன், ஜகன்நாதர், விதோபர், ஹரி என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோலுடன் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.[1]

விஷ்ணு சிவ பூஜை செய்து சுதர்சன சக்கிரம் பெற முயன்றபோது தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகிறார்.[2]இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது.[3]சிவன் தனது இடப்புறத்திலிருந்து காக்கும் பணிபுரிய விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து படைக்கும் பணிபுரிய பிரம்மரையும் தோற்றுவித்தாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகின்றார். அழிக்கும் கடவுள் ருத்திரர் பிரம்மரின் மகனாக உதித்தார் என்று வாயு புராணம் கூறுகிறது.

இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.[4]

Other Languages
Afrikaans: Wisjnoe
Alemannisch: Vishnu
aragonés: Viṣṇu
العربية: فيشنو
অসমীয়া: বিষ্ণু
asturianu: Visnú
беларуская: Вішну
български: Вишну
भोजपुरी: विष्णु
Bahasa Banjar: Batara Bisnu
বাংলা: বিষ্ণু
བོད་ཡིག: ཁྱབ་​འཇུག
brezhoneg: Vichnou
bosanski: Višnu
català: Vixnu
کوردی: ڤیشنو
čeština: Višnu
Cymraeg: Vishnu
dansk: Vishnu
Deutsch: Vishnu
डोटेली: विष्णु
Ελληνικά: Βισνού
English: Vishnu
Esperanto: Viŝnuo
español: Vishnu
eesti: Višnu
euskara: Vishnu
فارسی: ویشنو
suomi: Vishnu
Võro: Višnu
français: Vishnou
galego: Visnú
ગુજરાતી: વિષ્ણુ
עברית: וישנו
हिन्दी: विष्णु
hrvatski: Višnu
magyar: Visnu
հայերեն: Վիշնու
interlingua: Vishnu
Bahasa Indonesia: Wisnu
íslenska: Visnjú
italiano: Viṣṇu
日本語: ヴィシュヌ
Basa Jawa: Wisnu
ქართული: ვიშნუ
Kabɩyɛ: Vishnou
қазақша: Вишну
ភាសាខ្មែរ: ព្រះវិស្ណុ
ಕನ್ನಡ: ವಿಷ್ಣು
한국어: 비슈누
Latina: Vishnu
lietuvių: Višnus
latviešu: Višnu
олык марий: Вишну
македонски: Вишну
മലയാളം: വിഷ്ണു
मराठी: विष्णु
Bahasa Melayu: Maha Vishnu
မြန်မာဘာသာ: ဗိဿနိုးနတ်
Plattdüütsch: Wischnu
नेपाली: विष्णु
Nederlands: Vishnoe
norsk nynorsk: Visjnu
norsk: Vishnu
occitan: Vishnó
ଓଡ଼ିଆ: ବିଷ୍ଣୁ
ਪੰਜਾਬੀ: ਵਿਸ਼ਨੂੰ
polski: Wisznu
پنجابی: وشنو
português: Vixnu
română: Vișnu
русский: Вишну
संस्कृतम्: विष्णुः
Scots: Vishnu
srpskohrvatski / српскохрватски: Višnu
සිංහල: විෂ්ණු
Simple English: Vishnu
slovenčina: Višnu
slovenščina: Višnu
српски / srpski: Вишну
svenska: Vishnu
తెలుగు: విష్ణువు
тоҷикӣ: Вишну
Tagalog: Vishnu
Türkçe: Vişnu
українська: Вішну
اردو: وشنو
oʻzbekcha/ўзбекча: Vishnu
Tiếng Việt: Vishnu
Winaray: Vishnu
吴语: 毗湿奴
მარგალური: ვიშნუ
中文: 毗湿奴
Bân-lâm-gú: Vishnu
粵語: 毗濕奴