வில்லியம் கேரிவில்லியம் கேரி
William Carey.jpg
இந்தியாவுக்கான கிறிஸ்தவ போதகர்கள்
பிறப்பு ஆகஸ்ட் 17, 1761
பவுலேர்ஸ்புரி, இங்கிலாந்து
இறப்பு ஜூன் 9, 1834
செராம்பூர், இந்தியா

வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக (இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் டச்சுக் காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனரியாக பணியாற்றி வந்தவர், இவர் விவிலியத்தை பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷயரில் பவுலஸ்புரி என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்க மொழி]]களை தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.

தமது தந்தையின் விருப்பத்தின்படி, பதினான்காவது வயதில் அருகே உள்ள ஹெக்கில்டன் என்னும் கிராமத்தில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். இவரது எஜமானன் கிளார்க் நிக்கோலஸ் அவரைப்போலவே ஆலயம் செல்லுபவராகவே காணப்பட்டார். அவரது சக மாணவராக இருந்த ஜோன் வார் என்பவர் கடமைக்காக மாத்திரம் ஆலயம் செல்வதை வெறுப்பவர். அவரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகிய கேரி ஹெக்கில்டன்னில் ஒரு சிறிய குழு கூடுகை(Congregational) திருச்சபையை ஆரம்பித்தார். நிக்கோலஸ் கேரிக்கு, தனது கிராமத்தில் கல்லூரி சென்று பயின்ற ஒருவர் மூலம் கிரேக்கம் கற்றுக்கொடுத்தார்.

1779ல் நிக்கோலஸ் இறந்த பிறகு, தாமஸ் ஓல்ட் என்ற உள்ளூர் செருப்புத் தைக்கும் தொழிளாளியிடம் வேலைக்குச் சேர்ந்தார். ஓல்டின் மருமகள் டோரதி பிளகெட்டை 1781ம் ஆண்டு பிட்டின்பர்கில் உள்ள யோவான் ஸ்நானகன் திருச்சபையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

Other Languages