வார்டு கன்னிங்காம்

வார்டு கன்னிங்காம்
Cunningham in his late 50s or early 60s smiling into the camera
கன்னிங்காம், போர்ட்லன்ட் (ஒரிகன்), 2011.
பிறப்புமே 26, 1949 (1949-05-26) (அகவை 69)
மெக்சிகன் நகரம், இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடு[1]
தேசியம்அமெரிக்கர்
பணிகணினி நிரலர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1984 தொடக்கம்
அறியப்படுவதுவிக்கியை முதலில் நடைமுறைபடுத்தியவர் (WikiWikiWeb)
Call-signK9OX

விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் (பிறப்பு - மே, 26, 1949) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார்.

இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன இணையத்தளத்திலே, மார்ச்சு, 25 ந்தேதியன்று, 1995 ஆண்டில் நிறுவினார்.[2]

'மிகச்சிறிதான ஒன்றிய விக்கியை'(Smallest Federated Wiki[3]) உருவாக்குவதே, இவரது தற்போதைய திட்டம் ஆகும். இதன் மூலம் ஒரு பயனர் மேலும் எளிதாக விக்கித்திட்டப்பக்கங்களை பயன்படுத்த முடியும்.

இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும்.[4]

ஊடகங்கள்

Other Languages