ரென் தொலைக்காட்சி

ரென் தொலைக்காட்சி
5-й логотип РЕН ТВ.svg
ஒளிபரப்பு தொடக்கம்1 சனவரி 1997
உரிமையாளர்100% — நாட்டு ஊடகக் குழு
பட வடிவம்16:9 (576i, SDTV)
பார்வையாளர் பங்கு5.3% (9 மே 2011, TNS Russia)
நாடுஉருசியா
மொழிஉருசிய மொழி
ஒளிபரப்பாகும் நாடுகள்சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம்
தலைமையகம்17/1 Zubovsky Boulevard, மாஸ்கோ, உருசியா
வலைத்தளம்ren.tv
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
Russian and CIS-wide analog and digital broadcastVHF Channel 9
செயற்கைக்கோள்
NTV PlusVarious
மின் இணைப்பான்
Natsionalnye Kabelnye SetiVarious

ரென் தொலைக்காட்சி (REN TV, உருசிய மொழியில்: РЕН ТВ) உருசியாவில் இருக்கும் மிகப்பெரிய தனியார் நடுவண் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றாகும். இரினா லெஸ்னெவ்ஸ்கயா, அவரின் மகன் டிமிட்ரி லெஸ்னெவ்ஸ்கி ஆகியோரால் நிறுவப்பட்ட ரென் தொலைக்காட்சி மற்ற உருசியாத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தரும் நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சிகள் 1 சனவரி 1997 முதல் ஒளிபரப்பாகி வருகின்றன. இளம், நடு அகவையில் இருக்கும் நகரத் தொழிலாளர் தான் இத்தொலைக்காட்சியின் இலக்கு பார்வையாளர். இந்த அலைவரிசை குறிப்பாக 18 முதல் 45 அகவைக்குட்பட்ட பார்வையாளர்களை மையமாக வைத்து இயங்கினாலும், இலக்கு பார்வையாளர்களின் முழுக் குடும்பத்தையும் மனதில் கொண்டு இன்னும் பரந்துபட்ட வகை மக்களுக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. உருசியத் தொலைக்காட்சி அகாதமி வழங்கும் TEFI விருதுகள் பதின்மூன்றினை இத்தொலைக்காட்சி வென்றுள்ளது.

ரென் தொலைக்காட்சியின் வலைப்பின்னல் உருசியா, சுதந்திர அரசுகளின் காமன்வெல்த்தில் (CIS) இருக்கும் 406 சுதந்திரமான ஒளிபரப்பு நிறுவனங்களின் தொகுப்பு ஆகும். மேற்கில் கலினின்கிராட் தெடங்கி கிழக்கில் யுஸ்னோ-ஸகாலின்ஸ்க் வரையிலும் உருசியாவில் 718 நகரங்கள், பெருநகரங்களில் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் கிடைக்க பெறுகின்றன. 113.5 மில்லியன் பார்வையாளர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது (அதிகாரப்பூர்வமாய் 120 மில்லியன் பார்வையாளர்)[1]. இதில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் மாஸ்கோ நகரம், மாஸ்கோ ஓப்ளாஸ்டில் (மாஸ்கோ பிராந்தியம்) வசிப்பவராவர். CIS, பால்டிக் அரசுகளில் ரென் தொலைக்காட்சி 10 ஒளிபரப்பு இணைப்புகளுடனும் 19 கேபிள் ஆபரேட்டர்களுடனும் இணைந்து வேலை செய்கிறது; 181 நகரங்கள் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசையைப் பெற முடியும்.

ரென் தொலைக்காட்சி ஒன்று தான் ரஷ்யாவில் “சுதந்திர ஊடகத்தின் இறுதி பாதுகாவலர்களில் ஒன்றாய்” எஞ்சியிருப்பதாக பல அரசியல் எதிர்க்கட்சிக் குழுக்களும் கருதுகின்றன. இந்த அலைவரிசை மட்டும் தான் சோசலிஸ்ட் மற்றும் தாராளவாத குழுக்களின் கூட்டங்களை உடனுக்குடன் ஒளிபரப்புகிற, அத்துடன் பிரதானமான எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து பேட்டிகளை ஒளிபரப்புகிற ஒரே அலைவரிசையாக இருக்கிறது.

Other Languages
English: REN TV
español: REN TV
eesti: Ren TV
suomi: Ren TV
français: REN
עברית: REN TV
հայերեն: ՌԵՆ ՏՎ
português: REN TV
română: REN TV
русский: РЕН ТВ
українська: РЕН ТВ
vepsän kel’: REN TV
Tiếng Việt: REN-TV