முடி

முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்

முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித் தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெரட்டின் ( நகமியம்) என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித சமூகங்களில் பெண்கள் தலைமுடியை நீளமாகவும், ஆண்கள் குட்டையாகவும் வளர்க்கின்றார்கள்.

மீள்பார்வை

இருநூறு மடங்கு உருப்பெருக்கத்தில் மனித மயிரிழை

முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:

  • முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்வுறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை காயமேற்பட்டப்பின் தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது [1].
  • இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.

மயிரிழைகளின் வடிவம் பல அடுக்குகளாலானது:

  • கூரை ஓடுகளைப் போல ஒன்றின்மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள செல்களின் பல அடுக்குகளைக் கொண்டப் புறத்தோல் (cuticle)
  • பிரம்பு போன்ற (தோராயமாக) கெரட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex)
  • மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla) [2]
Other Languages
Afrikaans: Haar
አማርኛ: ፀጉር
aragonés: Pelo
العربية: شعر (تشريح)
ܐܪܡܝܐ: ܡܙܬܐ
asturianu: Pelo
авар: Рас
Aymar aru: Ñik'uta
azərbaycanca: Saç
башҡортса: Сәс
беларуская: Валасы
беларуская (тарашкевіца)‎: Валасы
български: Коса
বাংলা: চুল
brezhoneg: Blev
bosanski: Dlaka
català: Pèl
Mìng-dĕ̤ng-ngṳ̄: Tàu-huók
ᏣᎳᎩ: ᎤᏍᏗᏰᎬ
کوردی: موو
čeština: Chlup (zoologie)
Cymraeg: Blew
dansk: Hår
Deutsch: Haar
Zazaki: Porr
Ελληνικά: Τρίχα
English: Hair
Esperanto: Haro
español: Pelo
euskara: Ile
فارسی: مو
suomi: Karva
Võro: Karv
français: Poil
Gaeilge: Gruaig
Gàidhlig: Falt
galego: Cabelo
Avañe'ẽ: Tague
गोंयची कोंकणी / Gõychi Konknni: केंस
ગુજરાતી: વાળ
עברית: שיער
हिन्दी: बाल
hrvatski: Kosa
Kreyòl ayisyen: Cheve
Հայերեն: Մազեր
Bahasa Indonesia: Rambut
Iñupiak: Nuyaq
Ido: Pilo
íslenska: Hár
italiano: Pelo
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᓄᔭᐃᑦ
日本語: 毛 (動物)
Basa Jawa: Rambut
ქართული: თმა
қазақша: Шаш
ಕನ್ನಡ: ಕೂದಲು
한국어:
коми: Си
Кыргызча: Чач
Latina: Pilus
лакку: ЧӀарарду
lietuvių: Plaukas
latviešu: Mati
മലയാളം: മുടി
मराठी: केस
Bahasa Melayu: Rambut
မြန်မာဘာသာ: ဆံပင်
مازِرونی: می
Nāhuatl: Tzontli
Napulitano: Pire (anatumía)
नेपाली: कपाल
नेपाल भाषा: सँ (म्ह)
Nederlands: Haar (zoogdier)
norsk nynorsk: Hår
norsk: Hår
ଓଡ଼ିଆ: କେଶ
ਪੰਜਾਬੀ: ਵਾਲ
Pangasinan: Buek
Kapampangan: Buak
पालि: केसा
polski: Włos
پنجابی: بال
português: Pelo
Runa Simi: Chukcha
română: Păr
русский: Волосы
संस्कृतम्: केशः
саха тыла: Баттах
sicilianu: Pilu
Scots: Hair
سنڌي: وار
srpskohrvatski / српскохрватски: Kosa
Simple English: Hair
slovenčina: Chlp (cicavce)
slovenščina: Las
chiShona: Vhudzi
Soomaaliga: Tin
српски / srpski: Коса
Basa Sunda: Buuk
svenska: Hår
Kiswahili: Nywele
తెలుగు: వెంట్రుక
тоҷикӣ: Мӯй
Tagalog: Buhok
Türkçe: Kıl
тыва дыл: Чаъш
ئۇيغۇرچە / Uyghurche: چاچ
українська: Волосся
اردو: بال
vèneto: Caveji
Tiếng Việt: Lông
walon: Poyaedje
Winaray: Buhok
isiXhosa: Iinwele
მარგალური: თუმა
ייִדיש: האר
Yorùbá: Irun
中文: 毛发
Bân-lâm-gú: Mô͘
粵語: