மீன்

மீன்கள்

(எ.கா) கட்லா

Catla catla.JPG
இளம் கட்லா மீன்.
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கினம்
தொகுதி:முதுகுநாணி
வகுப்பு:முள்ளெழும்புத் துடுப்பி
வரிசை:முதுகுத்துடுப்பி
குடும்பம்:கெண்டைமீன்கள்
பேரினம்:கட்லா
அக்கில்லே வேலன்சியன்னஸ், 1844
இனம்:க. கட்லா
இருசொற் பெயரீடு
கட்லா கட்லா
(ஃபிரான்சிஸ் ஹெமில்டன், 1822)
வேறு பெயர்கள்

ஜிபெலியன் கட்லா
சைப்ரினஸ் கட்லா

மீன் (fish) நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரையறை செய்யலாம். மீன்களின் முன், பின் புறங்கள் குவிந்த அமைப்புடையவை. உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.

பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுசூழலுக்கு ஏற்ப அதன் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளுதல். ஆனாலும் வெள்ளை சுறா, டுனா போன்ற சில பெரிய விலங்குகளும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.[1][2]

இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன.

நீராதாரம் பெரும்பான்மையான மீனின் வாழிடங்களாகும். மீனினங்கள் பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில வகைகள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்பவை. உயரமான மலை நீரோடைகள் (எ.கா., கேர், கட்ஜன்) இருந்து தாழ்ந்த, ஆழ்ந்த கடல்களின் ஆழத்திலும் (எ.கா., கல்பர்ஸ் (குள்ள மீனினம், தூண்டி மீன்), என கிட்டத்தட்ட அனைத்து நீர் சூழல்களிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 33,100 மீன் சிற்றினங்கள், மற்ற எந்த ஒரு முதுகெலும்பிகளிலும் இல்லாத அளவிற்கு உயிரினப்பல்வகைமையைக் கொண்டுள்ளன.[3]

உலகப்பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். மேலும் உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக உருவெடுத்துள்ளது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாக, சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறு, போன்றவற்றில் முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது.

பரிணாமம் (அ) கூர்ப்பு

வகைப்பாட்டியலில் மீன் ஒரு ஒற்றைத்தொகுதியைச் சார்ந்து முன்னிலைப்படுத்துவதில்லை, ஏனெனில் மீனின் பரிணாம வளர்ச்சி ஒரே நிகழ்வாகக் கொள்ள இயலாது. முதுகெலும்பிலிகளிலிருந்து முதுகெலும்புள்ளவைகளின் கூர்ப்பு நுழைவாயிலாக மீனினம் விளங்குகின்றன. இவை முதுகெலும்பிகளின் ஆதிவுயிரினமாகக் கொள்ளப்படுகிறது.[4]

புதைபடிவ பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து மீனினத்தின் ஆதிவுயிரி, சிறிய அளவில், கவசம் கொண்டு, தாடைகளற்றதாக இருந்தது. இதற்கு ஆஸ்ட்ரகோடர்ம்ஸ் என்று பெயர். ஆனால் தற்போது தாடையற்ற பல்வேறு மீனினங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. லாம்பயர்ஸ் தாடையுள்ள மீன்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறது. முதல் தாடையுள்ள மீனினம் பிளாக்கோடெர்மி படிமத்திலிருந்து பெறப்பட்டது.

தாடையுள்ள முதுகெலும்பிகளின் பன்முகத்தன்மை அவற்றின் பரிணாமத் தேவை, நன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மீன் தாடையின் பரிணாம வளர்ச்சி உணவு விழுங்கல், வேட்டையாடல், கடிக்கும் ஆற்றல், மேம்பட்ட சுவாசம், அல்லது அதன் காரணிகளின் கலவையாக இருந்திருக்கலாம்.

மீன் ஒரு பவளப்பாறை போன்று பாம்பு வடிவ உயிரினத்திலிருந்து பரிணமித்து உருவாகியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஏனெனில் மீனின் இளவுயிரி தோற்றத்தில் ஆதிமீன் இனத்தைப் போன்றது. மீன்களின் ஆதிவுயிரிகள் இளவுயிரியைப் போன்றே இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இன்றும் சில கடற்பீச்சிகளின் (சீ-ஸ்கர்ட்ஸ்) தோற்றம் முதிருயிரி, இளவுயிரிலிருந்து எவ்வித மற்றமும் அடைவதில்லை.

தாடையற்ற மீன்கள்

ஹைபரார்சியா (லாம்பயர் மீன்கள்)Nejonöga, Iduns kokbok.jpg?† யூகோனோலோன்டா (விலாங்கு போன்ற மீன்வகை)


unnamed

† தெரஸ்பிடோமார்ஃபி (தாடையற்ற மீன்கள்)Astraspis desiderata.png?† திலோடொன்டி (தாடையற்ற செதிலுள்ள மீன்கள்)Sphenonectris turnernae white background.jpg


unnamed

?† அனாஸ்பிடா (தாடையற்ற ஆதி லாம்பயர் மீன்கள்)Pharyngolepis2.png


unnamed

† காலிஸ்பிடா (தாடையற்ற எலுப்புச்சட்டக மீன்கள்)


unnamed

?† பிடுரியாஸ்பிடா (பெரிய முன்னீட்டி முற்கொண்ட கவசத்துடன் கூடிய தாடையற்ற மீனினம்)† ஆஸ்டியோஸ்ட்ரெசி (தாடையற்ற வலுவான எலுப்புச்சட்டக மீன்கள்)Cephalaspis.pngநதொஸ்டொமெட்டா → தொடர்ச்சி கீழ்வருமாறு
தாடையுள்ள மீன்கள்

† பிளாகோடெர்மி (கவச மீன்கள்)Dunkleosteus intermedius.jpg


unnamed

அகாந்தொடியன்ஸ் and கோண்ட்ரித்யஸ் (குருத்தெலும்பு மீன்கள்)Acanthodes BW.jpgCarcharodon carcharias drawing.jpg


ஆஸ்டெய்தியஸ் எலும்பு மீன்கள்

அக்டினொடெரிஜீ கதிர்முள் மீன்கள் <தற்போதைய அதிகபட்ச மீனினங்கள் இவ்வகையின Cyprinus carpio3.jpg


சார்கோப்டெரிஜீ கதுப்புத்துடுப்பு மீன்கள்

?† ஆனிகோடொன்டிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் OnychodusDB15 flipped.jpgஆக்டினிஸ்டியா (சீலகாந்து மீன்கள்)Coelacanth flipped.png


unnamed

† போரோலுபிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் Reconstruction of Porolepis sp flipped.jpgதிப்னாய் (நுரையீரல் சுவாச மீன்கள்)Protopterus dolloi Boulenger.jpgunnamed

† ரைசோடோன்டிடே (வேட்டையாடும் கதுப்புத்துடுப்பு மீன்கள்)Gooloogongia loomesi reconstruction.jpg
† ட்ரிஸ்டிகொப்டெரிடே (நாற்காலுருக்கொண்டவை)Elginerpeton BW.jpgடெட்ராபோடா (நாற்காலிகள்)Deutschlands Amphibien und Reptilien (Salamandra salamdra).jpg
Other Languages
Аҧсшәа: Аҧсыӡ
Acèh: Eungkôt
Afrikaans: Vis
Alemannisch: Fische
አማርኛ: ዓሣ
aragonés: Pisces
Ænglisc: Fisc
العربية: سمك
مصرى: سمك
অসমীয়া: মাছ
asturianu: Pexe
Atikamekw: Names
Aymar aru: Challwa
azərbaycanca: Balıqlar
تۆرکجه: بالیقلار
башҡортса: Балыҡтар
Boarisch: Fiisch
žemaitėška: Žovis
беларуская: Рыбы
беларуская (тарашкевіца)‎: Рыбы
български: Риба
Bislama: Fis
Bahasa Banjar: Iwak
বাংলা: মাছ
བོད་ཡིག: ཉ།
brezhoneg: Pesk
bosanski: Ribe
буряад: Загаһан
català: Peix
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ngṳ̀
Cebuano: Isda
ᏣᎳᎩ: ᎠᏣᏗ
کوردی: ماسی
Nēhiyawēwin / ᓀᐦᐃᔭᐍᐏᐣ: ᓇᒣᔅ
qırımtatarca: Balıq
kaszëbsczi: Rëbë
Чӑвашла: Пулă
Cymraeg: Pysgodyn
dansk: Fisk
Deutsch: Fische
Zazaki: Mase
dolnoserbski: Ryby
Ελληνικά: Ψάρι
English: Fish
Esperanto: Fiŝoj
español: Pez
eesti: Kalad
euskara: Arrain
فارسی: ماهی
suomi: Kala
Võro: Kala
Na Vosa Vakaviti: Ika
føroyskt: Fiskur
français: Poisson
Nordfriisk: Fasker
Frysk: Fisken
Gaeilge: Iasc
贛語:
Gàidhlig: Iasg
galego: Peixes
Avañe'ẽ: Pira
Bahasa Hulontalo: Uponula
ગુજરાતી: માછલી
Gaelg: Eeast
Hausa: Kifi
客家語/Hak-kâ-ngî: Ǹg-è
עברית: דג
हिन्दी: मछली
Fiji Hindi: Machhri
hrvatski: Ribe
hornjoserbsce: Ryby
Kreyòl ayisyen: Pwason
magyar: Halak
Հայերեն: Ձկներ
interlingua: Pisce
Bahasa Indonesia: Ikan
Iñupiak: Iqaluk
Ilokano: Ikan
ГӀалгӀай: Чкъаьрий
Ido: Fisho
íslenska: Fiskur
italiano: Pesce
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᐃᖃᓗᒃ
日本語: 魚類
Patois: Fish
la .lojban.: finpe
Basa Jawa: Iwak
ქართული: თევზები
Qaraqalpaqsha: Balıq
Kabɩyɛ: Kpakpayaɣ
қазақша: Балықтар
ಕನ್ನಡ: ಮೀನು
한국어: 물고기
Ripoarisch: Fesch
kurdî: Masî
коми: Чери
kernowek: Pysk
Кыргызча: Балыктар
Latina: Piscis
Ladino: Pishkados
Lëtzebuergesch: Fësch
лакку: Чавахъ
Lingua Franca Nova: Pex
Limburgs: Vèsse
lumbaart: Pès
lingála: Mbísi
lietuvių: Žuvys
latviešu: Zivis
Malagasy: Hazandrano
олык марий: Кол
Baso Minangkabau: Ikan
македонски: Риби
മലയാളം: മത്സ്യം
монгол: Загас
मराठी: मासा
кырык мары: Кол
Bahasa Melayu: Ikan
မြန်မာဘာသာ: ငါး (တိရစ္ဆာန်)
эрзянь: Калт
Dorerin Naoero: Iy
Nāhuatl: Michin
Napulitano: Pisce
Plattdüütsch: Fisch
Nedersaksies: Visk
नेपाली: माछा
नेपाल भाषा: न्या
Nederlands: Vissen (dieren)
norsk nynorsk: Fisk
norsk: Fisk
Nouormand: Paîsson
occitan: Peis
ଓଡ଼ିଆ: ମାଛ
Ирон: Кæсæгтæ
ਪੰਜਾਬੀ: ਮੱਛੀ
Kapampangan: Asan
Picard: Pichon
polski: Ryby
پنجابی: مچھی
português: Peixe
Runa Simi: Challwa
română: Pește
armãneashti: Pescu
русский: Рыбы
русиньскый: Рыбы
संस्कृतम्: मत्स्याः
саха тыла: Балык
sicilianu: Pisci
Scots: Fish
سنڌي: مڇي
srpskohrvatski / српскохрватски: Riba
සිංහල: මාළු
Simple English: Fish
slovenščina: Ribe
chiShona: Hove
Soomaaliga: Malaay
shqip: Peshqit
српски / srpski: Рибе
Sranantongo: Fisi
Basa Sunda: Lauk
svenska: Fiskar
Kiswahili: Samaki
ślůnski: Ryby
ತುಳು: ಮೀನ್
తెలుగు: చేప
тоҷикӣ: Моҳӣ
ไทย: ปลา
Tagalog: Isda
Türkçe: Balık
татарча/tatarça: Балыклар
удмурт: Чорыг
українська: Риби
اردو: مچھلی
oʻzbekcha/ўзбекча: Baliqlar
vèneto: Pesi
vepsän kel’: Kalad
Tiếng Việt:
West-Vlams: Visschn
walon: Pexhon
Winaray: Isda
吴语:
хальмг: Заһсн
isiXhosa: Intlanzi
მარგალური: ჩხომი
ייִדיש: פיש
Vahcuengh: Duzbya
中文:
文言:
Bân-lâm-gú:
粵語: