மார்க்சியம்

இது இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை. இதனை இற்றைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்த உதவுங்கள்.

மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வருக்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்ட்த்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.

மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது.

மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் [வரலாற்றுப் பொருள்முதல் வாதம்]] என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.

மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்;[1] அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும்,[2]அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர்.[3]இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பருந்துப் பார்வை

மார்க்சியப் பகுப்பாய்வு சமூகப் பொருள் தேவைகளைச் சந்திக்கும் பொருளாயத நிலைலைகளையும் பொருளியல் நடவடிக்கைகளையும் ஆய்வதில் இருந்து தொடங்குகிறது. பொருளியல் ஒருங்கமைப்பு அல்லது பொருளாக்க உறவுகள் நேரடியாக மற்ற சமூக உறவுகளையும், அரசியல்,சட்ட அமைப்புகள், அறநெறிமுறைகள், கருத்தியல் போன்ற அனைத்து சமூக உணர்வுகளையும் உருவாக்குகிறது அல்லது தாக்கம் செலுத்துகிறது எனக் கொள்கிறது. பொருளியல் அமைப்பும் சமூக உறவுகளும் சமுகத்தின் அடித்தளமாக அமைகின்றன. சமூகத்தின் பொருளாக்க விசைகள் வளரும்போது அதாவது குறிப்பாகத் தொழில்நுட்பம் வளரும்போது நிலவும் சமூகப் பொருளாக்க வடிவங்கள் திறமற்றுப் போகின்றன. அதனால் அடுத்துவரும் சமூக முன்னேற்ரத்தை அவை தடுக்கின்றன. காரல் மார்க்சு கூறுகிறார்: "At a certain stage of development, the material productive forces of society come into conflict with the existing relations of production or – this merely expresses the same thing in legal terms – with the property relations within the framework of which they have operated hitherto. From forms of development of the productive forces these relations turn into their fetters. Then begins an era of social revolution."[4]

இந்தப் பொருளியல் விசைகளுக்கும் பொருளியல் உறவுகளுக்கும் இடையில் எழும் முரண்பாடுகள் வருக்கப் போராட்ட வடிவத்தில் சமூக உறவுகளின் முரண்பாடாக முகிழ்க்கிறது.[5] முதலாளியப் பொருளாக்க முறைமையின் கீழ், இப்போராட்டம் பொருளாக்க அமைப்பை தம்முரிமையில் வைத்திருக்கும் சிறுபான்மை முதலாளிகளுக்கும் பொருள்களையும் சேவைகளையும் உருவாக்கும் பெரும்பான்மை பாட்டாளிகளுக்கும் இடையில் தோன்றுகிறது.இவ்வாறு சமூக மாற்றம், தம்முள் முரண்பட்ட சமூக வகுப்புகளுக்கிடையில் எழும் வருக்கப் போராட்டத்தால் உருவாகிறதெனவும் முதலாளியம் பாட்டாளிகளைச் சுரண்டி அடக்குகிறதெனவும் இதனால் பாட்டாளி வருக்கப் புரட்சி உருவாகிறதெனவும் என மார்க்சியர்கள் கூறுகின்றனர்.

Other Languages
Afrikaans: Marxisme
Alemannisch: Marxismus
aragonés: Marxismo
العربية: ماركسية
مصرى: ماركسيه
অসমীয়া: মাৰ্ক্সবাদ
asturianu: Marxismu
azərbaycanca: Marksizm
تۆرکجه: مارکسیزم
башҡортса: Марксизм
Boarisch: Marxismus
žemaitėška: Marksėzmos
беларуская: Марксізм
беларуская (тарашкевіца)‎: Марксізм
български: Марксизъм
brezhoneg: Marksouriezh
bosanski: Marksizam
català: Marxisme
کوردی: مارکسیزم
čeština: Marxismus
Чӑвашла: Марксизм
Cymraeg: Marcsiaeth
dansk: Marxisme
Deutsch: Marxismus
Ελληνικά: Μαρξισμός
English: Marxism
Esperanto: Marksismo
español: Marxismo
eesti: Marksism
euskara: Marxismo
فارسی: مارکسیسم
føroyskt: Marxisma
français: Marxisme
Frysk: Marksisme
Gàidhlig: Marxachas
galego: Marxismo
עברית: מרקסיזם
हिन्दी: मार्क्सवाद
Fiji Hindi: Markswaad
hrvatski: Marksizam
magyar: Marxizmus
Հայերեն: Մարքսիզմ
interlingua: Marxismo
Bahasa Indonesia: Marxisme
Ilokano: Marxismo
íslenska: Marxismi
italiano: Marxismo
Patois: Maaxizim
Basa Jawa: Marxisme
ქართული: მარქსიზმი
қазақша: Марксизм
къарачай-малкъар: Марксизм
Кыргызча: Марксизм
Limburgs: Marxisme
lietuvių: Marksizmas
latviešu: Marksisms
македонски: Марксизам
മലയാളം: മാർക്സിസം
монгол: Марксизм
Bahasa Melayu: Marxisme
नेपाल भाषा: मार्क्सवाद
Nederlands: Marxisme
norsk nynorsk: Marxisme
norsk: Marxisme
occitan: Marxisme
ਪੰਜਾਬੀ: ਮਾਰਕਸਵਾਦ
polski: Marksizm
Piemontèis: Marxism
پنجابی: مارکسزم
português: Marxismo
Runa Simi: Marsyuyay
rumantsch: Marxissem
română: Marxism
русский: Марксизм
русиньскый: Марксізм
саха тыла: Марксизм
sicilianu: Marxismu
Scots: Marxism
srpskohrvatski / српскохрватски: Marksizam
Simple English: Marxism
slovenčina: Marxizmus
slovenščina: Marksizem
shqip: Marksizmi
српски / srpski: Марксизам
svenska: Marxism
Kiswahili: Umaksi
తెలుగు: మార్క్సిజం
Tagalog: Marxismo
Türkçe: Marksizm
татарча/tatarça: Марксизм
українська: Марксизм
اردو: مارکسیت
oʻzbekcha/ўзбекча: Marksizm
Tiếng Việt: Chủ nghĩa Marx
Winaray: Marxismo
მარგალური: მარქსიზმი
ייִדיש: מארקסיזם
Bân-lâm-gú: Marx-chú-gī