மணா கணவாய்

மணா கணவாய்
Mana Village, Badrinath, Uttarakhand, India.jpeg
மணா கிராமம், பத்ரிநாத், உத்தரகாண்ட், இந்தியா
ஏற்றம் 5,608 மீ (18,399 அடி)
( SRTM2)
அமைவிடம் சீனாஇந்தியா எல்லை
மலைத் தொடர் இமயமலை
ஆள்கூறுகள் 31°04′06″N 79°25′00″E / 31°04′06″N 79°25′00″E / 31.06833; 79.41667
மணா கணவாய் is located in Tibetan Plateau
மணா கணவாய்
மணா கணவாய் அமைவிடம்

மணா கணவாய் அல்லது மணா லா, சிர்பித்யா, சிர்பித்யா லா, டுங்ரி லா [1] என்பது இந்தியா மற்றும் திபெத் எல்லையின் நடுவே இமயமலையில் உள்ளது. உலகிலேயே, வாகனங்கள் செல்லத்தகுந்த உயரமான கணவாய்களில் ஒன்றாக மணா கணவாய் திகழ்கிறது. இந்திய இராணுவத்திற்காக, எல்லைச் சாலைகள் அமைப்பால் 2005-2010 காலத்தில் சாலை அமைக்கப்பட்டது [2]. நல்ல தரமாக சரளைக் கற்களால் அமைக்கப்பட்ட இச்சாலை திபெத் பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலையைவிட இந்தியா பக்கத்தில் உயரமாக இருக்கின்றது.


புவியியல்

மணா கணவாய், நந்தாதேவி பாதுகாக்கப்பட்ட உயிர்கோளங்களுக்குள் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவில், மணா நகரின் மேற்கே 45 கி.மீ, மற்றும் உத்தரகாண்டில் உள்ள இந்துகளின் புனித நகரான பத்ரிநாத்திற்கு மேற்கே 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சரஸ்வதி ஆற்றின் உற்பத்தி மூலமாகவும் உள்ளது [3]. இந்த ஆறு மணா கணவாய்க்கு தென்மேற்கு மூன்று கி.மீ சிற்றோடைகளாக செல்கிறது.


Other Languages