மகரந்தச் சேர்க்கை

மகரந்தச்சேர்க்கை (pollination) என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்கள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன. வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தத்தூள்கள் நேரடியாகவே சூல்கள்மீது இடப்படுகின்றன. வித்துத் தாவரங்களின் பூக்களில் உள்ள சூல்முடியே சூல்வித்திலைகளின் ஏற்கும் பகுதியாகும். வித்துமூடியிலிச் சூல்களில் ஏற்கும் பகுதி சூல்துளை எனப்படுகின்றது. பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்தில், மகரந்தச்சேர்க்கை ஒரு முக்கிய படி ஆகும். இவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் மரபியல் பல்வகைமைத் தன்மை கொண்ட தாவரங்கள் உருவாகின்றன.

மகரந்தச்சேர்க்கை பற்றிய ஆய்வு தாவரவியல், தோட்டக்கலை, பூச்சியியல், சூழலியல் போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கின்றது. மகரந்தச்சேர்க்கையை, பூக்களுக்கும், மகரந்தக்காவிகளுக்கும் இடையிலான இடைவினையாகக் கொண்டு முதலில் ஆய்வு செய்தவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தியன் கொன்றாட் இசுப்பிரெங்கெல் என்பவராவார். மகரந்தச்சேர்க்கையின் விளைவான கருக்கட்டல் மூலம் உருவாகும் "காய்த்தல்" தோட்டக்கலையிலும், வேளாண்மையிலும் முக்கியமான ஒன்றாகும்.

Other Languages
Afrikaans: Bestuiwing
aragonés: Polinización
العربية: تأبير
asturianu: Polinización
azərbaycanca: Tozlanma
башҡортса: Һеркәләнеү
беларуская: Апыленне
български: Опрашване
বাংলা: পরাগায়ন
bosanski: Oprašivanje
کوردی: پەڕین
čeština: Opylení
Deutsch: Bestäubung
Ελληνικά: Επικονίαση
English: Pollination
Esperanto: Polenado
español: Polinización
eesti: Tolmlemine
euskara: Polinizazio
suomi: Pölytys
français: Pollinisation
Gaeilge: Pailniú
עברית: האבקה
हिन्दी: परागण
hrvatski: Oprašivanje
Kreyòl ayisyen: Polinizasyon
magyar: Megporzás
հայերեն: Փոշոտում
Bahasa Indonesia: Penyerbukan
italiano: Impollinazione
日本語: 受粉
ქართული: ენტომოფილია
қазақша: Тозаңдану
한국어: 수분
Кыргызча: Чаңдашуу
lietuvių: Apdulkinimas
latviešu: Apputeksnēšana
മലയാളം: പരാഗണം
मराठी: परागीकरण
Bahasa Melayu: Pendebungaan
Nederlands: Bestuiving
norsk nynorsk: Pollinering
polski: Zapylenie
پنجابی: بی بنائی
português: Polinização
Runa Simi: Sisachay
română: Polenizare
русский: Опыление
srpskohrvatski / српскохрватски: Oprašivanje
Simple English: Pollination
slovenščina: Opraševanje
српски / srpski: Oprašivanje
svenska: Pollinering
Tagalog: Pambubulo
Türkçe: Tozlaşma
українська: Запилення
اردو: زیرگی
oʻzbekcha/ўзбекча: Changlanish
Tiếng Việt: Thụ phấn
中文: 传粉