பூச்சி

பூச்சி
புதைப்படிவ காலம்:டெவோனியக் காலம் - அண்மைய
European honey bee extracts nectar.jpg
ஐரோப்பிய தேனீ (en:European honey bee)
வரிசை - ஹைமனொப்தரா (en:Hymenoptera)
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்குகள்
தொகுதி:கணுக்காலிகள்
துணைத்தொகுதி:அறுகாலிகள்
வகுப்பு:பூச்சிகள்

பூச்சி (insect) கணுக்காலிகள் (ஆத்திரப்போடா) வகையுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று சோடிக் கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு சோடி உணர்வுறுப்புக்களையும் (antennae) கொண்டவையாக இருக்கும். இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வுத்துறை பூச்சியியல் எனப்படும்.

உலகில் உள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன[1]. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் இருப்பதுடன், ஒரு மில்லியனுக்கும் கூடுதலான விவரங்கள் அறியப்பட்ட பூச்சி இனங்கள் இருக்கின்றன[2]. இந்த இனங்களில் எண்ணிக்கை, உலகில் உள்ள அறியப்பட்ட விலங்குகளில் அரைவாசிக்கும் மேலானவையாக இருக்கின்றன.[3][4]. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும்[3][5][6], அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும்[1] வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. அவை பூமியில் இருக்கும் வேறுபட்ட விலங்குகளில் 90% மாக இருக்கலாம்[7] எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் இசைவாக்கம் அடைய வல்லனவாகவும் இருக்கின்றன[1]. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் பூச்சிகள் வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் (Torpor) இருக்கின்றனவாகவோ உள்ளன[8]. வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause)[9]. கணுக்காலிகளில் இன்னொரு பிரிவான கிரஸ்ரேசியாக்கள் (Crustaceans) ஆட்சி செலுத்தும் பெருங்கடல்கள் சில வகை பூச்சி இனங்களையே கொண்டுள்ளது.

உடற்கூற்றியலும் உடலியக்கவியலும்

பூச்சிகளின் முதிர்நிலைகள் கைற்றின் எனப்படும் கடினமான பதார்த்தத்தாலான புறவன்கூட்டினால் மூடப்பட்ட, துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டிருக்கின்றன. உடல் துண்டங்கள், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட தலை, மார்பு, வயிறு என்ற மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்[47].

புறவன்கூடு

புறவன் கூடானது வெளிப்புறமாகக் கைற்றினற்ற, மெழுகு போன்ற, நீரை உட்புகவிடாத தன்மை கொண்ட மெல்லிய ஒரு மேற்புறத்தோலையும் (epicuticle), உட்புறமாகக் கைற்றினால் ஆன மிகவும் தடிப்பான புறத்தோலையும் (procuticle) கொண்டிருக்கும். இந்தப் புறத்தோலானது வெளிப்புறமாக, மிகவும் திண்மையான கடினமாக்கப்பட்ட வெளிப்புறத்தோலையும் (exocuticle), உட்புறமாக, ஓரளவு நெகிழும் தன்மை கொண்ட, உறுதியான உட்புறத்தோலையும் (endocuticle) கொண்டிருக்கும்[14]:22–24. குடம்பி நிலை போன்ற மென்மையான உடல் கொண்ட நிலைகளில் இந்த புறவன்கூடு பெரிதும் ஒடுக்கப்பட்டிருக்கும்.

தலை

தலைப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கிய பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.

மார்பு

மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு சோடிக் கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு சோடிச் சிறகுகளும் காணப்படும். மார்புப் பகுதியின் ஒவ்வொரு துண்டமும் நான்கு மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அவை முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதி, இரு பக்கமும் காணப்படும் பக்கவாட்டுப்பகுதிகள் ஆகும்[14].

வயிறு

வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும்[14]:22–48. வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.

இவையே பூச்சிகளுக்கான பொதுமைப்பாடான வெளித்தோற்ற அமைப்பாக இருந்தபோதிலும், இதில் பல வேறுபாடுகள் காணப்படும்.

உட்புறம்

பூச்சிகளின் நரம்புத் தொகுதியானது மூளை, வயிற்றுப்புற நரம்பு அல்லது நாண் எனப்படும் இரு பாகங்களைக் கொண்டிருக்கின்றது. தலைப்பகுதியானது 6 துண்டங்கள் ஒன்றாக இணைந்த பகுதியாகும். இதில் ஒவ்வொரு துண்டத்திற்குமான ஒரு சோடி நரம்புக்கலத்திரள் அல்லது, ஒன்றாக இணைந்த நரம்புக் கலங்கள் மூளைக்கு வெளிப்புறமாகக் காணப்படும். இவற்றில் முதல் மூன்று சோடி நரம்புக்கலத்திரளும் மூளையுடன் இணைந்த நிலையிலும், அடுத்த மூன்று சோடியும் இணைந்தபடி உணவுக்குழாய்க்குக் கீழாகவும் காணப்படும்.[14]:57.மார்புத் துண்டங்களும் பக்கத்திற்கு ஒன்றாகச் சோடி நரம்புக்கலத்திரள்களைக் கொண்டிருக்கும். வயிற்றுத் துண்டங்களிலும் இதே போன்ற ஒழுங்குபடுத்தல் காணப்படினும், முதல் 8 துண்டங்களிலேயே இவ்வாறு இருக்கும். இணைதலினால் இந்த எண்ணிக்கை சிலவற்றில் மேலும் குறைவாக இருக்கும்[48].

ஒரு சில பூச்சிகளில் வலி போன்றவொரு உணர்வு அறியப்படுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன[49][50]. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான கருத்திணக்கம் ஏற்படவில்லை[51].

சமிபாட்டுத் தொகுதி

வெவ்வேறு பூச்சிகளில் வெவ்வேறு வடிவில் விருத்தியடைந்த வாயுறுப்புக்கள்
A. வெட்டுக்கிளியில் இருக்கும் ஆரம்ப வாயுறுப்பு, B. நக்கும் தன்மை கொண்ட தேனீயின் வாயுறுப்பு, C. குழாய்வழி தன்மை கொண்ட பட்டாம்பூச்சியின் வாயுறுப்பு, D. உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்ட பெண் நுளம்பின் வாயுறுப்பு
a. உணர்கொம்பு; c. கூட்டுக்கண்; lb. கீழுதடு; lr. மேலுதடு; md. கீழ்த்தாடை; mx. மேல்தாடை; hp. கீழ்த்தொண்டை

பூச்சிகள் உண்ணும் உணவிலிருந்து, ஊட்டச்சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுவதில் இந்தச் சமிபாட்டுத் தொகுதி உதவுகின்றது[52]. உணவானது கூட்டுச்சர்க்கரை, புரதம், கொழுப்பு, கருவமிலம் போன்ற பருமூலக்கூறுகள் வடிவில் உள்ளெடுக்கப்படும். இந்த உணவானது சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டினால், வளர்ச்சி, இனப்பெருக்கம், ஏனைய உடல் இயக்கங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்காக, சிதைமாற்றம் (catabolism) மூலம் எளிய மூலக்கூறுகளாக மாற்றப்படும்.

சமிபாட்டுத் தொகுதியானது, உடலின் நீளப்பாட்டிற்குச் செல்லும் மூடிய நீண்ட குழாய் அமைப்பையுடையது. வாயிலிருந்து, குதம் வரைக்கும் ஒரு வழிப் பாதையில் உணவையும், அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் கழிவுகளையும் எடுத்துச் செல்லும். இந்த அமைப்பானது முன்குடல் (foregut), நடுக்குடல் (midgut), பின்குடல் (hindgut) என்னும் முக்கிய மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் வேறுபட்ட தொழில்களைப் புரிவதாக அமைந்திருக்கும். இவற்றுடன் வாயுறுப்புக்களும்(mouthparts), ஒரு சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளும், உமிழ்நீர்த் தேக்கங்களும் இணைந்து செயற்படும். இவை முன்குடலை அண்மித்த அமைப்புக்களாக மார்புப் பகுதியில் காணப்படும்[14]:70–77.

உமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ் நீரானது, உமிழ்நீர்த் தேக்கத்தில் சேமிக்கப்படும். பின்னர் உமிழ்நீர்க் கான் மூலம் வாயுறுப்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே வாயுறுப்புக்களின் அசைவினால், உணவுடன் சேர்க்கப்படும். பின்னர் வாயினுள் செலுத்தப்பட்டு, அங்கே உணவு உடைக்கப்படும்[52][53]. பின்னர் உணவுக்குழாயினூடாகச் செல்கையில் நொதியங்களின் தாக்கத்தால் உணவு சமிபாட்டுக்கு உள்ளாகி, பின்னர் எளிய மூலக் கூறுகள் உறிஞ்சி எடுக்கப்படும்.

சில பூச்சிகளில் சமிபாட்டுக்கான நொதியம் உடலின் வெளியே, உணவின் மேல் சுரக்கப்பட்டு, அங்கேயே பகுதியாகச் சமிபாடடையச் செய்யப்பட்டு பின்னர் உள்ளெடுக்கப்படும்[54]:31.

பூச்சிகளின் சுவாசம்

பூச்சிகளின் சுவாசம் நுரையீரல் இன்றியே நடைபெறும். பூச்சிகளின் உடலின் உட்புறத்தில் காற்றை அல்லது வாயுவைத் தீவிரமாக அல்லது பரவலாகக் கக்கக்கூடிய உள்குழாய்களின் தொகுதியும் காற்றுப் பைகளும் (sac) காணப்படுகின்றன. பிராணவாயு பூச்சிகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ஸ்பிரக்கிள் (Spiracle) என்று சொல்லப்படும் பகுதியினால் உள்வாங்கப்படுகின்றது. குடம்பிகள், போலவே சில பூச்சிகளுக்குப் பூக்கள் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் நீரில் கலந்துள்ள ஆக்சியன் பூச்சிகள் உள்ளெடுக்கின்றன. சில பூச்சிகள் டொல்பின்கள் போல நீர்நிலைக்கு மேலே பாய்ந்து காற்றை நிரப்புகின்றன. இச்செயற்பாடு பூச்சிகளில் உள்ள விசேட கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படலாம்.[55]

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Insek
Alemannisch: Insekten
አማርኛ: ሦስት አጽቄ
aragonés: Insecta
Ænglisc: Ceorfdēor
العربية: حشرة
ܐܪܡܝܐ: ܪܚܫܐ
অসমীয়া: পতংগ
asturianu: Inseutos
Aymar aru: Ch'iwi
azərbaycanca: Həşəratlar
تۆرکجه: حشره‌لر
башҡортса: Бөжәктәр
žemaitėška: Vabzdē
беларуская: Насякомыя
беларуская (тарашкевіца)‎: Вусякі
български: Насекоми
Bislama: Insek
বাংলা: কীট
brezhoneg: Amprevan
bosanski: Insekti
català: Insectes
Mìng-dĕ̤ng-ngṳ̄: Tè̤ng-ngiê
нохчийн: Сагалмат
Cebuano: Insekto
Tsetsêhestâhese: Meškêso
کوردی: مێروو
čeština: Hmyz
Cymraeg: Pryf
dansk: Insekter
Deutsch: Insekten
Ελληνικά: Έντομα
English: Insect
Esperanto: Insektoj
español: Insecta
eesti: Putukad
euskara: Intsektu
estremeñu: Insecta
فارسی: حشره
Võro: Mutuk
føroyskt: Skordýr
français: Insecte
Nordfriisk: Insekten
Frysk: Ynsekten
Gaeilge: Feithid
galego: Insectos
Avañe'ẽ: Tymbachu'i
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐌰𐌹𐌽𐍄𐍉𐌼𐍉𐌽
Gaelg: Insecta
客家語/Hak-kâ-ngî: Khûn-chhùng
עברית: חרקים
हिन्दी: कीट
Fiji Hindi: Kirwa
hrvatski: Kukci
Kreyòl ayisyen: Ensèk
magyar: Rovarok
հայերեն: Միջատներ
interlingua: Insecta
Bahasa Indonesia: Serangga
Ilokano: Insekto
Ido: Insekto
íslenska: Skordýr
italiano: Insecta
日本語: 昆虫
Patois: Insek
ქართული: მწერები
Qaraqalpaqsha: Shıbın-shirkeyler
Адыгэбзэ: ХьэпӀацӀэхэр
қазақша: Жәндіктер
ಕನ್ನಡ: ಕೀಟ
한국어: 곤충
कॉशुर / کٲشُر: کیوٚم
kernowek: Hweskeren
Кыргызча: Курт-кумурска
Latina: Insecta
Lëtzebuergesch: Insekten
лакку: Ущущулгъи
лезги: Пепеяр
Lingua Franca Nova: Inseto
Limburgs: Insekte
lumbaart: Inset
lingála: Nyama ekɛ́
lietuvių: Vabzdžiai
latviešu: Kukaiņi
Basa Banyumasan: Srangga
олык марий: Шыҥа-копшаҥге
македонски: Инсекти
മലയാളം: പ്രാണി
монгол: Шавж
मराठी: कीटक
кырык мары: Капшангы
Bahasa Melayu: Serangga
مازِرونی: بئو
Nāhuatl: Yolcatzin
Napulitano: Inzetto
Plattdüütsch: Insekten
Nedersaksies: Insekt
नेपाली: किरा
नेपाल भाषा: की
Nederlands: Insecten
norsk nynorsk: Insekt
norsk: Insekter
occitan: Insecta
ਪੰਜਾਬੀ: ਕੀਟ
Kapampangan: Insectu
Pälzisch: Insekten
polski: Owady
پنجابی: کیڑے
پښتو: خوځندکې
português: Insetos
Runa Simi: Palama
română: Insectă
armãneashti: Insectâ
русский: Насекомые
русиньскый: Хробач
Kinyarwanda: Inigwahabiri
संस्कृतम्: जन्तुः
саха тыла: Үөн-көйүүр
sardu: Babbalottu
sicilianu: Nzettu
Scots: Insect
srpskohrvatski / српскохрватски: Insekt
සිංහල: කෘමියෝ
Simple English: Insect
slovenčina: Hmyz
slovenščina: Žuželke
Soomaaliga: Xasharaad
shqip: Insekti
српски / srpski: Инсекти
Seeltersk: Insekte
Basa Sunda: Gegeremet
svenska: Insekter
Kiswahili: Wadudu
తెలుగు: కీటకము
тоҷикӣ: Ҳашарот
ไทย: แมลง
ትግርኛ: ሓሽራ
Tagalog: Kulisap
lea faka-Tonga: ʻinisēkite
Türkçe: Böcek
татарча/tatarça: Бөҗәкләр
українська: Комахи
اردو: حشرات
oʻzbekcha/ўзбекча: Hasharotlar
vèneto: Bai
vepsän kel’: Gavedid
Tiếng Việt: Côn trùng
West-Vlams: Insektn
walon: Inseke
Winaray: Insektó
Wolof: Gunóor
吴语: 昆虫
хальмг: Хорха
მარგალური: ჭანდეფი (Insecta)
ייִדיש: אינסעקט
Yorùbá: Kòkòrò
Vahcuengh: Non
中文: 昆虫
Bân-lâm-gú: Khun-thiông
粵語: 昆蟲