புற்று நோய்


புற்று நோய்
Tumor Mesothelioma2 legend.jpg
A coronal CT scan showing malignant cancer of the lung sac.
Legend: → tumor ←, ★ central pleural effusion, 1&3 lungs, 2 spine, 4 ribs, 5 aorta, 6 spleen, 7&8 kidneys, 9 liver.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
நோய்களின் தரவுத்தளம்28843
MedlinePlus001289
MeSHD009369

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும்.உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயேமிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.

இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும்.உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர். அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்ப்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.

புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும், மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது. மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன. ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப்புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயைத்தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.

புற்று நோய் மாந்தரை எந்த அகவையிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்க்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன.[1] புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது.[2] அமெரிக்கன் கான்செர் சொசைட்டி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.[3] புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.

பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது.[4] இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது. மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.

௧.மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)

௨. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes) ஏற்படும் பிறழ்வுகள்.

முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால் , உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.

இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.

புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும். வீரிய புற்றுகள் (Malignant tumor) கதிரியயக்க படமாக்கத்தில் மூலம் அறியலாம். ஒரு திசுவின் இழையவியலுக்குரிய சோதனை உடல் திசு ஆய்வு மூலம் அதற்குரிய நோயியல் மருத்துவரின் உதவியுடன் நோயை உறுதிசெய்துகொள்வது அவசியமாகும். புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து மிக்க புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம், சில வகைகளை குணப்படுத்தலாம். ஒருமுறை அறுதி செய்தபின், பொதுவாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமொதெராபி (வேதிச்சிகிச்சை), கதிரியக்கச்சிகிச்சை ஆகிய மூன்று முறைகளும் அடங்கிய வகைகளில் சிகிச்சை அளிக்கலாம். மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்றன. குறிவைத்த சிகிச்சை மருந்துவகைகளில், அவை சில கட்டிகளில் தனிப்பட்ட முறையில் சில மூலக்கூற்று பிறழ்தல்களை குறிவைத்து, மேலும் இயற்கையாக இருக்கும் கலன்களை அதிக பாதிப்பு அடையாமல் செயல் புரியும் மருந்துகளின் மேம்பாட்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோயாளிகன் முன்கணிப்பு மிக்கவாறும் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலைநிலைமை, அல்லது நோயின் பரிமாணத்தை பொறுத்திருக்கும். மேலும், இழையவியலுக்குரிய தரம்பிரித்தல் மற்றும் சில குறிப்பிட்ட மூலக்கூற்று அடையாளம் காட்டிகளை முன்னிலையில் வைத்தலும், முன்கணிப்பிற்கு பயன்படுகிறது, மேலும் தனிப்பட்ட நோயாளி சார்ந்த சிக்ச்சையையும் அளிக்க உதவுகிறது.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Kanker
Alemannisch: Krebs (Medizin)
አማርኛ: ካንሰር
aragonés: Cáncer
العربية: سرطان
ܐܪܡܝܐ: ܬܠܗܝܐ
مصرى: سرطان
অসমীয়া: কৰ্কট ৰোগ
asturianu: Cáncanu
azərbaycanca: Xərçəng xəstəliyi
تۆرکجه: سرطان
башҡортса: Яман шеш
žemaitėška: Viežīs (lėga)
беларуская (тарашкевіца)‎: Рак (захворваньне)
български: Рак (болест)
भोजपुरी: कैंसर
བོད་ཡིག: འབྲས་སྐྲན།
brezhoneg: Krign-bev
bosanski: Rak (bolest)
català: Càncer
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ngàng
کوردی: شێرپەنجە
čeština: Rakovina
Cymraeg: Canser
dansk: Kræft
Zazaki: Qanser
डोटेली: कर्कट रोग
ދިވެހިބަސް: ކެންސަރު
Ελληνικά: Καρκίνος
English: Cancer
Esperanto: Kancero
español: Cáncer
euskara: Minbizi
estremeñu: Cancru
فارسی: سرطان
suomi: Syöpä
Võro: Vähktõbi
français: Cancer
Nordfriisk: Kreeft
Frysk: Kanker
Gaeilge: Ailse
贛語:
Gàidhlig: Aillse
galego: Cancro
Avañe'ẽ: Akytã'ai
Gaelg: Kahngyr
Hausa: Sankara
客家語/Hak-kâ-ngî: Ngàm
हिन्दी: कर्कट रोग
Fiji Hindi: Cancer
hrvatski: Rak (bolest)
Kreyòl ayisyen: Kansè
հայերեն: Քաղցկեղ
interlingua: Cancere
Bahasa Indonesia: Kanker
Ilokano: Kanser
Ido: Kancero
íslenska: Krabbamein
日本語: 悪性腫瘍
Patois: Kiansa
Basa Jawa: Kanker
ქართული: სიმსივნე
қазақша: Қатерлі ісік
한국어:
kurdî: Şêrpence
Luganda: Kokolo
Limburgs: Kaanker
lietuvių: Vėžys (liga)
македонски: Рак (болест)
മലയാളം: അർബുദം
монгол: Хорт хавдар
मराठी: कर्करोग
Bahasa Melayu: Barah
မြန်မာဘာသာ: ကင်ဆာရောဂါ
Nedersaksies: Kaanker
नेपाली: क्यान्सर
नेपाल भाषा: क्यान्सर
Nederlands: Kanker
norsk nynorsk: Kreft
norsk: Kreft
occitan: Càncer
ଓଡ଼ିଆ: କର୍କଟ ରୋଗ
ਪੰਜਾਬੀ: ਕੇਂਸਰ
Kapampangan: Cancer
پنجابی: سرطان
پښتو: سرطان
português: Câncer
Runa Simi: Apanqara unquy
română: Cancer
русиньскый: Раковіна
संस्कृतम्: कर्कटरोगः
Scots: Cancer
سنڌي: ڪينسر
davvisámegiella: Boras
srpskohrvatski / српскохрватски: Kancer
සිංහල: පිළිකා
Simple English: Cancer
slovenčina: Zhubný nádor
slovenščina: Rak (bolezen)
Soomaaliga: Kansar
shqip: Kanceri
српски / srpski: Рак (болест)
Basa Sunda: Kangker
svenska: Cancer
Kiswahili: Saratani
తెలుగు: కాన్సర్
Tagalog: Kanser
Tok Pisin: Kensa
Türkçe: Kanser
Xitsonga: Fukuzana
татарча/tatarça: Яман шеш
українська: Злоякісна пухлина
oʻzbekcha/ўзбекча: Saraton (kasallik)
vèneto: Càncaro
Tiếng Việt: Ung thư
Winaray: Kanser
吴语:
მარგალური: კიბო
ייִדיש: קענסער
Vahcuengh: Bingh'aizcwng
中文: 癌症
文言:
Bân-lâm-gú: Gâm
粵語: