புனித இலாரன்சு பெருங்கோவில்

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில்
Basilica Papale di San Lorenzo fuori le Mura (இத்தாலியம்)
San Lorenzo fuori le mura - facade.jpg
சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த திருத்தொண்டர் இலாரன்சுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட கோவில். 1943, சூன் 19இல் நேச நாடுகள் பொழிந்த குண்டுகளால் அழிவுற்ற கோவில் முகப்பு பின்னர் சீரமைக்கப்பட்டது
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°54′09″N 12°31′14″E / 41°54′09″N 12°31′14″E / 41.90250; 12.52056
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டுமுறை
நிலைதிருத்தந்தை இளம் பெருங்கோவில், புனித இலாரன்சு பெருங்கோவில்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைகோவில் கட்டட வகை
முகப்பின் திசைWbS
அடித்தளமிட்டதுநான்காம் நூற்றாண்டு
அளவுகள்
நீளம்90 மீட்டர்கள் (300 ft)
அகலம்25 மீட்டர்கள் (82 ft)
நடுநீளப் பகுதி அகலம்14 மீட்டர்கள் (46 ft)

புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Lawrence Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Laurentii extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Lorenzo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பங்குக் கோவிலாகவும் உள்ளது[1].

இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள ஏழு திருப்பயணக் கோவில்களுள் ஒன்றாகும். மேலும் இதற்கு "குலமுதுவர் பெருங்கோவில்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோவில் வெரானோ கல்லறைத் தோட்டத்தின் அருகே உள்ளது.

Other Languages