பார்த்தலோமியோ டயஸ்

பார்த்தலோமியோ டயஸ்
Bartolomeu Dias, South Africa House (cut).JPG
இலண்டனில் உள்ள தென்னாப்பிரிக்க உயர் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பார்த்தலோமியோ டயசின் சிலை.
பிறப்பு1450[1]
அல்கார்வே, போர்த்துகல் இராச்சியம்
இறப்புமே 29, 1500 (அகவை 49–50)
நன்னம்பிக்கை முனை
தேசியம்போத்துக்கீசர்
பணிமீகாமன்; தேடலாய்வாளர்
அறியப்படுவதுஆப்பிரிக்காவின் தென்கோடியைச் சுற்றி பயணித்த முதல் ஐரோப்பியர்.

பார்த்தலோமியோ டயஸ் (Bartholomew Diaz; c. 1451 – 29 மே 1500[2]), போர்த்துகல் அரசகுடும்ப பெருமானும் கடல்வழி தேடலாய்வாளரும் ஆவார். 1488ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் தென்கோடி முனையைச் சுற்றிக்கொண்டு முதன்முதலாக அத்திலாந்திக்கிலிருந்து இந்தியப் பெருங்கடலை அடைந்தார். இவ்வாறு பயணித்த முதல் ஐரோப்பியராக அறியப்படுகின்றார்.

1487இல் போர்த்துகல்லின் இரண்டாம் ஜான் அரசர் டயசை கிறித்தவர்களின் பழங்கதை அரசர் பிரெசுடர் ஜான் இருந்த கிழக்கத்திய நிலப்பகுதியைக் கண்டறிந்து வருமாறு பணித்தார். 1488இல் பார்த்தலோமியோவும் அவரது மாலுமிகளும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடலோரமாகச் சென்று கொண்டிருந்தபோது புயலொன்றில் சிக்கிக் கொண்டனர். இதனால் தென்னாப்பிரிக்காவின் கடல்முனையொன்றில் இறங்க வேண்டியதாயிற்று. இந்த முனைக்கு அப்பால் செல்லவியலாது போனது. இதனால் அம்முனையை அவர்கள் "புயல்களின் முனை" எனப் பெயரிட்டனர். போர்த்துகல் திரும்பிய அவர்களை வரவேற்ற அரசர் இது போர்த்துகேய நாடுகாண் பயணர்களுக்கான வெற்றியை நிலைநிறுத்தும் "நன்னம்பிக்கை முனை" என மறுபெயரிட்டார். உண்மையிலேயே பிரெசுடர் ஜான் என்ற அரசர் இல்லாமையால் அவர்களால் அவரது நாட்டைக் கண்டறிய இயலவில்லை; ஆனால் அத்தலாந்திக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் சென்றடைய வழி கண்டுபிடித்திருந்தனர்; இது ஆசியாவின் பல்வேறு நிலப்பகுதிகளை கண்டறிய மிக மதிப்புள்ளதாக ஆயிற்று.

பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையில் பிரேசிலை நோக்கி சென்ற பிறிதொரு கடற்பயணத்தில் புயலொன்றின்போது கடலிலேயே இவர் மாண்டார். இவருக்கான சிலை தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ளது.

மேற்சான்றுகள்

  1. Bio. "Bartolomeu Dias". பார்த்த நாள் 8 December 2015.
  2. The Anonymous Narrative, p. 61.
Other Languages
Afrikaans: Bartolomeus Dias
azərbaycanca: Bartolomeu Diaş
беларуская: Барталамеу Дыяш
беларуская (тарашкевіца)‎: Барталамеў Дыяш
български: Бартоломеу Диаш
brezhoneg: Bartolomeu Dias
bosanski: Bartolomeu Dias
čeština: Bartolomeu Dias
Esperanto: Bartolomeu Dias
français: Bartolomeu Dias
hrvatski: Bartolomeu Dias
Bahasa Indonesia: Bartolomeu Dias
íslenska: Bartholomeu Dias
italiano: Bartolomeo Diaz
македонски: Бартоломео Дијас
Bahasa Melayu: Bartolomeu Dias
Mirandés: Bartolomeu Dias
Nederlands: Bartolomeu Dias
norsk nynorsk: Bartolomeu Dias
português: Bartolomeu Dias
română: Bartolomeo Diaz
srpskohrvatski / српскохрватски: Bartolomeu Dias
Simple English: Bartolomeu Dias
slovenčina: Bartolomeo Diaz
српски / srpski: Бартоломео Дијас
Kiswahili: Bartolomeo Dias
Türkçe: Bartolomeu Dias
українська: Бартоломеу Діаш
Tiếng Việt: Bartolomeu Dias