பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்

பாசிட்ரான் உமிழ்பு தளக் கதிர்படம் (PET-Positron emission tomogram)[1] என்பது அணுக்கரு மருத்துவத்தில் ஒரு பயனுள்ளதும் முக்கியானதுமான ஒரு நுண்மையானகருவியால் பெறப்படும் உடல் உறுப்புகளின் அமைப்பியல் மற்றும் இயங்கும் நிலையினைக் காட்டவல்ல படமாகும். கதிர்மருத்துவத்தில் ஓர் உறுப்பில் எந்த இடத்தில் புற்றுநோய் உள்ளது என தெளிவாகக் காட்டவல்லது. ஒற்றை ஒளியன் உமிழ்பு தளபட(SPECT ) முறையினை ஒத்தது. குறைந்த அரைவாழ்வுக் காலம் (Half life) கொண்ட பாசிட்ரானை வெளிவிடும் கதிர் ஐசோடோப்புகள் மற்றும் சிறப்பு கருவிகளின் துணையுடன் இந்த படம் பெறப்படுகிறது. இதற்காக பாசிட்ரானை உமிழும்

போன்றவை பெரிதும் பயன்படுகின்றன. இவைகளின் அரை வாணாள் குறைவாக இருப்பதே காரணம். ஒரு பாசிட்ரான் ஓர் எலக்ட்ரானை அடுத்து வரும் போது, அவை ஒன்றைஒன்று அழித்து, எதிரெதிர் திசைகளில் செல்லும். 0.511 கிலோ எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடைய இரு காமா கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.வட்ட வடிவில் அமைந்துள்ள பல உணரிகளின் துணையுடன் கதிர்கள் தோன்றிய இடத்தினைப் பெற்று கணினியின் உதவியுடன் ஐசோடோப்புகள் உறுப்பில் உள்ள இடத்தினை தெளிவாகப் பெற முடிகிறது. தள கதிர்படத்தினையும் இணைத்து படம் பெறும் போது உறுப்பு அதில் புற்று அமைவிடம் இரண்டினையும் அறியமுடிகிறது. இம்முறை PET-CT எனப்படுகிறது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

Other Languages
Bahasa Indonesia: Tomografi emisi positron
íslenska: PET-skanni
srpskohrvatski / српскохрватски: Pozitronska emisiona tomografija
српски / srpski: Pozitronska emisiona tomografija