பணத்திற்கு செய்தி

பணத்திற்கு செய்தி அல்லது விளம்பரக் கட்டுரை (advertorial) என்பது செய்தி போல வெளியிடப்படும் விளம்பரம் ஆகும்.[1][2]

பதிப்பிக்கப்படும் செய்தித்தாள்களில் பொதுவாக நடுநிலையான, உண்மையான, தனிப்பட்ட கட்டுரை போன்று தங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கமாக உள்ளது. தொலைக்காட்சிகளில் சிறு தகவல் நிகழ்ச்சியாக அல்லது உரையாடல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும். வானொலியில் நேர்முகம் போன்று தகவல் தரப்படலாம். ஊடகவியல் நடத்தைகளின்படி இவை விளம்பரதாரர் செய்தி என அடிக்குறிப்பிடுதல் ஊடகங்களின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த தேவையானதாகும். சிலநேரங்களில் நாளிதழ்களில் தனி இணைப்பாகவும் இவை வழங்கப்படுகின்றன.

இந்தியா

இந்தியாவில் சில மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி சேவைகளையும் செய்தித்தாள்களையும் வழங்குவதால் செய்திகளுக்கும் விளம்பரங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்துள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கு புறம்பாக கூடுதல் பரப்புரை ஆற்ற செய்தித்தாள்களுக்கு பணம் கொடுத்து தங்கள் பரப்புரையை செய்தி போல வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது. 2011 தேர்தல்களின்போது "பணத்திற்கு செய்தி" ஓர் மரபு நயக்கேடாக காணப்பட்டது.[3] இது தேர்தல் விதிகளுக்குப் புறம்பானதாகவும் தவறிழைப்போருக்கு இரண்டாண்டுகள் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து வெளியிட்டுள்ளார். [4]

Other Languages
български: Рекламна статия
Deutsch: Advertorial
English: Advertorial
español: Publirreportaje
français: Publireportage
Bahasa Indonesia: Advertorial
日本語: 記事広告
Nederlands: Advertorial
svenska: Textreklam
中文: 業務配合