பட்டகம்

வெள்ளை ஒளிக்கதிர் ஒரு பட்டகத்தின் வழியாக புகுந்து வெளி வரும்பொழுது ஒளிப்பிரிகை நிகழ்கின்றது. வெள்ளை ஒளியில் இருக்கும் பல நிற ஒளிக்கதிர்கள் அவற்றின் அலைநீளத்திற்கு ஏற்றார் போல பல்வேறு கோணங்களில் விலகுகின்றன. இதனால் பல்நிறக் கதிர்கள் பிரிந்து ஒளிப்பிரிகை நிகழ்கின்றது. நீல ஒளி அதிக ஆற்றல் துடிப்புடையதால், அலை நீளம் குறைவானதாக்வும் இருக்கும். இது அதிக ஒளிவிலகலுக்கு உள்ளாகின்றது. சிவப்பு நிறக்கதிர் குறைந்த ஆற்றல் துடிப்புள்ளது, ஆகவே அதிக அலை நீளம் கொண்டது. இது குறைந்த ஒளிவிலகலுக்கு உள்ளாகின்றது. இவற்றைப் படத்தில் பார்க்கலாம்

ஒளியியலில், பட்டகம் அல்லது அரியம் என்பது ஒளியை அதனுள் அடங்கியிருக்கும் பல நிறங்களாக முறிவடையச் செய்வதற்கு, அல்லது அதனைத் தெறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். பொதுவாகப் புழங்கும் பட்டகம் முக்கோணப் பட்டகம் அல்லது முப்பட்டகம் எனப்படும். இது முக்கோண அடியையும் நீள்சதுரப் பக்கங்களையும் கொண்டது. சில பட்டகங்கள் மேற்படி வடிவத்தில் இருப்பதில்லை. இலங்கைப் பாடசாலைகளில் பட்டகம் என்ற சொல்லுக்குப் பதிலாக அரியம் என்ற கலைச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

ஒளி ஒரு ஊடகத்திலிருந்து (எகா: வளி) இன்னொரு அடர்த்தி கூடிய ஊடகத்துக்குள் அதன் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இல்லாத கோணத்தில் நுழையும்போது அது முறிவடைகிறது அல்லது தெறிக்கப்படுகிறது. ஒளிக்கதிர் மேற்கூறிய இரண்டு ஊடகங்களினதும் இடைமுகத்துடன் ஆக்கும் கோணத்திலும் (படு கோணம்), இரண்டு ஊடகங்களினதும் முறிவுக் குணகங்களினது அளவிலுமே ஒளி தெறிக்கப்படுமா அல்லது முறிவடையுமா என்பதும், எவ்வளவு முறிவு அல்லது தெறிப்பு நடைபெறும் என்பதும் தங்கியுள்ளது.முப்பட்டகம் , துருவப்படுத்துவதினால் ஒளிக்கதிர்களைச் சிதறச்செய்கிறது.

தெறிப்புப் பட்டகம் ஒளியைத் தெறிப்படையச் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆடிகளை விடப் பட்டகங்கள் இலகுவாகத் தயாரிக்கப்படக் கூடியவை என்பதனால் தூர நோக்கிகளில் (binoculars) பயன்படுத்தப்படுகின்றன. பரவச் செய்யும் பட்டகங்கள் ஒளியை அது கொண்டிருக்கும் பல்வேறு நிறங்களாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. வெண்ணிற ஒளி பல்வேறு அதிர்வெண்களைக் கொண்ட அலைகளின் கலவையாக இருக்கின்றது. பட்டகத்தினால் ஒளி முறிவடையும் அளவு வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஒளிக் கூறுகளுக்கு வெவ்வேறாக இருப்பதால் பட்டகத்தினால் ஒளிக்கூறுகள் அவற்றின் அதிர்வெண்களுக்கு ஏற்பப் பிரிக்கப் படுகின்றன. நீல ஒளியில் சிவப்பு ஒளியிலும் கூடுதலாக வேகக் குறைவு ஏற்பட்டுக் கூடுதல் முறிவு ஏற்படுகின்றது. முனைவாக்கும் பட்டகங்கள் என அழைக்கப்படும் பட்டகங்களும் உள்ளன. இவை ஒளிக் கற்றைகளை வெவ்வேறு முனைவாக்கம் கொண்ட கூறுகளாகப் பிரிக்கின்றன.

Other Languages
asturianu: Prisma (óptica)
башҡортса: Призма (оптика)
български: Призма (оптика)
brezhoneg: Kengereg
bosanski: Prizma (optika)
català: Prisma òptic
čeština: Optický hranol
Ελληνικά: Πρίσμα (οπτική)
English: Prism
Esperanto: Prismo (optiko)
euskara: Prisma optiko
فارسی: منشور
français: Prisme (optique)
贛語: 三稜鏡
हिन्दी: प्रिज़्म
hrvatski: Prizma (optika)
magyar: Prizma
Bahasa Indonesia: Prisma (optik)
íslenska: Glerstrendingur
日本語: プリズム
Patois: Prizim
ಕನ್ನಡ: ಅಶ್ರಕ
한국어: 프리즘
lietuvių: Prizmė
latviešu: Prizma (optika)
മലയാളം: പ്രിസം
मराठी: लोलक
Bahasa Melayu: Prisma
Malti: Priżma
Nederlands: Prisma (optica)
norsk nynorsk: Optisk prisme
ਪੰਜਾਬੀ: ਰੰਗਾਵਲ
polski: Pryzmat
Piemontèis: Prisma (òtica)
português: Prisma (óptica)
Scots: Prism
srpskohrvatski / српскохрватски: Prizma (optika)
Simple English: Prism (optics)
slovenčina: Optický hranol
slovenščina: Optična prizma
српски / srpski: Призма (оптика)
Basa Sunda: Prisma (optik)
తెలుగు: పట్టకం
Türkçe: Prizma (optik)
татарча/tatarça: Призма (оптика)
українська: Призма (оптика)
oʻzbekcha/ўзбекча: Dispersion prizmalar
Tiếng Việt: Lăng kính
中文: 稜鏡
粵語: 三稜鏡