நேபாள மக்கள் புரட்சி

நேபாள மக்கள் புரட்சி அல்லது நேபாள உள்நாட்டுப் போர் என்பது நேபாளத்தின் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உருவாக்கும் நோக்குடன் மாவோயிசவாத போராளிகளால் நடத்தப்படும் போராகும். இது 1996 பிப்ரவரி 13 இல் ஆரம்பிக்கப்பட்டது. சமவுடமைவாத போராளிகள் இப்போரை "நேபாள மக்கள் போராட்டம்" என அழைக்கின்றார்கள்.

இப்போராளிகள் "மக்கள் நேபாள குடியரசு" என்ற இலக்கை கொண்டுள்ளார்கள் தற்சமயம் நேபாளத்தின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். 1998 ஜூன் தொடக்கம் ஆகஸ்டு வரை அப்போதைய பிரதமர் செர் பகதூர் தேவ்பாவினால், போராளிகளை கைப்பற்றி அழிக்கும் நோக்குடன் நடைமுறைப் படுத்தப்பட்ட "கிலோ சேரா 2" என்ற மூர்க்கமான நடவடிக்கை காரணமாக போராளிகள் தலைமறைவாகினர் மேலும் போராட்டம் வலுக்கவும் வழிவகுத்தது. 2001 இல் நேபாள மன்னர் மாவோயிச போராளிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். அது முதல் 12,700க்கும் மேற்பட்டவர்கள்[1] இறந்தும் 100,000 - 150,000 பேர்வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.இப்போராட்டம் நேபாளத்தின் கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவதோடு நேபாள மக்களிடையே பெரும் சிக்கலான சமூக சிக்கல்களுக்கும் வித்திட்டுள்ளது.

Other Languages