தோபா ஏரி

தோபா ஏரி
Toba Landsat satellite image.jpg
அமைவிடம் வடசுமாத்திரா, இந்தோனேசியா
ஆள்கூறுகள் 2°41′04″N 98°52′32″E / 2°41′04″N 98°52′32″E / 2.6845; 98.8756
வகை எரிமலை/ புவி மேலோடு
ஆசாஹான் ஆறு (Asahan River)
வடிநில நாடுகள் இந்தோனேசியா
அதிகபட்ச நீளம் 100 km (62 mi)
அதிகபட்ச அகலம் 30 km (19 mi)
மேற்பரப்பு 1,130 km2 (440 sq mi)
சராசரி ஆழம் 500 மீட்டர்
அதிகபட்ச ஆழம் 505 m (1,657 ft) [1]
நீர் அளவு 240 km3 (58 cu mi)
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் 905 m (2,969 ft)
Islands சமோசர் தீவு (Samosir Island)
குடியேற்றங்கள் அம்பரிட்டா, பாங்குரான் (Ambarita, Pangururan)
உசாத்துணை [1]

தோபா ஏரி (Lake Toba) ( இந்தோனேசிய மொழி: Danau Toba) [2] எனப்படும் பேரேரி, தென்கிழக்காசியா பிராந்தியத்தின் இந்தோனேசிய நாட்டின் சுமாத்திராவில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 கிலோமீட்டர் (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, 2°53′N 98°31′E / 2.88°N 98.52°E / 2.88; 98.52 தொடங்கி- 2°21′N 99°06′E / 2°21′N 99°06′E / 2.35; 99.1 முடிய, இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திராவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 மீட்டர் (2.953 அடி) உயர்வுடன் காணப்படுவதோடு, இந்தோனேசியப் பேரேரியாகவும், உலகின் [3] மிகப்பெரிய எரிமலை ஏரியாகவும் (volcanic lake) அறியப்படுகிறது.

2015ன்படி, இது 69,000-77,000 ஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 எனக் கணக்கிடப்பட்ட அளவிலான மாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது. [4] [5] [6] மேலும், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்புகளில் இதுவே மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும். தோபாப் பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. [7] மழைக்காலங்களில், தோபா எரிமலையின் இடைப்பட்ட பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல், 5 டிகிரி வரையிலும் °C (5.4 to 9.0 °F) அதிகபட்ச வெப்பநிலை 15 °C (27 °F) நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலையில் மிகவும் குறைவாகும். [8] கூடுதல் ஆய்வறிக்கையின்படி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, மலாவி ஏரி (Lake Malawi) பகுதியில் தோபா எரிமலை உமிழ்வுகளிலிருந்து கணிசமான சாம்பல் கொட்டபடுவதாக காட்டுகின்றன அதேநேரம் நீண்டதூரம் உள்ள கிழக்காப்பிரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க காலநிலை விளைவுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது. [9]

நில பண்பியல்

தோபா ஏரியின் 3டி படிமம் 2012

வடக்கு சுமாத்திராவில் உள்ள டோபா எரிமலை, அகன்றவாய் கொண்ட சிக்கலான பேரெரிமலையாகவும், நான்கு எரிமலைவாய்கள் பிணைந்து தோற்றமளிக்கிறது. [10] நான்காவது மற்றும் இளைய எரிமலை பிளவின் அளவு 100 க்கு-30 கிலோமீட்டர் அதாவது (62க்கு-19 மைல்கள்) [11] இது உலகின் மிகபெரிய அகன்ற எரிமலைவாய்ப்புறமாகும் என்பது ஆய்வில் அறிந்த தகவல், மேலும் மற்ற மூன்று பழைய எரிமலைவாய்களை இடைவெட்ட தாங்கி நிற்கிறது. இளைய தோபா பாறை எனப்படும் எரிமலை உமிழ்ந்த பொருள் அடர்ந்த பாறை, தற்போதைய புவியியல் ஆய்வு மதிப்பீட்டீன்படி 2,800 கி.மீ 3 (670 கன மைல்)(7.8195091 × 1024 m6) இது சமிபத்திய புவியியல் வரலாற்றில் மிகபெரிய எரிமலை உமிழ்வுகள் என்று வெளியிட்டுள்ளது. [12] இந்த வெடிப்பு தொடர்ந்து மீண்டெழும் குவிமாடமாகும், ஒரு நீண்ட பிளவிடை பள்ளம் பிரிக்கப்பட்ட இரண்டு அரை குவிமாடங்கள் சேர்ந்து, புதிதாக அகன்ற எரிமலைவாய் உருவானதாக அறியப்படுகிறது. [13]

இதற்க்கு குறைந்தது நான்கு கூம்புகள், இந்த நான்கும் அடுக்கப்பட்ட எரிமலைபோல் காணபடுவதோடு, அதில் மூன்று பெருங்குழிகள் ஏரியில் தெரிகிறது. வடமேற்கில் இருக்கும் அகன்ற எரிமலைவாய் சிதறியுள்ள கூம்பு விளிம்புகளில் பெரும்பகுதி தாவரங்களால் சூழப்பட்டுள்ளது, இது பந்நூறு ஆண்டுகளாக இளம் வயதாகவே பரிந்துரைக்கின்றது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 1971 மீட்டர் உயரத்தில் புசுபுகிட்(Pusubukit) ஹில் மையம் (Hill Center) உள்ளது, மற்றும் அகன்ற எரிமலைவாய் தெற்கு விளிம்பு பகுதியில் ஒரு சொல்பாடரிகல்லி (solfatarically) என்கிற நிலபண்பியல் சரணாலயம் அமைந்துள்ளது. [14] [15]

தோபா ஏரியின் தோற்றம்
தோபா ஏரியின் நாசா செயற்கைக்கோள் படிமம்
Other Languages
العربية: بحيرة توبا
беларуская: Тоба
বাংলা: টোবা হ্রদ
català: Llac Toba
čeština: Toba
Чӑвашла: Тоба (кӳлĕ)
Cymraeg: Llyn Toba
dansk: Tobasøen
Deutsch: Tobasee
Ελληνικά: Λίμνη Τόμπα
English: Lake Toba
Esperanto: Toba
español: Lago Toba
eesti: Toba järv
suomi: Toba
français: Lac Toba
עברית: אגם טובה
हिन्दी: तोबा झील
hrvatski: Toba (jezero)
magyar: Toba-tó
Հայերեն: Տոբա
Bahasa Indonesia: Danau Toba
íslenska: Tobavatn
italiano: Lago Toba
日本語: トバ湖
Basa Jawa: Tlaga Toba
ქართული: ტობა (ტბა)
한국어: 토바 호
latviešu: Tobas ezers
Baso Minangkabau: Danau Toba
македонски: Тоба (езеро)
മലയാളം: ടോബ തടാകം
Bahasa Melayu: Danau Toba
Nederlands: Tobameer
norsk: Toba
ਪੰਜਾਬੀ: ਤੋਬਾ ਝੀਲ
português: Lago Toba
русский: Тоба (озеро)
Scots: Loch Toba
Simple English: Lake Toba
slovenčina: Toba (jazero)
српски / srpski: Тоба (језеро)
Basa Sunda: Dano Toba
svenska: Tobasjön
Tagalog: Lawa ng Toba
татарча/tatarça: Тоба (күл)
українська: Тоба (озеро)
Tiếng Việt: Hồ Toba
მარგალური: ტობა (ტობა)
中文: 多巴湖