தொடர்வண்டி

தொடர்வண்டி
பழங்காலத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் தண்டவாளத்தில் ஓடும் வண்டி

தொடர்வண்டி அல்லது தொடரி (ஆங்கிலம்: Train) என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும் இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், ஒற்றைத் தண்டூர்திகளுக்காகவும், காந்தமிதவுந்துகளுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு.[1] இழுத்தல் என்ற பொருள் கொண்ட trahiner என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு trahere என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.[2]

குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இரயில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழுவிசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன.

மிகுவிரைவு தொடர்வண்டி பாரிசில் இருந்து புறப்படும் காட்சி

பயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம் 500 கிமீ / மணி ஆகும். இச்செயல்பாட்டை அடைவதற்கு, புதுமையான காந்தத்தால் மிதக்கும் தொழில்நுட்பம் மூலம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் போன்ற பெரும்பாலான நாடுகளில், ஒரு டிராம்வே மற்றும் இரயில் இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒளி ரயில் என்பது சில நேரங்களில் நவீன டிராம் அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Other Languages
Аҧсшәа: Адәыҕба
Afrikaans: Trein
Alemannisch: Zug (Eisenbahn)
አማርኛ: ባቡር
aragonés: Tren
العربية: قطار
مصرى: اطر
asturianu: Tren
azərbaycanca: Qatar
башҡортса: Поезд
žemaitėška: Traukėnīs
беларуская: Цягнік
беларуская (тарашкевіца)‎: Цягнік
български: Влак
भोजपुरी: रेलगाड़ी
বাংলা: রেলগাড়ি
བོད་ཡིག: མེ་འཁོར།
brezhoneg: Tren
bosanski: Voz
буряад: Поезд
català: Tren
Mìng-dĕ̤ng-ngṳ̄: Huōi-chiă
нохчийн: ЦӀерпошт
Tsetsêhestâhese: Ma'aataemeo'o
čeština: Vlak
Cymraeg: Trên
dansk: Tog
Zazaki: Trene
Ελληνικά: Τρένο
emiliàn e rumagnòl: Trein
English: Train
Esperanto: Trajno
español: Tren
eesti: Rong
euskara: Tren
فارسی: قطار
suomi: Juna
Võro: Rong
føroyskt: Tok
français: Train
furlan: Tren
Frysk: Trein
Gaeilge: Traein
贛語: 火車
Gàidhlig: Trèana
galego: Tren
Avañe'ẽ: Mba'yjua
Gaelg: Traen
客家語/Hak-kâ-ngî: Fó-chhâ
עברית: רכבת
हिन्दी: रेलगाड़ी
hrvatski: Vlak
Kreyòl ayisyen: Tren
magyar: Vonat
հայերեն: Գնացք
interlingua: Traino
Bahasa Indonesia: Kereta api
íslenska: Járnbrautarlest
italiano: Treno
日本語: 列車
Patois: Chrien
Basa Jawa: Sepur
Qaraqalpaqsha: Poyezd
Taqbaylit: Tamacint
Kabɩyɛ: Suluku kpɛyaɣ
Kongo: Lukalu
қазақша: Пойыз
한국어: 열차
kurdî: Trên
kernowek: Tren
Кыргызча: Поезд
Latina: Tramen
Ladino: Tréno
Lëtzebuergesch: Zuch
Limburgs: Trein
Ligure: Trêno
lumbaart: Treno
lingála: Engbunduka
ລາວ: ລົດໄຟ
lietuvių: Traukinys
latviešu: Vilciens
Basa Banyumasan: Sepur
мокшень: Кигель
Malagasy: Fiarandalamby
македонски: Воз
മലയാളം: തീവണ്ടി
монгол: Галт тэрэг
मराठी: रेल्वे
Bahasa Melayu: Kereta api
မြန်မာဘာသာ: မီးရထား
эрзянь: Кшниулав
Napulitano: Trieno
Nedersaksies: Traain
नेपाल भाषा: रेल
Nederlands: Trein
norsk nynorsk: Jarnbanetog
Nouormand: Train
occitan: Tren
ਪੰਜਾਬੀ: ਰੇਲ
Deitsch: Dreen
Norfuk / Pitkern: Trien
polski: Pociąg
پنجابی: ٹرین
پښتو: اورگاډی
português: Trem
Runa Simi: Antakuru
Romani: Gadi
română: Tren
русский: Поезд
sardu: Trenu
sicilianu: Trenu
Scots: Train
srpskohrvatski / српскохрватски: Vlak
Simple English: Train
slovenčina: Vlak
slovenščina: Vlak
chiShona: Chitima
Soomaaliga: Tareen
shqip: Treni
српски / srpski: Воз
svenska: Tåg
Kiswahili: Treni
ślůnski: Cug
తెలుగు: రైలు
ไทย: รถไฟ
Tagalog: Tren
Türkçe: Tren
татарча/tatarça: Поезд
українська: Поїзд
اردو: ریل گاڑی
oʻzbekcha/ўзбекча: Poyezd
vepsän kel’: Jonuz
Tiếng Việt: Tàu hỏa
West-Vlams: Tring
Winaray: Tren
吴语: 铁路列车
isiXhosa: Uloliwe
ייִדיש: באן
Vahcuengh: Hojceh
中文: 鐵路列車
Bân-lâm-gú: Lia̍t-chhia
粵語: 火車