தேர்ப் பந்தயம்

நவீன தேர்ப் பந்தயம்்

தேர்ப் பந்தயம் (Chariot racing) (கிரேக்கம்: ἁρματοδρομία harmatodromia, இலத்தீன்: ludi circenses) என்பது உரோமைப் பேரரசு ,பண்டைக் கிரேக்கம் மற்றும் பைசாந்தியப் பேரரசுகளில் விளையாடப்பட்ட ஒரு பிரபலமான விளையாட்டு ஆகும். இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். ஏனெனில் இந்த விளையாட்டுக்களில் குதிரைகளுக்கும் அதில் சவாரி செய்யும் வீரர்களுக்கும் அதீத காயங்கள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் இறப்பும் ஏற்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியைக் காணும் பார்வையாளர்களுக்கு இது ஒரு ஆர்வத்தினையும் பெரும் மகிழ்ச்சியையும் தருகிறது. மற்ற விளையாட்டுப் போட்டிகளைக் காண பெண்களுக்குத் தடை இருந்த காலத்திலும் இதனைப் பெண்களும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். உரோமைப் பேரரசு கால தேர்ப் பந்தயங்களில் சூதாட்டக்காரர்களின் அணிகளுக்கு இடையில் போட்டி நடந்தது. ஆனால் நவீன கால தேர்ப் பந்தயம் என்பது கால்பந்தாட்டம் போன்று தனக்கு விருப்பமானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளது.

உரோமைப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்த விளையாட்டு அதன் முக்கியத்துவத்தினை இழக்கத் துவங்கியது. பைசாந்தியப் பேரரசு காலத்தில் இந்தப் போட்டியானது நடந்துகொண்டிருந்தது. நிகா போராட்டம் காரணமாக தேர்ப் பந்தய விளையாட்டு சிதையத் துவங்கியது.

Other Languages
čeština: Tethrippon
Deutsch: Wagenrennen
Esperanto: Ĉara konkurso
français: Course de chars
hrvatski: Utrke dvokolica
Bahasa Indonesia: Balap kereta perang
italiano: Corsa dei carri
日本語: 戦車競走
한국어: 전차 경주
македонски: Трки со двоколки
Nederlands: Wagenrennen
português: Corrida de bigas
srpskohrvatski / српскохрватски: Utrke dvokolica
slovenščina: Dirkanje z vozovi
اردو: رتھ دوڑ