தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)

இந்தக் கட்டுரை கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கம் பற்றியது. மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு, உரோமன் கத்தோலிக்க மரியாளியல் என்பதைப் பாருங்கள். பொது பார்வைக்கு, மரியாள் (இயேசுவின் தாய்) என்பதைப் பாருங்கள்.
தூய கன்னி மரியா
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கமானது கத்தோலிக்க வழிப்பாட்டின் இன்றியமையா ஒன்றாகும் என்கிறது.[1]
கடவுளின் தாய், திருச்சபையின் தாய், ஆசி பெற்றவர் மேலும் பல
பிறப்புசெப்டம்பர் 8
இறப்புஆகஸ்ட் 15 (விண்ணேற்பு)
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்புனித மரியா பேராலயம் மற்றும் பல
திருவிழா

மரியாளுக்கு 25-க்கும் மேற்பட்ட விழா நாட்கள் உள்ளன. அவற்றுள் சில:மார்ச் 25 – கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

ஆகஸ்டு 15மரியாவின் விண்ணேற்பு
சித்தரிக்கப்படும் வகைகுழந்தை இயேசுவை தாங்கியவாறு


கத்தோலிக்க திருச்சபையில் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கமானது கத்தோலிக்க மரபு, மறையுண்மைகள் மற்றும் விவிலிய அடிப்படையிலானது.[2] கடவுளான இயேசு மரியாவின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார். கி.பி 431இல் நிகழ்த எபேசு பொதுச்சங்கத்திலிருந்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வரையும், அதனைக்கடந்தும் மரியா கடவுளின் தாய் எனவும், திருச்சபையின் தாய் எனவும் போற்றப்படுகின்றார். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தனது மீட்பரின் தாய் (Redemptoris Mater) என்னும் சுற்றுமடலில் மரியாவை திருச்சபையின் தாய் என அழைத்துள்ளார்.