திணிவு

பொருண்மை அல்லது திணிவு (தமிழக வழக்கு: நிறை[1], Mass) என்பது, இயற்பியலில் உள்ள அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது ஒரு பண்டத்தில் எவ்வளவு பொருள் அளவு இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, மரபார்ந்த விசையியலுக்கும் அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஓர் அடிப்படைக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலில் பொருண்மைக்குப் பல வரையறைகள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், பொருண்மை பற்றிய செவ்வியற்கால எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாப்பொருண்மை என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை.

அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, எடை (weight) ஆகிய இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால், இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருள் ஆட்படும் புவியீர்ப்பு விசையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இதனால், இந்நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு விசையில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பாகவும், விண்வெளி, வேறு கோள்கள் போன்ற வான்பொருளின் மேற்பரப்புசார் இடங்களிலும், திணிவுக்கும் எடைக்கும் உள்ள வேறுபாடு முதன்மை பெறுகின்றது.

நியூட்டனியல் இயற்பியலில், பொருண்மை ஒருளில் உள்ள பொருண்மத்தின் அளவாகப் பொதுமைப்படுத்தப்படுகிறது. என்றாலும், பொருளின் மிக உயர்ந்த வேகங்களில், சிறப்புச் சார்புக் கோட்பாடு பொருளின் இயக்க ஆற்றல் பொருண்மையின் கணிசமான கூடுதல் வாயிலாக அமைவதாக்க் கூறுகிறது. எனவே, நிலையாகவுள்ள பொருளின் பொருண்மை அதற்குச் சமனான ஆற்றல் அளவைப் பெற்றுள்ளது. மேலும் ஆற்றலின் அனைத்து வடிவங்களும் முடுக்கத்தை எதிர்க்கின்றன; எனவே ஈர்ப்பு விசையைப் பெற்றுள்ளன. நிகழ்கால இயற்பியலில், வரையறுக்கவியலாமையால், பொருண்மம் ஓர் அடிப்படை கருத்துப்படிமமாக்க் கொள்ளப்படுவதில்லை.

பொருண்மையை அளக்க பல தெளிவான நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம். சில கோட்பாட்டாளர்கள் இவை ஒன்றையொன்று சாரதனவாகவும் கருதுகின்றனர்.[2] நடப்பு செய்முறைகள், பின்வரும் எந்தமுறையில் பொருண்மையை அளந்தாலும் முடிவுகள் மாறுவதில்லையென நிறுவியுள்ளன:

  • உறழ்வுப் பொருண்மை (Inertial mass) என்பது ஒரு விசையால் பொருளில் உருவாகும் முடுக்கத்துக்கு பொருள் ஆற்றும் உறழ்வை அதாவது தடுதிறத்தை அளக்கிறது (இது F = ma எனும் உறவால் குறிக்கப்படுகிறது).
  • முனைவுறு ஈர்ப்புப் பொருண்மை பொருளால் உருவாகும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.
  • செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை குறிப்பிட்ட ஈர்ப்புப் புலம் ஒரு பொருளின் மேல் விளைவிக்கும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.

ஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான m பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் F எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் a F/m ஆல் தரப்படும்.ஒரு பொருளின் பொருண்மை ஈர்ப்புப் புலத்தை உருவாக்கும் அல்லது அதனால் விளைவுக்குள்ளாகும் அளவையும் கூடத் தீர்மானிக்கிறது. mA பொருண்மையுள்ள முதல் பொருளில் இருந்து, mB பொருண்மையுள்ள இரண்டாம் பொருள் r (பொருண்மை மையத்தில் இருந்து பொருண்மை மையத்துக்கு இடையிலான) தொலைவில் வைக்கப்பட்டால் இவற்றில் ஒவ்வொரு பொருளும்

Fg = GmAmB/r2}} 

ஈர்ப்பு விசைக்கு ஆட்படும். இங்கு, G = 6.67×10−11 N kg−2 m2}} ஆகும். இது "பொது ஈர்ப்பு மாறிலி" எனப்படுகிறது. இது சில வேளைகளில் ஈர்ப்புப் பொருண்மை எனப்படுகிறது.[note 1] 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட செய்முறைகள் உறழ்வுப் பொருண்மையும் ஈர்ப்புப் பொருண்மையும் முற்றொருமித்தன என்பதை நிறுவியுள்ளன; 1915 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோக்கீடு பொதுச் சார்புக் கோட்பாட்டின் சமன்மை நெறிமுறையில் அடிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது.

Other Languages
Afrikaans: Massa
Alemannisch: Masse (Physik)
አማርኛ: ግዝፈት
aragonés: Masa
العربية: كتلة
অসমীয়া: ভৰ
asturianu: Masa
башҡортса: Масса
Boarisch: Massn
беларуская: Маса
беларуская (тарашкевіца)‎: Маса
български: Маса
বাংলা: ভর
brezhoneg: Mas
bosanski: Masa
буряад: Масса
català: Massa
Mìng-dĕ̤ng-ngṳ̄: Cék-liông
کوردی: بارستە
čeština: Hmotnost
Cymraeg: Màs
Ελληνικά: Μάζα
English: Mass
Esperanto: Maso
español: Masa
eesti: Mass
euskara: Masa
estremeñu: Massa
suomi: Massa
français: Masse
Nordfriisk: Mase
Gaeilge: Mais
贛語: 質量
Gàidhlig: Tomad
galego: Masa
Avañe'ẽ: Mba'era'ã
ગુજરાતી: દ્રવ્યમાન
Gaelg: Glout
客家語/Hak-kâ-ngî: Tsṳt-liông
עברית: מסה
हिन्दी: द्रव्यमान
Fiji Hindi: Mass
hrvatski: Masa
Kreyòl ayisyen: Mas inèsi
magyar: Tömeg
հայերեն: Զանգված
Bahasa Indonesia: Massa
Ilokano: Masa
Ido: Maso
íslenska: Massi
italiano: Massa (fisica)
日本語: 質量
Patois: Mas
Basa Jawa: Massa
ქართული: მასა
Kabɩyɛ: Hɩlɩmɩyɛ
қазақша: Масса
한국어: 질량
Ripoarisch: Masse
kurdî: Bariste
Кыргызча: Масса
Latina: Massa
Lëtzebuergesch: Mass (Physik)
Lingua Franca Nova: Masa
Limburgs: Massa
lumbaart: Massa
lingála: Libóndó
lietuvių: Masė
latviešu: Masa
македонски: Маса (физика)
മലയാളം: പിണ്ഡം
монгол: Масс
मराठी: वस्तुमान
Bahasa Melayu: Jisim
မြန်မာဘာသာ: ဒြပ်ထု
Plattdüütsch: Masse (Physik)
नेपाली: पिण्ड
norsk nynorsk: Masse
norsk: Masse
Novial: Mase
occitan: Massa
ਪੰਜਾਬੀ: ਪੁੰਜ
Piemontèis: Massa (fìsica)
پنجابی: وزن
português: Massa
Runa Simi: Wisnu
română: Masă
русский: Масса
русиньскый: Маса
sicilianu: Massa
Scots: Mass
srpskohrvatski / српскохрватски: Masa
සිංහල: ස්කන්ධය
Simple English: Mass
slovenčina: Hmotnosť
slovenščina: Masa
chiShona: Huremu
Soomaaliga: Cuf
shqip: Masa
српски / srpski: Маса
Seeltersk: Masse
Basa Sunda: Massa
svenska: Massa
Kiswahili: Masi
ślůnski: Masa
తెలుగు: ద్రవ్యరాశి
тоҷикӣ: Масса
ไทย: มวล
Tagalog: Masa
Türkçe: Kütle
татарча/tatarça: Massa
українська: Маса
اردو: کمیت
oʻzbekcha/ўзбекча: Massa
vèneto: Masa
Tiếng Việt: Khối lượng
Winaray: Masa
吴语: 質量
ייִדיש: מאסע
中文: 质量
Bân-lâm-gú: Chit-liōng
粵語: 質量