ஞானி (எழுத்தாளர்)

இந்த கட்டுரை கோவையைச் சேர்ந்த எழுத்தாளரைப் பற்றியது. For அரசியல் விமர்சகருக்கு, see ஞாநி (எழுத்தாளர்).

ஞானி (பிறப்பு: சூலை 1, 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.

ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.

Other Languages