ஜோசப் ஹென்றி

ஜோசப் ஹென்றி
Joseph Henry (1879).jpg
பிறப்புதிசம்பர் 17, 1797(1797-12-17)
ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்), ஐ.அ
இறப்புமே 13, 1878(1878-05-13) (அகவை 80)
வாசிங்டன், டி. சி., ஐ.அ
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்அல்பனி அகாதமி
அறியப்படுவதுமின்காந்தத் தூண்டல், மின்னியல் வாயில்மணிக்கும் உணாத்திக்கும் முன்னோடியை கண்டுபிடித்தவர்
சமயம்பிரெசுபைட்டீரிய திருச்சபை
வாழ்க்கைத்
துணை
ஹாரியத் ஹென்றி (முன்னர் அலெக்சாண்டர்)
பிள்ளைகள்வில்லியம் அலெக்சாண்டர் (1832–1862)
மேரி அன்னா (1834–1903)
ஹெலன் லூயிசா (பி. 1836)
கரோலின் (பி. 1839)
மின்னியலுக்கான ஹென்றியின் பங்களிப்பை நினைவுகூறுமுகமாக அகாதமி பூங்காவில் (ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)) உள்ள அறிவிக்கைப் பலகை.

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry, திசம்பர் 17, 1797 – மே 13, 1878) இசுமித்சோனியன் கழகத்தின் முதல் செயலாளராகவும் இந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் ஊக்குவிற்பிற்கான தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார்.[1] தமது வாழ்நாளில் மிகவும் மதிக்கப்பட்டவராக விளங்கினார். மின்காந்தங்களை உருவாக்குகையில் மின்காந்தவியல் நிகழ்வான தன்-தூண்டத்தை கண்டறிந்தார். தவிரவும் மைக்கேல் பரடே(1791-1867) கண்டறிந்த பரிமாற்றத் தூண்டலை தானும் தன்னிச்சையாக கண்டறிந்தவர்; இருப்பினும் பரடேதான் தனது ஆய்வை முதலில் வெளியிட்டவர்.[2][3] ஹென்றி மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கினார். மின்சார வாயிற்மணிக்கு (குறிப்பாக மின் கம்பி வழியாக சற்றுத்தொலைவில் இருக்கும் மணியை ஒலிக்கச் செய்தல்,1831) முன்னோடியானதொரு கருவியை உருவாக்கினார். [4] மின்சார உணாத்தியின் முன்னோடியையும் (1835) வடிவமைத்தார்.[5] தூண்டத்திற்கான அனைத்துலக அலகான என்றி இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவர் உருவாக்கிய மின்காந்த உணாத்திகளே சாமுவேல் மோர்சும், (1791-1872) சேர் சார்லசு வீட்சுடோனும் (1802-1875) தனித்தனியே கண்டறிந்த நடைமுறை மின்சாரத் தந்திக்கு அடித்தளமாயிற்று.

மேற்சான்றுகள்

  1. "Planning a National Museum". Smithsonian Institution Archives. பார்த்த நாள் 2 January 2010.
  2. Ulaby, Fawwaz (2001-01-31). Fundamentals of Applied Electromagnetics (2nd ). Prentice Hall. பக். 232. ISBN 0-13-032931-2. 
  3. "Joseph Henry". Distinguished Members Gallery, National Academy of Sciences. பார்த்த நாள் 2006-11-30.
  4. Scientific writings of Joseph Henry, Volume 30, Issue 2. Smithsonian Institution. 1886. பக். 434. http://books.google.com/books?id=w6cKAAAAIAAJ&pg=PA434&lpg=PA434&dq=%22joseph+henry%22+%22i+arranged+around+one+of+the+upper+rooms%22&source=bl&ots=_Cfy9EEoIK&sig=dhoJ0Ox6SINDh6N02cxqjomU2jU&hl=en&sa=X&ei=BuBtUOKYD4T68gTr14HoDw&ved=0CDQQ6AEwBA#v=onepage&q=%22joseph%20henry%22%20%22i%20arranged%20around%20one%20of%20the%20upper%20rooms%22&f=false. 
  5. "The electromechanical relay of Joseph Henry". Georgi Dalakov.
Other Languages
العربية: جوزيف هنري
беларуская: Джозеф Генры
беларуская (тарашкевіца)‎: Джозэф Гэнры
български: Джоузеф Хенри
bosanski: Joseph Henry
català: Joseph Henry
čeština: Joseph Henry
Deutsch: Joseph Henry
Ελληνικά: Τζόζεφ Χένρι
English: Joseph Henry
Esperanto: Joseph Henry
español: Joseph Henry
euskara: Joseph Henry
فارسی: جوزف هنری
français: Joseph Henry
Gaeilge: Joseph Henry
עברית: ג'וזף הנרי
hrvatski: Joseph Henry
Kreyòl ayisyen: Joseph Henry
magyar: Joseph Henry
հայերեն: Ջոզեֆ Հենրի
interlingua: Joseph Henry
italiano: Joseph Henry
ភាសាខ្មែរ: ចូសេហ្វ ហិនរី
한국어: 조지프 헨리
latviešu: Džozefs Henrijs
македонски: Џозеф Хенри
Nederlands: Joseph Henry
norsk nynorsk: Joseph Henry
ਪੰਜਾਬੀ: ਜੋਸਫ ਹੈਨਰੀ
polski: Joseph Henry
Piemontèis: Joseph Henry
پنجابی: جوزف ہنری
português: Joseph Henry
română: Joseph Henry
русский: Генри, Джозеф
srpskohrvatski / српскохрватски: Joseph Henry
Basa Sunda: Joseph Henry
svenska: Joseph Henry
Tagalog: Joseph Henry
Türkçe: Joseph Henry
українська: Джозеф Генрі
Tiếng Việt: Joseph Henry