ஜுராசிக் வேர்ல்ட்

ஜுராசிக் வேர்ல்ட்
திரைப்பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்குனர்கோலின் திரெவாரோ
தயாரிப்பாளர்
 • பிராங்கு மார்சல்
 • பேட்ரிக் குரோவ்லி
கதை
 • டெரெக் கான்னோல்லி
 • கோலின் ட்ரெவாரோ
 • ரிக் ஜாஃபா
 • அமண்டா சில்வர்
மூலக்கதைCharacters created -
மைக்கேல் கிரைட்டன்
இசையமைப்பு
 • மைக்கேல் கியாச்சினோ
 • ஜோன் வில்லியம்ஸ் (கருப்பொருள் இசை)
நடிப்பு
 • கிறிசு பிராடு
 • பிரைசு தல்லசு ஹோவார்டு
 • வின்சென்ட் டி'ஒனோஃப்ரியோ
 • டை சிம்ப்கின்ஸ்
 • நிக் இராபின்சன்
 • ஒமர் சை
 • இர்ஃபான் கான்
 • ஜேக் ஜோன்சன்
 • பி.டி. வோங்
 • பிரையன் டீ
ஒளிப்பதிவுஜான் சுவார்ட்ஸசுமேன்
படத்தொகுப்புகெவின் சிடிட்டு
கலையகம்லேகேண்டரி பிக்சர்ஸ்
ஆம்ப்லின் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 29, 2015 (லெ கிராண்ட் ரெக்ஸ்)
ஜூன் 12, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
கால நீளம்124 மணித்துளிகள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு
 • $15 கோடி (மொத்தம் ) (gross)[1]
 • $12.93 கோடி (நிகரம்) (net)[1]
மொத்த வருவாய்$167.2 கோடி [2]

ஜுராசிக் வேர்ல்ட் (ஆங்கிலம்:Jurassic World) என்பது 2015ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் இரண்டாம் முத்தொகுதியின் முதல் படமும், ஒட்டுமொத்த தொடரின் நான்காம் படமும் ஆகும்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநராகவும் இணை எழுத்தாளராகவும் கோலின் திரெவாரோ செயல்பட்டுள்ளார். பிராங் மார்சல் மற்றும் பேட்ரிக்கு குரோவ்லி ஆகியோர் தயாரித்துள்ளனர். கிறிசு பிராடு, பிரைசு தல்லசு ஹோவார்டு முதலானோர் நடித்துள்ளனர். இத்தொடரின் ஏனைய படங்களுக்குப் பொறுப்பேற்ற ஆம்ப்லின் என்டேர்டைன்மென்ட்-ட்டும் (ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் நிறுவனம்) தாமஸ் டல்- இன் லெஜண்டரி பிக்சர்ஸும் இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றன.

ஜுராசிக் பார்க் சம்பவம் நிகழ்ந்து 22 ஆண்டுகளுக்குப் பின் அதே ஈஸ்லா நுப்லார் தீவில் இப் படத்தின் கதை நடைபெறுகிறது. படியெடுப்பு முறையில் மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களை அங்கு பத்தாண்டுகளாக காட்சிப்படுத்தி வந்த கருத்தியல் பூங்கா, மரபணு மாற்றப்பட்ட ஒரு தொன்மாவால் அழிவைச் சந்திக்கிறது.

யுனிவெர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், 2005 கோடையில் வெளியிடும் நோக்குடன் 2004-இல் நான்காம் ஜுராசிக் பார்க் படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது. எனினும் திரைக்கதை தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட நிலையில் இப் படம் ஒரு தசாப்தம் முடக்கத்தில் இருந்தது. ஸ்பில்பேர்க்கின் ஆலோசனையைத் தொடர்ந்து, திரை எழுத்தாளர்கள் ரிக் ஜாஃபாவும் அமண்டா சில்வரும் செயல்பாடுடைய ஒரு தொன்மாப் பூங்கா பற்றிய சாத்தியத்தை ஆராய்ந்தனர். 2013-இல் ட்ரெவாரோ இயக்குநராக நியமிக்கப்பட்டவுடன் டெரெக் கொன்னோலியுடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை வரைகையில் அதே கருத்தைப் பின்பற்றினார். முதன்மை புகைப்படப் பணி (Principal photography) 2014 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பெரும்பாலும் லூசியானா விலும் ஹவாயில் முந்தைய படங்களின் படப்பிடிப்புக் களங்களிலும் நடைபெற்றது. இம்முறையும் தொன்மாக்கள், இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைக் கொண்டும் லெகசி எபக்ட்ஸ் [Legacy Effects - ஸ்டான் விங்ஸ்டனின் முன்னாள் மாணவர்கள் தோற்றுவித்த நிறுவனம்]] வடிவமைத்த அசைவூட்ட மாதிரிகளாகவும் உருவாக்கப்பட்டன.

ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மே 10, 2015 அன்று முடிக்கப்பெற்று[3] ஜூன் 10 தொடங்கி 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. உலகளவில் $ 50 கோடி க்கும் மேலாக வசூலித்த முதல் திரைப்படமாக இது சாதனை படைத்த வார இறுதிக்குப்பின்[4] பாக்ஸ் ஆபிஸில் $ 160 கோடி வருவாய் ஈட்டியது. இப்படம், பணவீக்க மாற்றங்களின்றி அனைத்து காலங்களிலும் அதிக வசூல் செய்த ஐந்தாம் படமாகவும் 2015-இன் அதிக வசூல் செய்த இரண்டாம் படமாகவும் இத் திரைப்படத் தொடரில் அதிக வசூல் செய்த படமாகவும் விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்’ என்ற படம் ஜூன் 2018 இல் வெளியாகவுள்ளது.

பொருளடக்கம்

Other Languages
asturianu: Jurassic World
български: Джурасик свят
čeština: Jurský svět
Ελληνικά: Jurassic World
español: Jurassic World
français: Jurassic World
hrvatski: Jurski svijet
Bahasa Indonesia: Jurassic World
italiano: Jurassic World
한국어: 쥬라기 월드
Кыргызча: Юра дүйнөсү
Lëtzebuergesch: Jurassic World
Bahasa Melayu: Jurassic World
Nederlands: Jurassic World
português: Jurassic World
Runa Simi: Jurassic World
română: Jurassic World
srpskohrvatski / српскохрватски: Jurassic World
Simple English: Jurassic World
српски / srpski: Свет из доба јуре
Türkçe: Jurassic World
oʻzbekcha/ўзбекча: Yura davri dunyosi