சைமன் மாரியசு

சைமன் மாரியசு
Simon Marius.jpg
சைமன் மாரியசு
பிறப்புசனவரி 10, 1573(1573-01-10)
குஞ்செனாசென், அன்சுபாக்
இறப்புதிசம்பர் 26, 1624(1624-12-26) (அகவை 51)
அன்சுபாக்
வாழிடம்அன்சுபாக்
தேசியம்செருமன்
துறைவானியல்
அறியப்படுவதுவியாழக் கோள்,
அந்திரொமேடா பேரடை

சைமன் மாரியசு (Simon Marius, செருமானியப் பெயர்: Simon Mayr) (சனவரி 10, 1573 – திசம்பர் 26, 1624) ஓர் செருமானிய வானியலாளர். செருமனியின் அன்சுபாக் பிரின்சிபாலிட்டியில் உள்ள குஞ்செனாசென்னில் பிறந்த சைமன் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அன்சுபாக் நகரத்தில் கழித்தார்.வியாழனின் முதன்மையான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தது குறித்து இவருக்கும் கலீலியோ கலிலிக்குமிடையே சர்ச்சை எழுந்தது. 1614இல் மாரியசு வியாழனையும் அதன் துணைக்கோள்களையும் விவரித்து முண்டஸ் ஐயோவியலிஸ் என்ற நூலை வெளியிட்டார். இதில் கலீலியோவிற்கு சில நாட்கள் முன்னதாகவே தாம் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்த கலீலியோ தம்மைப் போன்ற ஒரு கண்டுபிடிப்பையே மாரிசு கண்டுள்ளதாகவும் 1610இல் தாம் வெளியிட்ட வரைபடத்தைப் போன்றே அவருடையதும் உள்ளதென்று காட்டினார். மாரியசு தனிப்பட்ட முறையில் இந்த நிலவுகளை கண்டறிந்திருக்கலாம் என்றும் ஆனால் கலீலியோவிற்குப் பிறகே கண்டறிந்திருப்பார் என்றும் கருதப்படுகிறது.

யார் முதலில் கண்டது என்பது தெளிவாக இல்லாது போனாலும் இந்த துணைக்கோள்களுக்கான தொன்மவியல் பெயர்கள் (ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ) மாரியசால் கொடுக்கப்பட்டவையே:[1]

Io, Europa, Ganimedes puer, atque Calisto
lascivo nimium perplacuere Iovi.
தொன்மவியல் பாத்திரங்களான ஐஓ, ஐரோப்பா,கனிமீடு மற்றும் காலிஸ்டோ காமவெறி கொண்ட வியாழனின் இச்சையைத் தீர்த்தனர்.

சைமன் மாரியசு அந்திரொமேடா "நெபுலா"வையும் கண்டறிந்தார். மாரியசின் பணி குறத்த கட்டுரைகள் அரிதாக இருப்பினும் எஞ்சியுள்ளவை அவரது வானியல் திறனுக்குப் பறை சாற்றுகின்றன:

  • 1612இலேயே அந்திரொமேடா பேரடையின் விட்டத்தை அளந்து அதன் விளிம்பில் வெளிர் ஒளியாகவும் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல ஒளிப்பொலிவு கூடுவதையும் கண்டறிந்தார்.[2][3]
  • தனது தொலைநோக்கியில் விண்மீன்களின் பொய்த்தோற்ற வட்டங்களைக் கண்டறிந்தார்.[4]
  • வியாழனின் நிலவுகளை ஆய்வு செய்து அவற்றின் சுற்றுப்பாதைக் கூறுகளை கலீலியோவைவிட துல்லியமாக கணித்தார்.[5]
  • 1572ஆம் ஆண்டு டைகோ பிராகெ சூப்பர்நோவாவின் அமைவிடத்தையும் அதிலுள்ள விண்மீன் "வியாழனின் மூன்றாவது நிலவை விட ஒளி மங்கலாக இருப்பதை"யும் கண்டிருந்தார். [6]

பணி

  • Mundus Iovialis anno MDCIX Detectus Ope Perspicilli Belgici (Die Welt des Jupiter, 1609 mit dem flämischen Teleskop entdeckt; Lateinisches Faksimile und deutsche Übersetzung; Hrsg. und bearb. von Joachim Schlör. Naturwiss. begleitet und mit einem Nachw. vers. von Alois Wilder), 1614
  • Zinner, E., "Zur Ehrenrettung des Simon Marius", in: Vierteljahresschrift der Astronomischen Gesellschaft, 77. Jahrgang, 1. Heft, Leipzig 1942
  • Bosscha, J., "Simon Marius. Réhabilitation d´un astronome calomnié", in: Archives Nederlandaises des Sciences Exactes et Naturelles, Ser. II, T. XII, S. 258 - 307, 490 - 528, La Haye, 1907
Other Languages
Alemannisch: Simon Marius
العربية: سيمون ماريوس
беларуская: Сімон Марый
български: Симон Мариус
català: Simon Marius
čeština: Simon Marius
Deutsch: Simon Marius
Ελληνικά: Σίμων Μάγερ
English: Simon Marius
Esperanto: Simon Marius
español: Simon Marius
français: Simon Marius
magyar: Simon Marius
Bahasa Indonesia: Simon Marius
íslenska: Simon Marius
italiano: Simon Marius
Latina: Simon Marius
Lëtzebuergesch: Simon Marius
latviešu: Simons Mariuss
Nederlands: Simon Marius
norsk nynorsk: Simon Marius
polski: Simon Marius
پنجابی: سائمن ماریس
português: Simon Marius
русский: Марий, Симон
slovenčina: Simon Marius
slovenščina: Simon Marij
српски / srpski: Симон Мариј
svenska: Simon Marius
українська: Симон Маріус