சூபித்துவம்
English: Sufism

இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் அகமது ராசா கான் ஆலா ஹஸ்ரத் அவர்களது தர்கா

சூபித்துவம் (sufism, சூஃபிசம்) அல்லது தஸவ்வுப் (அரபு மொழி: : الصوفية‎),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது.[1], இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்[2][3] அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றப்பாடு[4][5] என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாகும்.[6]. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது.[4] இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. [7]

சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' (/ˈsfi/; صُوفِيّ ; ṣūfī) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.[4]வரலாற்று ரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.[8] இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர்.[9] அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்."[10] ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.[11]சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர்.[12] மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து முதலாவது குலாபாஉர் ராஷிதீன் கலீபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது.[13] இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.[14]


சூபித்துவம் (தஸவ்வுப்) மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.[15] இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.[16] சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.[13]பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்ய, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.[17]

சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர். "இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".[18]தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".[19]

பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது)[20], துறவறம் உடன் தொடர்புகொண்டிருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களிடையே ஆதரவைப் பெற்றது,முக்கியமாக ஆரம்பகால உமையாக்களின் உலகப்பற்றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகள் பாரசீகம், துருக்கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.

Other Languages
Acèh: Tasawôh
Afrikaans: Soefisme
Alemannisch: Sufismus
aragonés: Sufismo
العربية: صوفية
مصرى: صوفيه
asturianu: Sufismu
azərbaycanca: Sufizm
تۆرکجه: صوفی‌لیک
башҡортса: Суфыйсылыҡ
žemaitėška: Sofėzmos
беларуская: Суфізм
беларуская (тарашкевіца)‎: Суфізм
български: Суфизъм
বাংলা: সুফিবাদ
brezhoneg: Soufiegezh
bosanski: Tesavuf
català: Sufisme
нохчийн: Суьпалла
کوردی: سۆفیگەری
čeština: Súfismus
Cymraeg: Swffïaeth
dansk: Sufisme
Deutsch: Sufismus
ދިވެހިބަސް: ޞޫފީން
Ελληνικά: Σούφι
English: Sufism
Esperanto: Sufiismo
español: Sufismo
eesti: Sufism
euskara: Sufismo
فارسی: تصوف
føroyskt: Sufisma
français: Soufisme
Frysk: Soefisme
galego: Sufismo
Hausa: Sufiyya
עברית: סופיות
हिन्दी: सूफ़ीवाद
hrvatski: Sufizam
magyar: Szúfizmus
հայերեն: Սուֆիզմ
Bahasa Indonesia: Sufisme
Ilokano: Supismo
íslenska: Súfismi
italiano: Sufismo
Jawa: Sufisme
ქართული: სუფიზმი
Адыгэбзэ: Суфиигъэ
қазақша: Сопылық
한국어: 수피파
kurdî: Sofîtî
Кыргызча: Суфизм
Latina: Sufismus
lietuvių: Sufizmas
latviešu: Sūfisms
македонски: Суфизам
മലയാളം: സൂഫിസം
मराठी: सूफी पंथ
Bahasa Melayu: Kesufian
Nederlands: Soefisme
norsk nynorsk: Sufisme
norsk: Sufisme
ਪੰਜਾਬੀ: ਸੂਫ਼ੀਵਾਦ
polski: Sufizm
Piemontèis: Sufism
پنجابی: تصوف
پښتو: تصوف
português: Sufismo
română: Sufism
русский: Суфизм
русиньскый: Суфізм
संस्कृतम्: सूफीमतम्
саха тыла: Суфизм
sicilianu: Sufismu
Scots: Sufism
سنڌي: تصوف
srpskohrvatski / српскохрватски: Sufizam
Simple English: Sufism
slovenčina: Sufizmus
slovenščina: Sufizem
Soomaaliga: Suufi
shqip: Sufizmi
српски / srpski: Суфизам
svenska: Sufism
Kiswahili: Usufii
тоҷикӣ: Тасаввуф
Türkçe: Tasavvuf
татарча/tatarça: Суфичылык
ئۇيغۇرچە / Uyghurche: سوپىزم (تەسەۋۋۇپ)
українська: Суфізм
اردو: تصوف
oʻzbekcha/ўзбекча: Tasavvuf
Tiếng Việt: Sufi giáo
walon: Soufisse
Winaray: Sufismo
吴语: 苏菲主义
მარგალური: სუფიზმი
ייִדיש: סופיזם
Vahcuengh: Suhfeicujyi
中文: 蘇非主義
Bân-lâm-gú: Sufi-phài
粵語: 蘇菲派