சுயசரிதை

இப்போவின் புனித அகசுத்தீன் 400 ஆம் ஆண்டளவில், மேற்குலகின் முதல் சுயசரிதை எனப்படும் ஒப்புதல்கள் (Confessions) என்னும் நூலை எழுதினார். ஓவியம் 17 ஆம் நூற்றாண்டில் பிலிப்பே டி சம்பைன் ஏன்பவரால் வரையப்பட்டது.

சுயசரிதை என்பது ஒரு நபர் தானே எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு ஆகும். "சுயசரிதை" என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லான Autobiography என்பதை, முதலில் ஆங்கிலச் சஞ்சிகையான "மந்திலி ரிவியூ"வில் (Monthly Review) 1797 ஆம் ஆண்டில் வில்லியம் டெய்லர் பயன்படுத்தினார். இச்செயற்பாட்டுக்கு எதிராகவே இச்சொல் அவரால் அப்போது பயன்படுத்தப்பட்டது. அடுத்து ராபர்ட் சௌதே என்பவர் 1809 ஆம் ஆண்டில் இச்சொல்லை இன்றைய பொருளில் பயன்படுத்தினார்.[1]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இதற்குப் பெயரிடப்பட்டாலும், தானே தன் வரலாற்றை எழுதுவது மிகப் பழங்காலத்திலேயே தொடங்கியது. ராய் பாஸ்கல் என்பவர் சுயசரிதையை காலத்துக்குக் காலம் எழுதப்படும் சொந்த நினைவுக் குறிப்புக்களில் இருந்தும், நாட்குறிப்புக்களில் இருந்தும் வேறுபடுத்துகிறார். "சுயசரிதை என்பது, குறிப்பிட்ட ஒரு தருணத்தில் இருந்து கடந்தகால வாழ்க்கையை மீளாய்வு செய்வது என்றும், நாட்குறிப்பு தொடர்ச்சியான பல தருணங்களில் எழுதப்பட்ட நினைவுகள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்".[2] எனவே சுயசரிதை, அது எழுதப்படும் காலத்தில் இருந்துகொண்டு எழுதுபவரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறது. வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் பொதுவாக பலவிதமான ஆவணங்கள் மற்றும் கண்ணோட்டங்களில் தங்கியிருக்கும்போது, சுயசரிதை முற்றிலும் எழுத்தாளரின் நினைவின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். "நினைவுக் குறிப்பு" வடிவம் சுயசரிதையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளபோதும், பாஸ்கல் குறிப்பிடுவது போல் நினைவுக் குறிப்பை எழுதுபவரின் வாழ்க்கையைப் பற்றிய மீளாய்வில் அவரைப் பற்றிக் குறைவாகவும், மற்றவர்களைப் பற்றிக் கூடுதலாகவும் காணப்படும்.[2]

Other Languages
Afrikaans: Outobiografie
Alemannisch: Autobiografie
العربية: ترجمة ذاتية
asturianu: Autobiografía
azərbaycanca: Avtobioqrafiya
беларуская: Аўтабіяграфія
български: Автобиография
brezhoneg: Emvuhezskrid
bosanski: Autobiografija
català: Autobiografia
čeština: Autobiografie
Cymraeg: Hunangofiant
Deutsch: Autobiografie
Ελληνικά: Αυτοβιογραφία
English: Autobiography
Esperanto: Aŭtobiografio
español: Autobiografía
euskara: Autobiografia
français: Autobiographie
Gàidhlig: Fèin-eachdraidh
ગુજરાતી: આત્મકથા
हिन्दी: आत्मकथा
hrvatski: Autobiografija
interlingua: Autobiographia
Bahasa Indonesia: Autobiografi
íslenska: Sjálfsævisaga
italiano: Autobiografia
日本語: 自伝
한국어: 자서전
Кыргызча: Автобиография
Lëtzebuergesch: Autobiographie
lietuvių: Autobiografija
latviešu: Autobiogrāfija
македонски: Автобиографија
മലയാളം: ആത്മകഥ
Bahasa Melayu: Autobiografi
Nederlands: Autobiografie
norsk nynorsk: Sjølvbiografi
ਪੰਜਾਬੀ: ਸਵੈਜੀਵਨੀ
português: Autobiografia
română: Autobiografie
srpskohrvatski / српскохрватски: Autobiografija
Simple English: Autobiography
slovenčina: Autobiografia
slovenščina: Avtobiografija
српски / srpski: Аутобиографија
Basa Sunda: Autobiografi
Türkçe: Otobiyografi
татарча/tatarça: Тәрҗемәи хәл
українська: Автобіографія
اردو: خود نوشت
Tiếng Việt: Tự truyện
中文: 自传
Bân-lâm-gú: Chū-toān