சுந்தா பெருந் தீவுகள்

சுந்தா பெருந் தீவுகள்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்0°00′N 110°00′E / 0°00′N 110°00′E / 0.000; 110.000
தீவுக்கூட்டம்சுந்தா தீவுகள்
நிர்வாகம்

சுந்தா பெருந் தீவுகள் (Greater Sunda Islands) மலாய் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவுகளை உள்ளடக்கிய தீவுக் குழுமமாகும். இவற்றில் பலவும் தற்கால இந்தோனேசியாவின் அங்கமாக உள்ளன: இவற்றில் மிகச் சிறியதான சாவகம் மிகுந்த மக்களடர்த்திக் கொண்டது; மேற்கில் மலேசியாவிற்கு நேர் எதிரே மலாக்கா நீரிணைக்கு அப்பால் சுமாத்திரா; பெரும் போர்னியோ, இதன் இந்தோனேசியப் பகுதி கலிமந்தான் எனப்படுகின்றது; கிழக்கில் பறவையின் மார்பெலும்பு போன்று ஆங்கில Y வடிவிலான நீண்ட சுலாவெசி (முன்னதாக செலெபெசு).[1] சிலர் சாவகம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளை மட்டுமே உள்ளதாக சுந்தா பெருந் தீவுகளை வரையறுக்கின்றனர்.[2][3]

சுந்தா சிறு தீவுகளுடன் சேர்ந்து இவை சுந்தா தீவுகள் எனப்படுகின்றன.

நிர்வாகம்

சுந்தா பெருந் தீவுகளின் பெரும்பகுதி இந்தோனேசியாவினுடையதாகும். இருப்பினும், போர்னியோ தீவு புரூணை, இந்தோனேசியா, மலேசியா நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் முழுமையான புரூணையும் இந்தோனேசியாவின் மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு கலிமந்தான் மாகாணங்களும் மலேசியாவின் சபா, சரவாக் மாகாணங்களும் இலபுவான் கூட்டரசு ஆட்புலமும் அடங்கியுள்ளன.

Other Languages
azərbaycanca: Böyük Zond adaları
čeština: Velké Sundy
客家語/Hak-kâ-ngî: Thai Sunda Khiùn-tó
hornjoserbsce: Wulke Sundaske kupy
Bahasa Indonesia: Kepulauan Sunda Besar
한국어: 대순다 열도
Basa Banyumasan: Kepulauan Sunda Besar
Bahasa Melayu: Kepulauan Sunda Besar
srpskohrvatski / српскохрватски: Veliki sundski otoci
oʻzbekcha/ўзбекча: Katta Zond orollari