சுடுமட்சிலைப் படை

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
முதலாம் குயின் சக்கரவர்த்தியின் சமாதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Terracotta Army, View of Pit 1.jpg
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, iii, iv, vi
உசாத்துணை441
UNESCO regionஆசியா பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)
சுடுமட்சிலைப் படை is located in China
சுடுமட்சிலைப் படை
Location of சுடுமட்சிலைப் படை in China.

சுடுமட்சிலைப் படை, சுடுமட்சிலை இராணுவம் அல்லது சுடுமட்சிலைப் போர் வீரர்களும் குதிரைகளும் (Terracotta Army) என்பது முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களை சித்தரிக்கும் சுடுமட்சிலை சிற்பங்களாகும். இது சக்கரவர்த்தியை மறு வாழ்விலும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, சக்கரவர்த்தியுடன் கி.மு. 210 இல் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மரணச்சடங்குக் கலையின் வடிவமாகும்.

கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவ்வுருவங்கள்[1] சாங்சி மாணத்திலுள்ள சிய்யான் என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுருவங்கள் அவற்றின் பாத்திரத்திற்கு ஏற்ப உயரத்தில் வேறுபடுகின்றன. தளபதிகளின் உருவங்கள் உயரமாகவிருக்கும். இவ்வுருவங்கள் போர் வீரர்கள், தேர், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2007 இல் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி, மூன்று குழிகளில் 8,000 இற்கு மேற்பட்ட வீரர்கள், 130 தேர்கள், 520 குதிரைகள், 150 குதிரைப்படைக்குரிய குதிரைகள் உள்ளன. இவற்றில் அனேகமானவை சின் ஷி ஹுவாங்கின் சமாதிக்கு அருகில் காணப்படுகின்றன.[2] படை அற்ற சுடுமட்சிலை உருவங்களான அலுவலர்கள், கழைக்கூத்தாடிகள், அரசியல் ஆட்சியாளர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியன ஏனைய குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

Other Languages
Afrikaans: Terracottaleër
azərbaycanca: Terrakota ordusu
беларуская: Тэракотавая армія
Esperanto: Terakota armeo
hrvatski: Vojska terakota
Bahasa Indonesia: Pasukan terakota
íslenska: Leirherinn
日本語: 兵馬俑
한국어: 병마용
Lëtzebuergesch: Terracotta-Arméi
latviešu: Terakotas armija
македонски: Теракотна војска
Bahasa Melayu: Tentera Terracotta
မြန်မာဘာသာ: မြေရုပ်စစ်တပ်
Nederlands: Terracottaleger
norsk nynorsk: Terrakottahæren
srpskohrvatski / српскохрватски: Vojska od terakote
Simple English: Terracotta Army
slovenčina: Terakotová armáda
Türkçe: Toprak Askerler
татарча/tatarça: Терракота гаскәре
українська: Теракотова армія
Tiếng Việt: Đội quân đất nung
粵語: 兵馬俑