சியாம் சண்டை மீன்

சியாம் சண்டை மீன்
HM Orange M Sarawut.jpg
Selectively bred halfmoon male displaying his flared opercula.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix):Betta
இனம்:Template:Taxonomy/BettaB. splendens
இருசொற் பெயரீடு
Betta splendens
Regan, 1910


சியாம் சண்டை மீன் (Siamese fighting fish) கௌராமி (Gourami) என்ற குடும்பத்தைச் சார்ந்த மீன் இனம் ஆகும். இவை வீடுகளில் வளர்க்கப்படும் மீனாக இருந்தாலும் தனித் தொட்டிகளிலேயே வளர்க்கப்படுகிறது. ஏனெனில் இவற்றில் ஆண் மீன் போர் குணம் கொண்டவையாக உள்ளது. ஒரே தொட்டியில் இரண்டு ஆண் சியாம் சண்டை மீன்களை வளர்த்தாலும் இரண்டும் சண்டையிட்டு ஏதாவது ஒன்று மரணம் அடைந்துவிடும் நிலை உள்ளது. சிறியதாக இருக்கும்போதே பெண் ஆண் இரண்டையும் ஒரே தொட்டியில் வளர்க்கவேண்டும். இனப்பெருக்க காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண் மீனை இவற்றுடன் ஒரே தொட்டியில் வளர்க்கக்கூடாது.[1]


இவற்றில் ஆண் மீன்கள் அசையும் துடுப்புகளைக் கொண்டு உள்ளது. இவற்றின் பூர்வீகம் மேக்கொங் ஆற்றுப் படுகை, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகள் ஆகும். இவை நிலையான சிற்றோடைகள் கால்வாய்கள், வயல்வெளிகள் போன்றவற்றிலும் காண முடிகிறது. [2] இவ்வகை மீன்களைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் அழிவாய்ப்பு வகையாகச் சேர்த்துள்ளது.


மேற்கோள்கள்

  1. "Guidelines released for keeping Fighters" (in en-US). Practical Fishkeeping Magazine. http://www.practicalfishkeeping.co.uk/news2014/guidelines-released-for-keeping-fighters. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Betta splendens" in FishBase. February 2014 version.
Other Languages
العربية: سمك الفايتر
azərbaycanca: Betta splendens
bosanski: Sijamski borac
Ελληνικά: Ψάρι μονομάχος
español: Betta splendens
français: Combattant
hrvatski: Sijamski borac
hornjoserbsce: Betta splendens
Bahasa Indonesia: Betta splendens
italiano: Betta splendens
ಕನ್ನಡ: ಕಾಳಗಮೀನು
Bahasa Melayu: Ikan Pelaga
မြန်မာဘာသာ: ဖိုက်တာ (ငါး)
Nederlands: Siamese kempvis
português: Betta splendens
srpskohrvatski / српскохрватски: Sijamski borac
Simple English: Betta splendens
slovenčina: Bojovnica pestrá
Tiếng Việt: Cá xiêm
中文: 泰國鬥魚