சியாகுவார் தானுந்துகள்

Jaguar Cars Limited
வகைPrivate Limited Company
நிறுவுகை4 September 1922 (as Swallow Sidecar Company)
நிறுவனர்(கள்)Sir William Lyons and William Walmsley
தலைமையகம்Coventry, England, Great Britain
முக்கிய நபர்கள்Ratan Tata, Chairman
David Smith, CEO
Mike O'Driscoll, Managing Director
தொழில்துறைAutomotive
உற்பத்திகள்Automobiles
உரிமையாளர்கள்Tata Motors
பணியாளர்10,000[1]
தாய் நிறுவனம்Jaguar Land Rover
இணையத்தளம்Jaguar.com

சியாகுவார் (ஜாகுவார், Jaguar) என்று எளிதில் அறியப்படும், சியாகுவார் தானுந்து நிறுவனம், இங்கிலாந்தின் கோவென்ட்ரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இங்கிலாந்து சொகுசு மகிழுந்து (சொகுசு தானுந்து) படைப்பு நிறுவனமாகும். இது மார்ச் 2008 ஆம் ஆண்டிலிருந்து, இந்திய நிறுவனமான டாட்டா மோட்டார்சு நிறுவனத்தால் முழுமையாக வாங்கப்பெற்று, சியாகுவார் லேண்டு ரோவர் வியாபாரத்தின் ஓர் உறூப்பாகச் செயல்படுகிறது.[2]

1922 ஆம் ஆண்டில் சர் வில்லியம் லியான்சு என்பவரால் சுவாலோ சைட்கார் நிறுவனம் என்ற பெயரில் சியாகுவார் உருவாக்கப்பட்டது, இது பயணிகள் மகிழுந்துகளாக மாறுவதற்கு முன்னதாக அப்போது ஈராழி இணைவண்டிகளை (motorcycle sidecars) உருவாக்கி வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எசுஎசு (SS_ என்ற முதலெழுத்துக்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் (கொடுமைக்குப் பெயர் பெற்ற இடாய்ச்சு காவல்படையின் அடையாளம்) காரணமாக அந்தப் பெயர் சியாகுவார் என்று மாற்றப்பட்டது.[3] 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து பல்வேறு நிறுவன உரிமை மாற்றங்களுக்கு இடையில், சியாகுவார் நிறுவனம் இலண்டன் பங்குச்சந்தையின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 1989 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தால் வாங்கப்படும் வரை, இலண்டன் பங்குச்சந்தை பட்டியலாகிய FTSE 100 பட்டியலிலும் இடம்பேற்று வந்தது.[4] மேதகு பேரரசி இரண்டாம் எலிசபெத் அவர்களிடமிருந்தும், மேதகு இளவரசர் சார்லசு அவர்களிடமிருந்தும் மதிப்புமிக்க நற்சான்றிதழ்களையும் சியாகுவார் பெற்றிருக்கிறது.[5]

சியாகுவார் மகிழுந்துகள் இன்று கோவென்ட்ரியில் உள்ள வெட்லே (Whitley) தொழிற்சாலையிலும், வார்விக்சேரில் (Warwickshire) உள்ள கேடன் (Gaydon) ஆகிய இடங்களிலும் உள்ள சியாகுவார் லேண்டு ரோவர் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்டு, பெர்மிங்காமின் கேசல் பிரோம்விச் பாகங்கள் ஒருங்கிணைப்பு ஆலை (Castle Bromwich assembly plant) மற்றும் லிவர்ப்பூலுக்கு அருகில் உள்ள ஏல்வுட்டில் இருக்கும் மேற்பகுதி கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு தொழில்சாலை ஆகிய இரண்டு சியாகுவார் லேண்டு ரோவர் தொழிற்சாலைகளிலும் படைக்கப்பட்டது.

பொருளடக்கம்

Other Languages
العربية: جاغوار (شركة)
asturianu: Jaguar Cars
azərbaycanca: Jaguar (avtomobil)
беларуская (тарашкевіца)‎: Jaguar Cars
български: Ягуар (кола)
català: Jaguar Cars
čeština: Jaguar
Deutsch: Jaguar Cars
English: Jaguar Cars
Esperanto: Jaguar
español: Jaguar Cars
euskara: Jaguar Cars
suomi: Jaguar
galego: Jaguar Cars
magyar: Jaguar Cars
հայերեն: Jaguar
italiano: Jaguar
қазақша: Jaguar
kurdî: Jaguar Cars
lingála: Jaguar
lietuvių: Jaguar Cars
latviešu: Jaguar Cars
Bahasa Melayu: Jaguar Cars
Nāhuatl: Jaguar
Nederlands: Jaguar Cars
Piemontèis: Jaguar
português: Jaguar Cars
română: Jaguar Cars
русский: Jaguar
srpskohrvatski / српскохрватски: Jaguar Cars
Simple English: Jaguar Cars
slovenčina: Jaguar
српски / srpski: Јагуар аутомобили
Türkçe: Jaguar Cars
українська: Jaguar
中文: 捷豹