கெமர் பேரரசு

12ம் நூற்றாண்டின் இறுதியில் கெமர் பேரரசு
கிபி 1200களில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலவரை படம், கெமர் பேரரசின் பொற்காலம்

கெமர் பேரரசு (Khmer empire) என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தமிழர் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. கெமர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஜாவாவுடன் கலாசார,, அரசியல், மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் கெமரின் தெற்கு எல்லையில் பரவியிருந்த ஸ்ரீவிஜயப் பேரரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது.

அங்கூர் (Anghor) கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக இந்து சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது.

== கெமர் பேரரசர்களின் காலக்கோடு

 • 802-850: ஜெயவர்மன் II (பரமேஸ்வரன்)
 • 854-877: ஜெயவர்மன் III (விஷ்ணுலோகன்)
 • 877-889: இந்திரவர்மன் II (ஈஸ்வரலோகன்)
 • 889-910: யசோவர்மன் I (பரமசிவலோகன்)
 • 910-923: ஹஷவர்மன் I (ருத்ரலோகன்)
 • 923-928: ஈசானவர்மன் II (பரமருத்ரலோகன்)
 • 928-941: ஜெயவர்மன் IV (பரமசிவபாதன்)
 • 941-944: ஹர்ஷவர்மன் II (விராமலோகன் அல்லது பிரம்மலோகன்)
 • 944-968: ராஜேந்திரவர்மன் (சிவலோகன்)
 • 968-1001: ஜெயவர்மன் V (பரமசிவலோகன்)
 • 1001-1002?: உதயாதித்தியவர்மன் I
 • 1002-1011?: ஜெயவீரவர்மன்
 • 1001-1050: சூரியவர்மன் I (நர்வாணபால லா)
 • 1050-1066: உதயாதித்தியவர்மன் II
 • 1066-1080?: ஹர்ஷவர்மன் III (சதாசிவபாதன்)
 • 1080-1113?: ஜெயவர்மன் VI (பரமகைவல்யபாதன்)
 • 1113-1150: சூரியவர்மன் II (பரமவிஷ்ணுலோகன்)
 • 1150-1160: தரணீந்திரவர்மன் II (பரமநிஷ்கலபாதன்)
 • 1160-1165/6: யசோவர்மன் II
 • 1181-1220?: ஜெயவர்மன் VII (மகாபரமசங்கடன்?)
 • 1220-1243: இந்திரவர்மன் II
 • 1243-1295: ஜெயவர்மன் VIII (abdicated) (பரமசுவரபாதன்)
 • 1295-1308: இந்திரவர்மன் III?
 • 1300-1307?: ஸ்ரீந்திரவர்மன் (abdicated)
 • 1308-1327: இந்திரஜெயவர்மன்
 • 1330-1353: பரமதகேமராஜன்
 • 1371-?: Hou-eul-na
 • 1404: Samtac Pra Phaya
 • 1405: Samtac Chao Phaya Phing-ya
 • 1405-1409: Nippean-bat
 • 1409-1416: Lampong அல்லது Lampang Paramaja
 • 1416-1425: Sorijovong, Sorijong அல்லது Lambang
 • 1425-1429: Barom Racha, அல்லது Gamkhat Ramadhapati
 • 1429-1431: Thommo-Soccorach அல்லது Dharmasoka
 • 1432-1462: Ponhea Yat அல்லது Gam Yat
Other Languages
Afrikaans: Khmer-ryk
asturianu: Imperiu jemer
azərbaycanca: Kxmer imperiyası
bosanski: Kmersko carstvo
català: Imperi Khmer
dansk: Khmerriget
Deutsch: Khmer-Reich
English: Khmer Empire
Esperanto: Kmera imperio
español: Imperio jemer
français: Empire khmer
hrvatski: Kmersko Carstvo
Bahasa Indonesia: Kerajaan Khmer
italiano: Impero Khmer
ქართული: კამბუჯადეშა
ភាសាខ្មែរ: អាណាចក្រខ្មែរ
한국어: 크메르 제국
lietuvių: Khmerų imperija
नेपाल भाषा: ख्मेर साम्राज्य
Nederlands: Khmer-rijk
norsk: Khmerriket
polski: Angkor
português: Império Khmer
română: Imperiul Khmer
русский: Камбуджадеша
srpskohrvatski / српскохрватски: Kmersko Carstvo
slovenčina: Khmérska ríša
српски / srpski: Кмерско царство
svenska: Khmerriket
українська: Кхмерська імперія
Tiếng Việt: Đế quốc Khmer
吴语: 高棉帝国
中文: 高棉帝国
Bân-lâm-gú: Khmer Tè-kok
粵語: 真臘