குழந்தை பிறப்பு

மருத்துவமனை ஒன்றில் பிறந்த பெண் குழந்தைக்கு, தகப்பனிடம் இருந்து கிடைக்கும் கவனிப்பு

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம்[1].

உலகம் முழுவதும் 2015 -இல் சுமார் 135 மில்லியன் பிறப்புகள் நிகழ்ந்தன.[2] கருத்தரிப்புக் காலத்தில், 37 கிழமைகளுக்கு முன்னராக குறைப்பிரசவப் பிறப்பாக சுமார் 15 மில்லியன் குழந்தைகள் பிறந்தன[3], அதே வேளையில் 42 வாரங்களுக்குப் பிறகு பிந்தியகாலப் பிறப்பாக 3 முதல் 12% வரையிலான குழந்தைகள் பிறந்தன.[4] வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன[5][6], அதே வேளையில் வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பாலான பிறப்புகள் பாரம்பரியமான பிரசவ உதவியாளரின் உதவியுடன் வீட்டில் நிகழ்கின்றன.[7]

கருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும். இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவதுமுண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன[8]. அமெரிக்காவில் 31.8% உம், கனடாவில் 22.5% உம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது[9][10] தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.[11].

Other Languages
Akan: Abawo
العربية: ولادة
asturianu: Partu
башҡортса: Тыуым
беларуская: Роды ў чалавека
বাংলা: প্রসব
brezhoneg: Gwilioud
bosanski: Porođaj
Mìng-dĕ̤ng-ngṳ̄: Săng-giāng
کوردی: زان
čeština: Porod
Deutsch: Geburt
Ελληνικά: Τοκετός
English: Childbirth
Esperanto: Nasko
español: Parto
eesti: Sünnitus
euskara: Erditze
فارسی: زایمان
suomi: Synnytys
français: Accouchement
Frysk: Befalling
galego: Parto
Avañe'ẽ: Membysẽ
ગુજરાતી: બાળજન્મ
客家語/Hak-kâ-ngî: Kiung-chṳ́
עברית: לידה
hrvatski: Porođaj
magyar: Szülés
Ido: Parturo
italiano: Parto
日本語: 分娩
ಕನ್ನಡ: ಶಿಶುಜನನ
한국어: 분만
Кыргызча: Төрөт
Latina: Puerperium
lietuvių: Gimdymas
latviešu: Dzemdības
മലയാളം: പ്രസവം
монгол: Төрөлт
मराठी: प्रसूती
မြန်မာဘာသာ: ကလေးမွေးခြင်း
Nederlands: Bevalling
Chi-Chewa: Kubereka mwana
occitan: Jasilha
ଓଡ଼ିଆ: ପ୍ରସବ
ਪੰਜਾਬੀ: ਜਣੇਪਾ
پنجابی: چِھلا
português: Parto
Runa Simi: Paqariy
Scots: Bairnbirth
srpskohrvatski / српскохрватски: Porođaj
slovenčina: Pôrod
slovenščina: Porod
chiShona: Kuponiwa
српски / srpski: Порођај
SiSwati: Kubeleka
Basa Sunda: Babar
svenska: Förlossning
తెలుగు: కానుపు
Tagalog: Panganganak
Türkçe: Çocuk doğurma
українська: Пологи
اردو: زچگی
Tiếng Việt: Sinh con
isiXhosa: Ukuzala
ייִדיש: געבורט
中文: 分娩
Bân-lâm-gú: Seⁿ-kiáⁿ
粵語: 蘇得