குமட்டல்
English: Nausea

1681 ஆம் ஆண்டு ஓவியம்

குமட்டல் (இலத்தீன்: Nausea, நாசியா, கிரேக்கம்: ναυσίη, நாசையி, "கடல் சுகவீனம்") என்னும் குமட்டல் , மேல் வயிறு மற்றும் தலை ஆகிய உறுப்புகளில் அசௌகரியம் மற்றும் சுகவீனம் ஆகியவற்றை உணர்ந்து வாந்தி எடுக்கும் ஒரு தூண்டுதல் உணர்வை அளிப்பதாகும். நாசியாவின் தாக்குதல் குவாம் என்று அறியப்படுகிறது. வயிற்றைப் புரட்டும் குமட்டல் உணர்வு சில சமயங்களில் வாம்பிள் என்றழைக்கப்படுகிறது.

காரணங்கள்

குமட்டல், பல மருந்துகளுக்கு, குறிப்பாக ஓபியேடுகளுக்கு, எதிரிடை விளைவாக ஏற்படுவதாகும். மேலும் இது சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதன் பக்க விளைவாகவும் இருக்கலாம்.

நாசியா என்பது ஒரு நோயல்ல, ஆனால், பல நிலைகளுக்கு ஒரு அறிகுறியாகும். இவற்றில் பல வயிற்றுக்குத் தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். நாசியா பல முறை உடலில் வேறு ஏதோ ஒரு பகுதியில் உள்ளார்ந்து இருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டுவதாக அமைகிறது. அசைவாக உணரப்படுவது மற்றும் உண்மையான அசைவு ஆகியவற்றிற்கு இடையிலான குழப்பத்தினால் விளையும் அசைவு சுகவீனம் என்பது இதற்கான ஒரு உதாரணமாகும்: நடுநிலை உணர்வானது செவியில் உள்ளது; இது கண்பார்வையுடன் இணைந்து இயங்குகிறது. இந்த இரண்டும் உடல் எந்த அளவுக்கு அசைகிறது என்பதைப் பற்றி ஒத்துப் போகாதபோது, இந்த நிலையில் வயிற்றிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றாலும், இதற்கான அறிகுறி குமட்டலாக வெளிப்படுகிறது. உடலில் நச்சுப் பொருள் செலுத்தப்பட்டதால், இவற்றில் ஒரு புலன் பிரமை கொள்கிறது என்று மூளை முடிவு கட்டுவதே வயிற்றிற்கான தொடர்பு இந்த நிலையில் ஏற்படுவதன் காரணம்.

மருத்துவத்தில், வேதியியல் சிகிச்சை விதிமுறைகளின்போதும் பொது உணர்வகற்றல் நடைமுறைக்குப் பின்னரும் குமட்டல் ஒரு பிரச்சினையாகக் கூடும். கர்ப்ப காலத்தில் "காலை சுகவீனம்" என அறியப்படும் ஒரு நிலைக்கும் குமட்டல் ஒரு பொதுவான அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் அனுபவிக்கப்படும் லேசான குமட்டல் உணர்வு சாதாரணமானதுதான். இதனை ஒரு உடனடி எச்சரிக்கையாக கருதி அஞ்சத் தேவையில்லை.

குமட்டலின் காரணங்கள் கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கும், ஆனால் இவை மட்டுமே ஆகாது:

 • தீவிர ஹெச்ஐவி தொற்று
 • அடிசன் நோய்
 • சாராயம்
 • பதற்றம்
 • குடல் வால் அழற்சி
 • மூளைக் கட்டி
 • கஃபைன்
 • புற்று நோய்
 • அம்மை நோய்
 • நாள்பட்ட சோர்வு நோய்க்குறித் தொகுப்பு
 • உட்காயக் கலக்கம்
 • கிரான்'ஸ் நோய்
 • மனச் சோர்வு
 • நீரிழிவு நோய்.
 • தலை சுற்றல்
 • மருந்துகள், இவை மருத்துவம், பொழுதுபோக்கு, நோக்கத்துடன் மற்றும்/ அல்லது நோக்கமற்று என எந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும்.
 • உடற்பயிற்சி
 • சளிக்காய்ச்சல் (இது குழந்தைகளில் பொதுவாகவும், வயது வந்தவர்களில் அரிதாகவும் வருவது; இதனை "வயிற்றுப் பொருமல்" இரைப்பைக் குடல் அழற்சி என்பதுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது)
 • உணவு நஞ்சாதல்
 • இரைப்பைக் குடல் அழற்சி
 • இரைப்பை அமில பின்னோக்கு நோய்
 • இரைப்பை வாதம்
 • மாரடைப்பு
 • நீர் கபாளம்
 • ரத்தத்தில் அதிக அளவு பொட்டாஷியம்
 • அதிகரித்த [[உட்கிரானியல் அழுத்தம்
 • மிகு உணர்வுக் குடல் நோய்க்குறித் தொகுப்பு
 • சிறுநீரகச் செயலிழப்பு
 • சிறு நீரகக் கற்கள்
 • மெனியரி'ஸ் நோய்
 • மூளை உறை அழற்சி
 • மாத விடாய்
 • ஒற்றைத் தலைவலி
 • காலை சுகவீனம்
 • போதைப் பொருட்கள்
 • நரம்புத் தளர்ச்சி
 • நோரா வைரஸ்
 • கணைய அழற்சி
 • இரைப்பைக் குடற் புண்
 • நுரையீரல் அழற்சி
 • கருத்தரிப்பு
 • உறக்கம் குன்றுதல்
 • மன அழுத்தம்
 • உயர்நிலை மெசென்ட்ரிக் தமனி நோய்க்குறித் தொகுப்பு
 • துல்லியோ நிகழ்வு
 • ஒதுங்கல் நோய்க்குறித் தொகுப்பு
 • தலைச் சுழற்றல்
 • செவி முன்றில் சமநிலைக் கோளாறு
 • வைரல் ஹெபாடிடிஸ்
Other Languages
العربية: غثيان
беларуская: Млоснасць
català: Nàusea
čeština: Nevolnost
Cymraeg: Cyfog
dansk: Kvalme
Deutsch: Übelkeit
English: Nausea
Esperanto: Vomemo
español: Náusea
euskara: Goragale
فارسی: تهوع
français: Nausée
galego: Náusea
Avañe'ẽ: Py'ajere
עברית: בחילה
հայերեն: Սրտխառնոց
Bahasa Indonesia: Mual
Ido: Nauzeo
italiano: Nausea
日本語: 吐き気
한국어: 구역질
Latina: Nausea
lietuvių: Pykinimas
latviešu: Nelabums
മലയാളം: ഓക്കാനം
Bahasa Melayu: Loya
नेपाल भाषा: बुलुबुलु
Nederlands: Misselijkheid
norsk nynorsk: Kvalme
ਪੰਜਾਬੀ: ਕਚਿਆਣ
polski: Nudności
português: Náusea
Runa Simi: Wikch'unayay
română: Greață
русский: Тошнота
sicilianu: Nàusia
srpskohrvatski / српскохрватски: Mučnina
Simple English: Nausea
slovenčina: Nauzea
slovenščina: Slabost
српски / srpski: Мучнина
svenska: Illamående
Kiswahili: Kichefuchefu
Tagalog: Nausea
Türkçe: Bulantı
українська: Нудота
اردو: غثیان
Tiếng Việt: Buồn nôn
ייִדיש: איבל
中文: 恶心
粵語: 反胃