கிருஷ்ணா டாவின்சி

கிருஷ்ணா டாவின்சி
Kirishna Davinci.jpg
பிறப்புவெங்கடகிருஷ்ணன்
மே 7, 1968(1968-05-07)
இறப்புஏப்ரல் 4, 2012(2012-04-04) (அகவை 43)
இறப்பிற்கான
காரணம்
எலிக்காய்ச்சல்
மற்ற பெயர்கள்அகிலன் சித்தார்த், வால்பையன், கின்ஸி
அறியப்படுவதுஇதழாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
ஜெயராணி
பிள்ளைகள்நேயா

வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.

சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.

Other Languages