காவ்ரீலோ பிரின்சிப்

காவ்ரீலோ பிரின்சிப்
Gavrilloprincip.jpg
டெரெசின் சிறையில் காவ்ரீலோ பிரின்சிப்
பிறப்புசூலை 25, 1894(1894-07-25)
ஓப்லயாய், போசுனியா எர்சகோவினா (1878-1918), ஆஸ்திரியா-அங்கேரி
இறப்பு28 ஏப்ரல் 1918(1918-04-28) (அகவை 23)
டெரெசின், பொஃகீமியா, ஆஸ்திரியா-அங்கேரி
தேசியம்யூகோசுலாவியர்
இனம்செர்பியர்

காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip) (செர்பிய மொழி: Гаврило Принцип; சூலை 25, 1894(1894-07-25) [1] – 28 ஏப்ரல் 1918(1918-04-28)) ஓர் போசுனிய செர்பியர். இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர்.[2] சாரயேவோவில் 28 சூன், 1914ஆம் ஆண்டு ஆத்திரிய நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவி சோபியும் காரில் சென்ற போது தமது கூட்டாளி சுடத்தவறுகையில் பிரின்சிப் சுட்டுக் கொன்றார்.[3] பிரின்சிப்பும் அவன் கூட்டாளியும் கைது செய்யப்பட்டபோது இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. [4] இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின. [5]

குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.[6]

இளமைக் காலம்

காவ்ரீலோ பிரின்சிப் அப்போது சட்டப்படி உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்த பொசாங்கோ கிரகோவோவில் ஓப்லயாய் என்ற கண்காணா சிற்றூரில் பிறந்தார். ஆனால் இந்த மாநிலம் 1878ஆம் ஆண்டிலிருந்தே ஆத்திரிய-அங்கேரியால் ஆக்கிரமிக்கப்பட்டு நடைமுறைப்படி அதன் கூட்டாட்சி மாநிலமாக ஆளப்பட்டு வந்தது. பிரின்சிப்பின் தந்தை, பேட்டர், அஞ்சல்துறையில் பணி புரிந்து வந்தார். இவருக்கும் மனைவி மாரியாவிற்கும் ஒன்பது பிள்ளைகள்; இவர்களில் அறுவர் பிறக்கையிலேயே இறந்தனர். பிரின்சிப்பை கவனிக்க இயலாத பெற்றோர் அவரை பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரான சாரயேவோவிலுள்ள அண்ணன் வீட்டிற்கு அனுப்பினர்.

அக்டோபர் 6, 1908 இல் பொசுனியா-எர்செகோவினா, 1878இல் ஏற்பட்ட பெர்லின் உடன்பாட்டிற்கு எதிராக, ஆஸ்த்திரோ-அங்கேரிய பேரரசின் அங்கமாக மன்னர் பிரான்சு யோசஃப்பால் அறிவிக்கப்பட்டது. இது செர்பியர்களிடையேயும் தெற்கு ஐரோப்பாவிலிருந்த பிற இசுலாவிய மக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியது; உருசிய சார் மன்னரும் இதனை எதிர்த்தார்.

இதற்கு எதிராக சாரயோவோவில் பெப்ரவரி 1912இல் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் பிரின்சிப் கலந்து கொண்டார். இதனால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை யடுத்து செர்பியத் தலைநகரான பெல்கிறேட்டிற்கு சென்றார். 1912 - 1913 காலத்தில் பெல்கிறேட்டில் இருந்தபோது பின்னாளில் புகழ்பெற்ற கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிய மோம்சிலோ நஸ்டாசியெவிச்சுடன் மட்டுமே நட்பு கொண்டிருந்தார்.

1912இல் பல செர்பியர்கள் முதலாம் பால்கன் போருக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ஒற்றுமை அல்லது சாவு (Ujedinjenje ili Smrt)என்ற கருப்புக் கை இரகசிய இயக்கத்தின் செர்பிய கரந்தடிப் படையான கோமைட்டில் சேர பிரின்சிப் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரின்சிப்பை அவரது சிறு உருவத்தைக் காரணமாக்கி கோமைட் சேர்த்துக் கொள்ளவில்லை. தெற்கு செர்பியாவில் பிரோகுப்ல்யே என்றவிடத்தில் அதன் தலைவருடன் நேர்முகம் வேண்டினார். ஆனால் அவரும் பிரின்சிப்பை ஏற்கவில்லை. இந்த ஏமாற்றமே பின்னாளில் செயற்கரிய செயல் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு தான் எவ்விதத்திலும் தாழ்ந்தவனில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வேட்கையை உண்டாக்கியதாக விளாடிமிர் டெட்யெர் என்பார் கூறுகிறார்.

Other Languages
aragonés: Gavrilo Princip
asturianu: Gavrilo Princip
azərbaycanca: Qavrilo Prinsip
башҡортса: Гаврило Принцип
žemaitėška: Gavrils Princips
беларуская: Гаўрыла Прынцып
беларуская (тарашкевіца)‎: Гаўрыла Прынцып
български: Гаврило Принцип
brezhoneg: Gavrilo Princip
bosanski: Gavrilo Princip
čeština: Gavrilo Princip
Esperanto: Gavrilo Princip
español: Gavrilo Princip
føroyskt: Gavrilo Princip
français: Gavrilo Princip
Gàidhlig: Gavrilo Princip
hrvatski: Gavrilo Princip
Bahasa Indonesia: Gavrilo Princip
íslenska: Gavrilo Princip
italiano: Gavrilo Princip
Basa Jawa: Gavrilo Princip
latviešu: Gavrilo Princips
Malagasy: Gavrilo Princip
македонски: Гаврило Принцип
Bahasa Melayu: Gavrilo Princip
Nederlands: Gavrilo Princip
norsk nynorsk: Gavrilo Princip
português: Gavrilo Princip
română: Gavrilo Princip
sicilianu: Gavrilo Princip
srpskohrvatski / српскохрватски: Gavrilo Princip
Simple English: Gavrilo Princip
slovenčina: Gavrilo Princip
slovenščina: Gavrilo Princip
српски / srpski: Гаврило Принцип
Türkçe: Gavrilo Princip
українська: Гаврило Принцип
Tiếng Việt: Gavrilo Princip
Bân-lâm-gú: Gavrilo Princip