கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு

1: carbon-14 உருவாக்கம்
2: carbon-14 சிதைவு
3: உயிருடனுள்ள உயிரினங்களுக்கு சமன்குறி; உயிரற்றவைக்கு சமனின்மைக் குறி.

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அல்லது கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு (Carbon dating, Radiocarbon dating) என்பது, இயற்கையில் காணப்படும், கரிமம்-14 என்னும் கரிமத்தின்ஓரிடத்தானைப் (சமதானி) பயன்படுத்திக் கரிமம் (கார்பன்) கலந்த பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறை ஆகும். இம் முறையைப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான பொருட்களின் வயதை அறிந்துகொள்ள முடியும்.[1] பொதுவாக இதன் மூலம் கணிக்கப்படும் வயது, தற்காலத்துக்கு முந்திய (Before Present (BP)) கதிரியக்கக்கரிம ஆண்டுகளில் தரப்படுகின்றது. இங்கே தற்காலம் என்பது கி.பி. 1950 என வரையறுக்கப் பட்டுள்ளது. மேற்படி வயதை, வழமையான நாட்காட்டி ஆண்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நுட்பம், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி என்பவராலும் அவரது உடன்பணியாளர்களினாலும் 1949 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2] மாற்றீடு செய்யப்படக்கூடிய கரிமம்-14 (14
C
) இன் சீரான கதிரியக்கச் செறிவு (steady state radioactivity concentration), ஒரு கிராம் கரிமத்தில், ஒரு நிமிடத்துக்கு 14 அழிவுகளாக இருக்கும் எனக் கணிப்பிட்டார். 1960 ஆம் ஆண்டில், கரிமம்-14 (14C) காலக் கணிப்பு முறைக்காக லிப்பிக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நுட்ப மேம்பாடும் பயன்பாடும்

குரோனிங்கென் பல்கலைக்கழகத்தைச் (University of Groningen) சேர்ந்த ஹெசெல் டி விரீஸ் (Hessel de Vries) என்பார் கண்டுபிடிக்கும் முறைகளையும் பல்வேறு துறைகளில் அதன் பயன்பாட்டையும் மேலும் முன்னெடுத்துச் சென்றார்.

Other Languages
Bahasa Indonesia: Penanggalan radiokarbon
Nederlands: C14-datering
norsk nynorsk: Radiokarbondatering
srpskohrvatski / српскохрватски: Radiokarbonsko datiranje
Simple English: Radiocarbon dating