கண்ணதாசன்

கண்ணதாசன்

பிறப்புமுத்தையா
சூன் 24, 1927(1927-06-24)
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
இறப்புஅக்டோபர் 17, 1981(1981-10-17) (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர்காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில்கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம்தமிழர்
நாட்டுரிமைஇந்தியர்
எழுதிய காலம்1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்)பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள்15

கண்ணதாசன் (ஜூன் 24 1927அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

Other Languages
English: Kannadasan
galego: Kannadasan
हिन्दी: कन्नदासन
മലയാളം: കണ്ണദാസൻ
मराठी: कन्नदासन
ਪੰਜਾਬੀ: ਕੰਦਾਸਨ
polski: Kannadasan
తెలుగు: కన్నదాసన్