கடற்பசு
English: Manatee

கடல் பசு
புதைப்படிவ காலம்:50–0 Ma Early Eocene - Recent
Manatee.jpg
மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் கடல் பசு
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கு
தொகுதி:முதுகுநாணி
வகுப்பு:பாலூட்டி
உள்வகுப்பு:Eutheria
பெருவரிசை:Afrotheria
வரிசை:Sirenia
Illiger., 1811
Families

Dugongidae
Trichechidae
†Prorastomidae
†Protosirenidae

கடல் பசு (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது கடலில் மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களைத்தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும். மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால் சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது. 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.

இது நீர்நிலைகளில் உள்ள தாவங்களை மட்டுமே தின்று வாழ்பவை. நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும். [1]

கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு ஆகும். கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம். கடல் பசு இறைச்சிக்காகவும், தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட். அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். [2] கடல் பசு பார்ப்பதற்கு டால்பின்கள் போல் இருந்தாலும் இவற்றிற்கு முதுகுத்துடுப்பு இல்லை, இதனால் இது தண்ணிருக்கு வெளியே தாவும் திறன் அற்றுள்ளது.

மேற்கோகள்

  1. தினத்தந்தி, 30-3-2018, சிறுவர் தங்கமலர், பக்கம் 6
  2. ஓரம்: கடலுக்குள் மேயும் பசு!தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2016
Other Languages
Afrikaans: Lamantyn
Alemannisch: Manati
Ænglisc: Sǣcū
العربية: خروف البحر
azərbaycanca: Lamantinlər
беларуская: Ламанціны
беларуская (тарашкевіца)‎: Лямантыны
български: Ламантини
brezhoneg: Ejen-mor
català: Manatí
Cebuano: Trichechus
čeština: Kapustňák
Cymraeg: Morfuwch
dansk: Manater
Ελληνικά: Μανάτος
English: Manatee
Esperanto: Manato
español: Trichechus
euskara: Trichechus
suomi: Manaatit
français: Lamantin
Frysk: Lamantinen
Gaeilge: Bó mhara
galego: Manatí
עברית: תחש נהרות
हिन्दी: मैनाटी
hrvatski: Lamantini
magyar: Trichechus
հայերեն: Լամանտիններ
Bahasa Indonesia: Lembu laut
íslenska: Sækýr
italiano: Trichechus
日本語: マナティー
la .lojban.: trixexo
Jawa: Manatee
қазақша: Ламантиндер
한국어: 매너티
Latina: Manatus
Lëtzebuergesch: Ronnschwanzséikéi
Lingua Franca Nova: Manati
lietuvių: Lamantinai
latviešu: Lamantīni
Bahasa Melayu: Manati
Malti: Lamantin
Nāhuatl: Tlacamichin
Napulitano: Lamantino
Nederlands: Lamantijnen
norsk nynorsk: Manatar
norsk: Manater
occitan: Trichechidae
polski: Manatowate
پنجابی: سمندری گاں
português: Peixe-boi
Runa Simi: Manati
română: Lamantin
русский: Ламантины
sicilianu: Lamantinu
Scots: Manatee
srpskohrvatski / српскохрватски: Lamantini
Simple English: Manatee
slovenčina: Lamantínovité
shqip: Lamantina
српски / srpski: Ламантини
svenska: Manater
Tagalog: Manati
Türkçe: Manatigiller
татарча/tatarça: Lamantin
українська: Ламантинові
oʻzbekcha/ўзбекча: Lamantinlar
Tiếng Việt: Lợn biển
Winaray: Trichechus
吴语: 海牛
中文: 海牛屬
Bân-lâm-gú: Hái-gû
粵語: 海牛