ஒத்தியங்கு முடுக்கி
English: Synchrotron

சின்குரோத்திரனின் வரைபடம்
1949 ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ரிச்சர்ட் கிரேன் வடிவமைத்த 300 MeV உலகின் முதல் எதிர் மின்னி சின்குரோத்திரன்.

ஒத்தியங்கு முடுக்கி அல்லது சின்குரோத்திரன் (synchrotron) என்பது துகள் முடுக்கியின் ஒரு வகையாகும். சுழற்சியலைவியிலிருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முடுக்கப்படும் துகள்கள் நிலையான வட்டப்பாதையில் சுற்றுப்பாதையில் சுழலுகின்றன. துகள்கள் நகரும் பாதையில் காந்தப் புலம் வைக்கப்பட்டுள்ளது. துகள்களின் இயக்க ஆற்றலுக்கு ஏற்றாற் போல் காந்த்ப் புலம் அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் துகள்கள் தொடர்ந்து முடுக்கப்படுகின்றன.[1].

மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட துகள் முடுக்கிகளில் ஒத்தியங்கு முடுக்கி முதன்மையானது. துகள்களை வளைப்பது, குவிப்பது, முடுக்குவது ஆகியவை தனித் தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. நவீன துகள் முடுக்கிகள் அனைத்தும் ஒத்தியங்கு முடுக்கியின் அமைப்பிலிருந்து பெறப்படுகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் செனீவாவிற்கு அருகில் 2008 ல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த 27 கி.மீ நீளமுள்ள ஒத்தியங்கு முடுக்கி வகை துகள் முடுக்கி உலகின் மிகப் பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும். இந்த துகள் முடுக்கியில் நேர்மின்னிகள் 6.5  டெரா இலத்திரன்வோல்ட் (TeV). ஆற்றல் வரை முடுக்கப்படுகின்றன.

1944 ஆம் ஆண்டு ஒத்தியங்கு முடுக்கி தத்துவத்தை விலாடிமிர் வெக்சுலர் கண்டறிந்தார்.[2] 1945 ஆம் ஆண்டு முதல் எதிர்மின்னி சின்குரோத்திரனை எட்வின் மேக்மிலன் வடிவமைத்தார்.[3][4][5] 1952 ஆம் ஆண்டு மார்க் ஒலிபண்ட் உலகின் முதல் நேர் மின்னி ஒத்தியங்கு முடுக்கியினை வடிவமைத்தார்.[4][6]

Other Languages
asturianu: Sincrotrón
беларуская: Сінхратрон
català: Sincrotró
čeština: Synchrotron
Deutsch: Synchrotron
Ελληνικά: Σύγχροτρο
English: Synchrotron
español: Sincrotrón
euskara: Sinkrotroi
فارسی: سنکروترون
français: Synchrotron
Gaeilge: Sincreatrón
hrvatski: Sinkrotron
magyar: Szinkrotron
Bahasa Indonesia: Sinkrotron
italiano: Sincrotrone
Кыргызча: Синхротрон
lietuvių: Sinchrotronas
Nederlands: Synchrotron
norsk nynorsk: Synkrotron
polski: Synchrotron
português: Síncrotron
română: Sincrotron
русский: Синхротрон
русиньскый: Сінхротрон
srpskohrvatski / српскохрватски: Sinkrotron
Simple English: Synchrotron
српски / srpski: Sinhrotron
Türkçe: Senkrotron
українська: Синхротрон