ஐரோப்பிய எக்சு - கதிர் கட்டுறா எலத்திரான் சீரொளி

ஐரோப்பிய X-கதிர் கட்டுறா எலத்திரான் சீரொளி GmbH
வகைஅடிப்படை ஆய்வு
தலைமையகம்ஆம்பர்கு
இணையத்தளம்www.xfel.eu
ஐரோப்பிய XFEL திட்டத்தில் பங்கு பெற்றுள்ள அனைத்து நாடுகளும் அடர் கரு ஊதா நிறத்தில் எடுப்பாய் காட்டப்பட்டுள்ளன.

ஐரோப்பாவின்  X - கதிர் கட்டுறா எலத்திரான் சீரொளி (European X-ray free-electron laser (European XFEL) என்பது 2017 ஆம் ஆண்டில் நிலைப்பெற்ற ஒரு  எக்சு-கதிர் ஆய்வு சீரொளி ஆகும். இந்த புதிய வகை சீரொளியானது மே 2017 இல் முதன் முதலாக உற்பத்தி செய்யப்பட்டது.[1][2] இத்தகு வசதிமிக்க சீரொளியானது பயனர் செயல்பாட்டுக்கு செப்டம்பர் 2017 முதல் வந்துள்ளது.[3] கீழே குறிக்கப்பட்டுள்ள 11 நாடுகள் (டென்மார்க்பிரான்சு, ஜெர்மனி, அங்கேரி, இத்தாலி, போலந்து, உருசியா, சிலோவாக்கியா, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம்) பங்கேற்கும் இந்த சர்வதேச அளவிலான திட்டமானது ஜெர்மனி நாட்டில் ஆம்பர்க் மற்றும் இச்லெசுவிக்-ஓல்ஸ்டின் என்ற இடத்தில் அமைந்துள்ளது.[4][5][6] ஒரு கட்டுறா எலத்திரான் சீரொளியானது எலத்திரான்களை சார்பியல் வேகங்களுக்கு முடுக்கி விடுவதன் மூலமும், சிறப்பு காந்தவியல் அமைப்புகளின் வழியாக ஊடுருவச் செய்வதன் மூலமாகவும், உயர்-அடர்த்தி கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சுசை உற்பத்தியாக்குகிறது. ஐரோப்பிய எலத்திரான்கள் ஒத்திசைவின் மூலமாக X- கதிர் ஒளியை உற்பத்தி செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் லேசர் ஒளியின் பண்புகளைக் கொண்ட உயர்-அடர்வு X- கதிர் துடிப்புகளை வளைவிக்கின்றன. இவை வழக்கமான சின்க்ரோட்ரோன் ஒளி மூலங்களால் தயாரிக்கப்பட்டதை விட மிகவும் பிரகாசமாக இருக்கும்.