ஐபிஎம்

இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்பொரேஷன்
வகைபொது
நிறுவுகைஎன்டிகொட்ட், நியூ யார்க்
ஜூன் 16, 1911
நிறுவனர்(கள்)தாமஸ் ஜே. வாட்சன்
தலைமையகம்அர்மொன்க், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முக்கிய நபர்கள்சாமுவெல் ஜ. பால்மிசானொ
தொழில்துறைகணினி தொழில்நுட்பம்
வருமானம்Green Arrow Up Darker.svg US$ 99.870 billion (2010)[1]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg US$ 19.273 billion (2010)[1]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg US$ 14.833 billion (2010)[1]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg US$ 113.452 billion (2010)[1]
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svg US$ 23.172 billion (2010)[1]
பணியாளர்426,751 (2010)[1]
இணையத்தளம்IBM.com

ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது.அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது.

  1. 1வது தலைவர்களுக்கான நிறுவனம் (பார்ச்சூன் இதழ்)
  2. 1வது உலக அளவில் பசுமை(சுற்றுசூழல் மாசுபாடுகளை குறைந்த அளவில் வெளியிடுதல்)நிறுவனம் (நியூஸ் வீக்)
  3. 2வது உலக அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் (இன்டர்பிராண்ட்)
  4. 2வது மிகப்பெரிய மதிப்பு மிக்க நிறுவனம் (போரோன்)
  5. 5வது ரசிக்கப்பட்ட நிறுவனம்(பார்ச்சூன் இதழ்)
  6. 18வது புதுமையான நிறுவனம் (பாஸ்ட் கம்பெனி)

ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள்பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை.

Other Languages
Afrikaans: IBM
العربية: آي بي إم
asturianu: IBM
azərbaycanca: IBM
تۆرکجه: آی‌بی‌ام
башҡортса: IBM
беларуская: IBM
беларуская (тарашкевіца)‎: IBM
български: IBM
বাংলা: আইবিএম
bosanski: IBM
català: IBM
کوردی: ئای بی ئێم
čeština: IBM
Чӑвашла: IBM
dansk: IBM
Deutsch: IBM
Ελληνικά: IBM
English: IBM
Esperanto: IBM
español: IBM
eesti: IBM
euskara: IBM
فارسی: آی‌بی‌ام
suomi: IBM
français: IBM
Gaeilge: IBM
galego: IBM
עברית: IBM
हिन्दी: आईबीएम
hrvatski: IBM
magyar: IBM
հայերեն: IBM
Bahasa Indonesia: IBM
Interlingue: IBM
Ido: IBM
íslenska: IBM
italiano: IBM
日本語: IBM
ქართული: IBM
Qaraqalpaqsha: IBM
Gĩkũyũ: IBM
한국어: IBM
kurdî: IBM
Кыргызча: IBM
Lëtzebuergesch: IBM
lietuvių: IBM
latviešu: IBM
मैथिली: आइबिएम
Malagasy: IBM
македонски: ИБМ
മലയാളം: ഐ.ബി.എം.
монгол: IBM
मराठी: आय.बी.एम.
Bahasa Melayu: IBM
नेपाली: आइबिएम
Nederlands: IBM
norsk nynorsk: IBM
norsk: IBM
occitan: IBM
ଓଡ଼ିଆ: ଆଇ.ବି.ଏମ.
ਪੰਜਾਬੀ: ਆਈ.ਬੀ.ਐਮ
polski: IBM
Piemontèis: IBM
português: IBM
română: IBM
русский: IBM
саха тыла: IBM
Scots: IBM
srpskohrvatski / српскохрватски: IBM
සිංහල: IBM
Simple English: IBM
slovenčina: IBM
slovenščina: IBM
shqip: IBM
српски / srpski: IBM
svenska: IBM
Kiswahili: IBM
тоҷикӣ: IBM
Tagalog: IBM
Türkçe: IBM
татарча/tatarça: IBM
українська: IBM
oʻzbekcha/ўзбекча: IBM
Tiếng Việt: IBM
Winaray: IBM
ייִדיש: איי.בי.עם.
中文: IBM
Bân-lâm-gú: IBM
粵語: IBM