ஏப்பம்

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
ஏப்பம் Eructation
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ICD- 10 14.
ICD- 9 787.3
ஏப்பம்

ஏப்பம் (belching) அல்லது ஏவறை [1] என்பது செரிமானப் பாதையிலிருந்து (பெரும்பாலும் இரைப்பை மற்றும் உணவுக் குழாயிலிருந்து) வாய் வழியாக காற்று வெளியேறுவது ஆகும். இது பெரும்பாலும் தனக்கே உரித்தான ஓசையுடன் வெளிப்படும். சில நேரங்களில் குறிப்பிட்ட மணத்துடனும் வெளிப்படும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொது இடங்களில் சத்தமாய் ஏப்பம் விடுவது மரியாதைக்குரிய செயலன்று. இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் ஏப்பம் விடுவதென்பது வயிராற உணவுண்டதைக் குறிக்கும் நல்ல அறிகுறியாக பன்னெடுங்காலமாய்க் கருதப்படுகிறது.

உண்டாகும் விதம்

(பார்க்க: முதன்மைக் கட்டுரை- வளி விழுங்கல்)

ஏப்பம் வளி விழுங்கலினால் (aerophagy) உண்டாகிறது. பொதுவாக மனிதர்கள் உண்ணும் போது சிறிதளவு காற்றையும் சேர்த்துத் தான் இரைப்பைக்குள் விழுங்குகிறோம். ஆனால் அவசர அவசரமாக உண்ணும் போதும் பேசிக்கொண்டே உண்ணும் போதும் இன்னும் அதிக காற்று உட்செல்லும். கார்பானிக் அமிலம் (H2CO3) கலந்த பானங்களான சோடா, பீர் முதலியவற்றை அருந்தும் போது கார்பானிக் அமிலம் நீராகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் (C02) பிரியும். இந்த கார்பன் டை ஆக்சைடு வாய் வழியாக ஏப்பமாக வெளியேறும். இரைப்பை அமிலச் சுரப்பு நோய் (acid peptic disease) போன்ற செரிமான மண்டல நோய்களின் அறிகுறியாகவும் ஏப்பம் இருக்கலாம். ஏப்பம் விடும் போது ஏற்படும் ஒலிக்கு காரணம் கீழ் உணவுக்குழாய்ச் சுருக்கு தசைகள் (lower esophageal sphincter) அதிர்வடைவது ஆகும்.

Other Languages
Afrikaans: Winde opbreek
العربية: تجشؤ
беларуская: Адрыжка
català: Eructe
čeština: Říhání
dansk: Bøvs
Deutsch: Rülpsen
Ελληνικά: Ρέψιμο
emiliàn e rumagnòl: Rùdeg
English: Burping
Esperanto: Rukto
español: Eructo
eesti: Röhitised
فارسی: آروغ‌زدن
français: Éructation
Gàidhlig: Brùchd
עברית: גיהוק
Հայերեն: Գխտոց
Bahasa Indonesia: Sendawa
italiano: Eruttazione
日本語: げっぷ
한국어: 트림
lietuvių: Raugulys
latviešu: Atraugas
മലയാളം: ഏമ്പക്കം
Nedersaksies: Kölken
Nederlands: Boer (geluid)
polski: Odbijanie
português: Arroto
Runa Simi: Khasay
română: Eructație
русский: Отрыжка
srpskohrvatski / српскохрватски: Podrigivanje
Simple English: Belching
српски / srpski: Подригивање
svenska: Rapning
తెలుగు: తేనుపు
тоҷикӣ: Оруғ задан
Tagalog: Dighay
українська: Відрижка
oʻzbekcha/ўзбекча: Kekirik
中文: 嗝氣
Bân-lâm-gú: Phah-eh
粵語: 啹氣