எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்

எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்
A Song of Ice and Fire book collection box set cover.jpg
A Song of Ice and Fire book collection box set cover
 • எ கேம் ஆஃப் த்ரோன்ஸ் (1996)
 • எ கிளாஷ் ஆஃப் கிங்ஸ் (1998)
 • எ ஸ்டார்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ் (2000)
 • எ ஃபீஸ்ட் ஃபார் க்ரோஸ் (2005)
 • எ டான்ஸ் வித் டிராகன்ஸ் (2011)
 • தி வின்ட்ஸ் ஆஃப் வின்டர் (forthcoming)
 • எ ட்ரீம் ஆஃப் ஸ்பிரிங் (forthcoming)
ஆசிரியர்ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைகனவுருப் புனைவு
வெளியீட்டாளர்கள்
 • பான்டம் புக்ஸ் (ஐக்கிய அமெரிக்கா, கனடா)
 • வொயெஜர் புக்ஸ் (ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா)
வெளியீடுAugust 1996–present
ஊடக வகைPrint (hardback & paperback)
audiobook

எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (A Song of Ice and Fire) என்பது அமெரிக்க கனவுருப் புனைவு, அறிபுனை எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் என்பவரால் எழுதப்பட்டுவரும் தொடர் கனவுருப் புனைவுப் புதினங்களாகும். இத்தொடரின் முதல் புத்தகமான எ கேம் ஆஃப் த்ரோன்ஸ் (A Game of Thrones) 1991-ல் முடிக்கப்பெற்று 1996-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் மூன்று புத்தகங்கள் கொண்ட தொடர்புதினமாக எழுத எத்தனித்திருந்த மார்ட்டின் அவர்கள் தற்போது உத்தேசிக்கப்பட்டிருக்கும் ஏழு புத்தகங்களுள் ஐந்தினை வெளியிட்டிருக்கிறார். ஐந்தாவது புத்தகமான எ டான்ஸ் வித் டிராகன்ஸ் (A Dance with Dragons) 2011-ல் வெளியிடப்பட்டது; இப்புத்தகம் எழுத ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். ஆறாவது புத்தகமான தி வின்ட்ஸ் ஆஃப் வின்டர் (The Winds of Winter) புத்தகத்தை இன்றளவும் எழுதிவருகிறார்.

ஏப்ரல் 2015 நிலவரப்படி இப்புத்தகங்கள் உலகளவில் 6 கோடிப் பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளன[1]; மேலும், சனவரி 2017 நிலவரப்படி 47 மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது.[2][3] இதனைத் தழுவி அமெரிக்காவின் எச்பிஓ தொலைக்காட்சி நிறுவனத்தால் பலத்த வரவேற்பு பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்) எடுக்கப்பட்டுவருகிறது.

பகுதிகள்

ஏழுபகுதிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 • எ கேம் ஆஃப் த்ரோன்ஸ் (A Game of Thrones) - ஆகஸ்ட் 1996
 • எ கிளாஷ் ஆஃப் கிங்ஸ் (A Clash of Kings) - பெப்ரவரி 1999
 • எ ஸ்டார்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ் (A Storm of Swords) - நவம்பர் 2000
 • எ ஃபீஸ்ட் ஃபார் க்ரோஸ் (A Feast for Crows) - நவம்பர் 2005
 • எ டான்ஸ் வித் டிராகன்ஸ் (A Dance with Dragons) - சூலை 2011
 • தி வின்ட்ஸ் ஆஃப் வின்டர் (The Winds of Winter) - வெளியிடப்படவில்லை
 • எ ட்ரீம் ஆஃப் ஸ்பிரிங் (A Dream of Spring) - வெளியிடப்படவில்லை
Other Languages
беларуская: Песня Лёду і Агню
беларуская (тарашкевіца)‎: Сьпеў лёду і агню
français: Le Trône de fer
Bahasa Indonesia: A Song of Ice and Fire
日本語: 氷と炎の歌
Кыргызча: Муз жана от ыры
srpskohrvatski / српскохрватски: A Song of Ice and Fire
Simple English: A Song of Ice and Fire
slovenščina: Pesem ledu in ognja
српски / srpski: Песма леда и ватре
Tiếng Việt: A Song of Ice and Fire
Bân-lâm-gú: A Song of Ice and Fire