எஸ்தர்
English: Esther

மன்னன் அகஸ்வேர் முன்செல்ல எஸ்தருக்கு ஒப்பனை செய்யப்படுகிறது (எஸ் 2:15-18). ஓவியர்: ஏட்வின் லாங். ஆண்டு: 1878. காப்பிடம்: விக்டோரியா தேசிய படக்காட்சியகம், மெல்பேர்ண்.

எஸ்தர் (Esther, /iconˈɛstər/; எபிரேயம்: אֶסְתֵּר‎), இயற்பெயர் அதசா (Hadassah), என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார். விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார். எஸ்தரின் கதை பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் அடைப்படையாக அமைந்துள்ளது.

எஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்

இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின்[1] குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.

யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

Other Languages
العربية: أستير
беларуская (тарашкевіца)‎: Эстэр
brezhoneg: Ester
bosanski: Estera
català: Ester
Cymraeg: Esther
Zazaki: Ester
English: Esther
español: Ester (Biblia)
eesti: Ester
suomi: Ester
français: Esther (Bible)
עברית: אסתר
Bahasa Indonesia: Ester (tokoh Alkitab)
lietuvių: Estera
Malti: Ester
Nederlands: Ester (Bijbel)
norsk nynorsk: Estér
پنجابی: آستر
português: Ester
română: Estera
русский: Есфирь
Scots: Esther
Tagalog: Ester
Türkçe: Ester (İncil)
українська: Есфір
اردو: آستر
Tiếng Việt: Esther
ייִדיש: אסתר
中文: 以斯帖