எலும்பு

தொடை எலும்பின் வரைபடம்

எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதி அணுக்கள், வெண்குருதி அணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன. இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.

நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.

அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும் [1]. எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.

என்பின் கட்டமைப்பு

எலும்பின் கட்டமைப்பு
தொடையென்பின் மேலென்பு முளைத் தட்டு. வெளியே மேற்பட்டையாக நெருக்கமான என்பிழையமும், உள்ளே கடற்பங்சு என்பிழையமும் உள்ளது
என்பின் நுணுக்குக்காட்டிப் படம்

என்பை ஆக்குவதில் இரு வகையான என்பிழையங்கள் பங்கெடுக்கின்றன. நெருக்கமான என்பிழையம் என்பின் வெளிப்புறமாகவும், கடற்பஞ்சு என்பிழையம் மேலென்பு முளையின் உட்புறமும் அமைந்து காணப்படும். என்பின் நடுத்துண்டம் வெறுமையானதாக அல்லது என்பு மச்சையைக் கொண்டதாக இருக்கலாம். செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. என்பு ஒரு உயிருள்ள தொடுப்பிழைய வகையைச் சார்ந்த ஒரு அங்கமாகும். இவ்விழையங்களைத் தவிர கசியிழையம், குருதிக் கலன்களும் என்பின் கட்டமைப்பை ஆக்குவதில் பங்கெடுக்கின்றன. எலும்பின் வடிவம் அதன் உறுதித்தன்மைக்கும் மீள்தன்மைக்கும் காரணமாக அமைகின்றது. எலும்பு மையப்பகுதியின் என்பு மச்சை போன்ற மென்மையான பாகம் இல்லாமல் முழுமையாக செங்கல் போல நெருக்கமான என்பிழையத்தால் ஆக்கப்பட்டிருந்தால் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் எலும்பு இலகுவில் உடைந்து விடும். நடுவில் மென்மையாக இருப்பதால் அதிக அழுத்தத்துக்கு சிறிது வளைந்து கொடுக்கக்கூடியதாக உள்ளது. எனினும் எலும்பு கசியிழையம் போன்று அதிகளவு மீள்தன்மையானதல்ல. மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால் எலும்பு உடைந்து விடும்.

நெருக்கமான என்பிழையம்

நெருக்கமான என்பொன்றின் ஆவேசின் தொகுதிகள்

நெருக்கமான என்பிழையத்தில் கல்சியம் பொஸ்பேற்றுத் தாயம் அடர்த்தியாக இருக்கும். இது எலும்பின் திண்வின் 80%ஐ உள்ளடக்கிய பகுதியாகும். என்பின் தாங்கும் தொழிலைப் புரியும் பிரதான பாகம் இதுவாகும். என்புக்கு இப்பாகம் வன்மையையும் உறுதியையும் வழங்குகின்றது. இதில் கல்சியம் பொசுபேற்றுக்கிடையே என்பரும்பர்க் கலங்களும் குருதிக் கலன்களும், கொலாஜின் நார்களும் உள்ளன. தொடர்ச்சியாக அதிக அழுத்தத்துக்கு உட்படும் போது (உதாரணமாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது) இவ்விழையம் தடிப்படைந்து என்பின் பலத்தை அதிகரிக்கும். இதனாலேயே விண்வெளிக்குச் செல்லுவோர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவென்பதால் என்புகளிலுள்ள அழுத்தம் குறைவடையும். இதனால் என்பிலுள்ள என்புடைக்கும் கலங்கள் தொழிற்பட்டு என்பை நலிவடையச் செய்யும் (என்பின் தேவை விண்வெளியில் இல்லாமையால்). எனவே உடற்பயிற்சி செய்யாமல் விண்வெளியில் தங்கிய பின் பூமிக்குத் திரும்புவோரின் என்புகள் உடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து நெருக்கமான என்பிழையத்தின் தடிப்பைப் பேண இவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நெருக்கமான என்பிழையத்தினுள் குருதிக்கலன், நீணநீர்க்கலன், நரம்பு ஆகியவற்றின் போக்குவரத்திற்காக அதனுள் ஆவேசின் கால்வாய், வோக்மனின் கால்வாய் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இக்கால்வாய்களூடாகவே எலும்புக்கும் உடலின் மற்றைய பாகங்களுக்குமான தொடர்பு பேணப்படுகின்றது. ஆவேசின் கால்வாயைச் சூழ வட்ட வடிவங்களின் என்பு மென்றட்டுக்களில் என்புக் குழியங்கள் அடுக்கப்பட்டிருக்கும். என்புக்குழியங்கள் உள்ள கலனிடைக் குழிகள், சிறுகுழாய்கள் மூலம் ஒன்றிடனொன்றாகவும் ஆவேசின் கால்வாயுடனும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆவேசின் கால்வாயைச் சூழவுள்ள வட்ட வடிவமான மென்றட்டுத் தொகுதிகளைக் கூட்டாகச் சேர்த்து ஆவேசின் தொகுதி என அழைப்பர். இதனை ஒளி நுணுக்குக் காட்டியின் உதவியுடன் அவதானிக்கலாம். பல ஆவேசின் தொகுதிகள் இணைந்தே ஒரு நெருக்கமான என்பிழையத்தை ஆக்குகின்றன.

கடற்பஞ்சு என்பிழையம்

கடற்பஞ்சு என்பிழையம் நெருக்கமற்ற ஆக்கக்கூறில் நெருக்கமான என்பிழையத்தை ஒத்த என்பிழையமாகும். இவ்விழையத்தில் அதிக துளைகள் உள்ளன. இவ்விழையம் மேலென்பு முளையின் உட்பகுதியில் உள்ளது. இதன் அதிகமான துளைகளை குருதிக் கலன்களும் செவ்வென்பு மச்சையும் நிரப்பி உள்ளன. என்பின் நடுத்துண்டத்தின் மையத்தில் இவ்விழையத்துக்குப் பதிலாக என்பு மச்சையே காணப்படும். கடற்பஞ்சு என்பைச் சூழ அதிகளவில் குருதிக் கலன்கள் காணப்பட்டாலும், கடற்பஞ்சென்பை ஆக்கும் சிறிய புன்சலாகைகளினுள் குருதிக்கலன்கள் ஊடுருவுவதில்லை.

Other Languages
Afrikaans: Been
Alemannisch: Knochen
አማርኛ: አጥንት
Ænglisc: Bān
العربية: عظم
ܐܪܡܝܐ: ܓܪܡܐ
asturianu: Güesu
Aymar aru: Ch'aka
azərbaycanca: Sümük
Boarisch: Boana
беларуская: Косць
беларуская (тарашкевіца)‎: Косьць
български: Кост
বাংলা: হাড়
brezhoneg: Askorn
bosanski: Kost
català: Os
Mìng-dĕ̤ng-ngṳ̄: Gáuk-gáuk
کوردی: ئێسک
corsu: Ossu
čeština: Kost
Чӑвашла: Шăмă
Cymraeg: Asgwrn
Deutsch: Knochen
Zazaki: Este
Ελληνικά: Οστό
English: Bone
Esperanto: Osto
español: Hueso
eesti: Luu
euskara: Hezur
فارسی: استخوان
suomi: Luu
français: Os
Gaeilge: Cnámh
Gàidhlig: Cnàmh
galego: Óso
Avañe'ẽ: Kangue
עברית: עצם
हिन्दी: अस्थि
hrvatski: Kost
Kreyòl ayisyen: Zo
magyar: Csont
Հայերեն: Ոսկոր
interlingua: Osso
Bahasa Indonesia: Tulang
Ido: Osto
íslenska: Bein
italiano: Osso
日本語:
Basa Jawa: Balung
ქართული: ძვალი
Kabɩyɛ: Mɔɔyɛ
қазақша: Сүйек
ಕನ್ನಡ: ಮೂಳೆ
한국어:
Kurdî: Hestî
Ladino: Gueso
лакку: ТтаркI
Limburgs: Knaok
lumbaart: Òs
lingála: Mokúwa
lietuvių: Kaulas
latviešu: Kauls
олык марий: Лу
македонски: Коска
മലയാളം: അസ്ഥി
монгол: Яс
मराठी: अस्थि
Bahasa Melayu: Tulang
မြန်မာဘာသာ: အရိုး
مازِرونی: استکا
Nāhuatl: Omitl
नेपाल भाषा: क्वँय्
Nederlands: Bot (anatomie)
norsk nynorsk: Knokkel
occitan: Òs
ଓଡ଼ିଆ: ହାଡ଼
ਪੰਜਾਬੀ: ਹੱਡੀ
Pangasinan: Pokel
polski: Kość
پنجابی: ہڈی
português: Osso
Runa Simi: Tullu
română: Os (anatomie)
armãneashti: Osu
русский: Кость
संस्कृतम्: अस्थि
Scots: Bane
srpskohrvatski / српскохрватски: Kosti
Simple English: Bone
slovenčina: Kosť
slovenščina: Kost
Soomaaliga: Laf
српски / srpski: Кост
Basa Sunda: Tulang
svenska: Ben (skelett)
Kiswahili: Mfupa
తెలుగు: ఎముక
тоҷикӣ: Устухон
Setswana: Lerapo
Türkçe: Kemik doku
українська: Кістка
اردو: ہڈی
oʻzbekcha/ўзбекча: Suyak
Tiếng Việt: Xương
walon: Oxhea
Winaray: Bukog
მარგალური: ყვილი
Yorùbá: Egungun
Vahcuengh: Ndok
中文: 骨骼
Bân-lâm-gú: Kut
粵語: